சென்னை, மே 16-_ கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவ தற்கு கருணை அடிப் படையில் பணியில் சேர்ந் தவர்களுக்கு உரிமை உள் ளது என்று உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வி.பாபு என் பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அரசு பணியில் இருந்து என் தந்தை இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வாகன பராமரிப்பு துறையில் கருணை அடிப் படையில் எனக்கு காவ லாளி பணி 2008ஆ-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
நான் பணியில் சேரும் போது, 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று இருந் தேன். எனவே, கல்வி தகு தியின் அடிப்படையில், எனக்கு இளநிலை உதவி யாளர் பதவி வழங்கவேண் டும் என்று போக்குவரத்து துறை செயலாளரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை அவர் நிராக ரித்து விட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல, சி.ஆர். முருகன் என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், என் தந்தை பணியில் இருக்கும் போது மரணமடைந்ததை தொடர்ந்து, வேலூரில் உள்ள அரசு போக்குவ ரத்து பராமரிப்பு பணி மனையில் துப்புரவு பணி யாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப் பட்டது. நான் பணியில் சேரும்போது 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று உள்ளதால், எனக்கு இள நிலை உதவியாளர் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்களையும் விசாரித்த நீதிபதி அரி பரந்தாமன் பிறப்பித்த உத் தரவில் கூறியிருப்பதா வது:_-
மனுதாரர்கள் இருவ ரும் கருணை அடிப்படை யில் பணியில் சேரும் போது, முறையே காவ லாளி, துப்புரவு பணியா ளர் பணிகளை விரும்பி பெற்றதாகவும், இப்போது இளநிலை உதவியாளர் பணி கேட்பதை ஏற்க முடியாது என்று போக்கு வரத்து துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு கூறும் இந்த காரணத்தை ஏற்க முடியாது. விருப்பத்தின் அடிப்படையில் காவலா ளியாகவும், துப்புரவு தொழிலாளியாகவும் பணி யில் சேர்ந்து இருந்தாலும், கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் பணி பெற மனுதாரர்க ளுக்கு தகுதியும், உரிமை யும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங் கள் காலியாக இருக்கும் போது, மனுதாரர்களை அப் பதவிக்கு நியமிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
-விடுதலை,16.5.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக