ஊதிய உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊதிய உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 மே, 2023

மின் ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

  

 12

சென்னை, மே 11 மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

தமிழ்நாடு  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 10.5.2023 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கின்றன. அதேபோல, 1.12.2019ஆம் நாளன்று, பத்து ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலு வலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இது நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை, 2019ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை 31.3.2022 வரை,மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாகவும், 1.4.2022 முதல் 31.5.2023 வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை இரண்டு தவணை களாக வழங்கவும் முடிவு செய்ததை, நிர்வாகமும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், கூடுதலாக ரூ.623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும். இந்த ஊதிய உயர்வு மூலம் பயன் பெறக்கூடிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978. 10  ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிப் பலனாக 3 சதவீதம் பெறும் பணியா ளர்களின் எண்ணிக்கை, 62,548. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

வியாழன், 26 மே, 2022

100 நாள் வேலை உறுதித் திட்ட தினக்கூலியில் மாற்றம்: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி


21  மாநிலங்கள்யூனியன் பிரதேசங் களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 10 மாநிலங் களுக்கு மட்டுமே 5சதவீதத்திற்கும் அதிக மான உயர்வு கிடைத்துள்ளதுஇவை ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

2022-2023 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

34 மாநிலங்களில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத் திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றனமணிப்பூர்மிசோரம்திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற் கொள்ளவில்லைஇந்த புதிய ஊதியம் ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில்அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதுஅதாவது, 2021-2022இல் தினக்கூலியாக ரூ.294 இருந்த நிலையில், 2022-2023க்கு 315ஆக உயர்ந்துள்ளதுகுறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகலாயாவுக்கு கிடைத்து உள்ளதுஅங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளதுமேகாலயாவைத் தவிரஅருணாச்சலப் பிரதேசம்நாகாலாந்து  ஆகிய இரண்டு மாநிலங்களும் தினக்கூலி ஊதியம் 2 சதவீதத்திற்கும் குறைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன.

அசாம்தமிழ்நாடுபுதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதுமகாராட்டிராஒடிசாதாத்ராநாகர் ஹவேலிடாமன் மற்றும் டையூவில் 3 முதல் 4% வரையும்குஜராத்உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட்ராஜஸ் தான்மேற்கு வங்கம்சிக்கிம்ஹிமாச்சல பிரதேசம்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்பஞ்சாப்ஆந்திராதெலங்கானா ஆகிய மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் வரையும் ஊதிய உயர்வை பெற்றுள்ளன.

அரியானாசத்தீஸ்கர்மத்தியப் பிர தேசம்பீகார்ஜார்கண்ட்ஜம்மு & காஷ்மீர்லட்சத்தீவுகேரளாகருநாடகா மற்றும் கோவா ஆகிய 10 மாநிலங்கள் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.  அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங் கள் ஒரு நாளைக்கு ரூ. 4 முதல் ரூ. 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

MGNREGA ஊதிய விகிதங்கள் சிறிமி-கிலி (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்மாற்றங்களின்படி நிர்ணயிக் கப்படுகின்றனஇது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக் கிறதுபுதிய ஊதிய விகிதங்களின்படிஅய்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் அதிக  NREGS ஊதியம் பெறுவதில் முதலிடத்தில் அரியானா (தினக்கூலி 331 ரூபாய்உள்ளதுஇதைத் தொடர்ந்துகோவா (ரூ315), கேரளா (ரூ311), கருநாடகா (ரூ309), அந்தமான் நிக்கோபார் (308) ஆகும்குறைவான ஊதிய உயர்வில் திரிபுரா (தினக்கூலி ரூ212), பிகார் (ரூ210), ஜார்க்கண்ட் (ரூ210), சத்தீஸ்கர் (ரூ204), மத்திய பிரதேசம் (ரூ204) ஆகும்.

உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட் ஆகிய இரண்டுக்கும் ஒரு நாளைக்கு ரூ.213 ஆகவும்அருணாச்சலப் பிரதேசம்சிக்கி முக்கு ரூ.216 ஆகவும்ஒடிசா மற்றும் சிக்கி முக்கு ரூ.222 ஆகவும்மேற்கு வங்கத்தில் ரூ.223 ஆகவும்ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.227 ஆகவும் ஊதிய தொகை உள்ளது.

இதன் படி தமிழ்நாடு அதிக வரி வரு வாயை ஒன்றிய அரசுக்குக் கொடுத்த போதிலும் தொடர்ந்து அனைத்து விதங் களிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறதுதற்போது நூறுநாள் வேலை வாய்ப்பு ஊதியம் வழங்குவதிலும் பார பட்சம் காட்டி நடந்துள்ளதுஎன்பது தெரிய வருகிறது.

சுகாதார துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 13,267 பேருக்கு ஊதிய உயர்வு

 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, மே.23 தமிழ்நாடு சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 13,267 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று  (22.5.2022) செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் ஊதிய உயர்வுக்காக முதலமைச்சரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீத ஊதிய சலுகைகள் அளித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.89 கோடியே 82 லட்சம் கூடுதலாக செலவாகி யுள்ளது.

மற்றவர்களும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி 13,267 பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட் டுள்ளது.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றும் மகளிர், தங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் எங்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் பணி யாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது இல்லை. எனி னும், இந்த கோரிக்கை முதல மைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

மருத்துவத் துறையின் கட்ட மைப்பை மேம்படுத்துவதற்காக, மானியக் கோரிக்கையில் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி, தினமும் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒன்று முதல் 6 வயது குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலகிரியில் தொடங்கி வைத்துள்ளார். ஊட்டச் சத்துக்குறைபாடுகளை போக்க, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் ஈரோடு அரசு மருத்துவமனை, கரூர்அரசு மருத்துவமனை, சென்னைஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 புனர்வாழ்வு மய்யங்களை, ரூ.44 லட்சம் செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல் மற்றும் வாய் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில், தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற் கான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ உப கரணங்களுக்காக ரூ.87 லட்சம் ஒதுக்கப்படும். இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

வாகன தொழிற்சாலை பணியாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்பாடு

சென்னை, செப். 15- இந்திய யமஹா மோட்டார்(IYM)    நிறுவனம் தனது உள்ளக தொழிற்சங்கமான ‘இந்திய யமஹா மோட்டார் தொழி லாளர் சங்கத்துடன்’ நீண்ட கால ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது.
யமஹாவில் உள்ள ஒவ் வொரு தொழிலாளாரும் ஆரோக்கியமான பணிச் சூழலை ஏற்படுத்துவதற்காக IYM
நிர்வாகம் மற்றும் உள் ளக தொழிற்சங்கம் இரண் டினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை உரு வாக்குவதற்கும், ஒரு நல்லு றவைப் பேணுவதற்கும், ஒரு கூட்டு அணுகுமுறையைப் பின் பற்றுவதற்கும் தொடர்ச்சி யான முயற்சிகளின் விளை வாக இந்த ஒப்பந்தம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.
“இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தங்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய தற்காக மாநில அரசு, தொழி லாளர் துறை மற்றும் எங்கள் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது நிறுவனத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும் மற்றும் எங்கள் தொழி லாளர்களின் நம்பிக்கைக் கான ஒரு பெரிய ஊக்குவிப் பாகும்.
யமஹா எப்போதுமே தனது பணியாளர்களுடனான உறவை மதிப்பிடுவதோடு, அவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய் துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறுவனத்திற்குள் ஒரு ஆரோக்கியமான பணிபுரி யும் சூழலை உருவாக்குவதற் கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்க ளின் தலைவரான மோட்டோ ஃபூமிஷிதாரா தெரிவித்து உள்ளார்.
- விடுதலை நாளேடு, 15.9.19