அகவிலைப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகவிலைப்படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மார்ச், 2024

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ‘மேலும் ஒரு மாத அகவிலைப்படி’ உயர்வு

 Published March 7, 2024,விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 7 பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலு வையில் உள்ள மேலும் ஒரு மாத அகவி லைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதி யர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஅய்டியு, ஏஅய் டியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, அய்என்டியுசி, டிடி எஸ்எஃப், உள் ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த தாக்கீடு வழங்கியிருந்தன.

இதுதொடர்பாக நடந்த பலகட்ட சமரசப் பேச்சு வார்த்தை களில் உடன்பாடு ஏற்படாததை யடுத்து ஜன.9, 10ஆ-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத் தம் கைவிடப்பட் டது. இதற்கி டையே, சென்னை தேனாம்பேட்டையில், தொழி லாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னி லையில் 7-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடை பெற்றது.

செய்தியாளர்களிடம் சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறும்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவித் துள் ளனர். அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்றவர்களுக் கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீ லனையில் இருப்ப தாக தெரிவித்தனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை.

எத்தனை காலத்துக்குதான் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருப் பார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியானால் நடத்தை விதி களை காரணம் காட்டி எதை யுமே வழங்க முடியாத நிலை ஏற்படும். புதிதாக எந்த முன் னேற்றமும் இல்லை. இடைக் கால நிவாரணத்தை யாவது ஒரு வாரத்துக்குள்ளாக அறி விக்க வேண்டும் என வலி யுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.497 கட்ட வேண்டிய இடத்தில் ரூ.1,112 செலுத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. இது ஓய்வூதியர்களை வஞ் சிக்கக் கூடிய செயல் என்றார்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, முதன்மை கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இல்லா விட்டால் இடைக்கால நிவா ரணம் ரூ.5 ஆயிரமும், ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர் வும் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

11-ஆம் தேதிக்குள் முடிவு சொல்லவில்லையெனில், எங் களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவோம். ஓய்வு பெற்ற வர்களுக்கான பணப்பலன் வழங்குவதற்காக நிதி திரட் டப்படுவதாக தெரிவித்துள் ளனர் என்றார்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

 Published October 26, 2023, விடுதலை நாளேடு,

சென்னை, அக். 26 – அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப் படும் என தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய் வூதியதாரர்கள் பயன்பெறுவார் கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற் றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக் கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல் பட்டு வருகின்றது.

அவ்வகையில், அரசு அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உட னுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அக விலைப்படி உயர்வை செயல்படுத் தப்படும் என்று ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற் போது 42 சதவீதமாக உள்ள அக விலைப்படியை 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட் டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யதாரர்கள் பயன்பெறுவார்கள். 

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஜூன், 2023

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

 

1

சென்னை, மே 17- தமிழ்நாட்டில் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங் களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வரு வாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப் புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, தற்போது 38 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.  இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.  இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். 

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர் வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அக விலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.