வியாழன், 9 பிப்ரவரி, 2017

கருவுற்ற செவிலியர் உயிரிழப்பு: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள், பணியாளர்கள் போராட்டம்




டில்லி, பிப்.9 டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் மருத்துவர் களின் கவனக்குறைவின் காரண மாக  உயிரிழந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை யில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் செவிலியராவார். கர்ப் பிணி செவிலியர் உயிரிழந் ததையடுத்து 300க்கும் மேற் பட்ட செவிலியர்கள் ஒன்றி ணைந்து மருத்துவர்களின் அலட் சியப்போக்கைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஊர்வ லத்தில் பங்கேற்றனர்.

அதன்பின்னர், எயிம்ஸ் மருத்துவமனையில் 5 மருத்து வர்களை எயிம்ஸ் மருத்துவ மனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

5 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பணியிடை நீக்க அறிவிப்பை திரும்பப் பெறுமாறும் வலி யுறுத்தியுள்ளது.

மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் எயிம்ஸ் மருத்துவ மனை இயக்குநருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், ராஜ்பிர் கவுர் எனும் கர்ப்பிணிப் பெண்ணான செவிலியருக்கு, குழந்தைப்பேறுக்காக அறுவை சிகிச்சை செய்திட மருத்துவர் கள் முடிவெடுத்தனர். அதிலும் சிக்கல் ஏற்பட்டது.

அறுவையின்போது, அப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற் பட்டதால் நிலைமை மேலும் சிக்கலானது.

இதையெல்லாம் கவனத் தில் கொள்ளாமல், மருத்துவ மனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள் ளது என்று மருத்துவர் சங்கத் தின் மூத்த அலுவலர் குறிப் பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தில் குறிப் பிடும்போது, “மருத்துவர் சங்கம் இச்செயலை மிகவும் கடுமையாகக் கண்டிப்பதுடன், பணியிடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மருத்துவர்கள் தங்கள் கட மையை ஆற்றுவதை நிறுத்திக் கொண்டால், அனைத்து நோயாளிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும். உடனடியாக  உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

செவிலியர்களுக்கான சங் கத்தைச் சேர்ந்த சுக்லால் ஜாட் கூறும்போது, ராஜ்பிர் கவுர் இயல்பாக மகப்பேறுக்காக 16.1.2017 அன்று மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். சிகிச் சையின்போது, குழந்தை உயிரிழந்தது. தொடர்ச்சியாக கவுர் உயிருக்குப் போராடினார். 4.2.2017 அன்று உயிரிழந்தார்.

குழந்தை உயிரிழந்தபோதே செவிலியர்கள் சங்கத்தினர் அலட்சியமான மருத்துவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டார் கள் என்று செவிலியர் சங்கத் தின் பிரதிநிதி தெரிவித்தார்.

செவிலியரான ராஜ்பிர் கவுர் மகப்பேறு சிகிச்சையின் போது உயிரிழந்ததை அடுத்து, உடல்பரிசோதனை நடைபெற உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.
-விடுதலை,9.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக