ஓய்வூதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓய்வூதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு

  

 8

சென்னை, ஆக. 5-  தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை சிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப் பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த ஓய்வூதியத் திட்டங்களு டைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமு கப்படுத்தப்பட்டிருக் கிறது.

அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/-_ அன்றைய சூழ்நிலை யில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.புதிய திட்டம்:

இந்த நிலையில் தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு 107 வயது நிறைவடைந்த ஓய் வூதியர் கோபாலகிருஷ்ணன் அவர்களை நேரில் பாராட்டு தெரிவித்தார். 

கு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-.05.-1972 முதல் குடிமை ஓய் வூதியம் பெற்று வருகிறார். 

அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். கி-69690. ஓய்வூ தியர் பிறந்த தேதி 26.10.1916. அவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ் நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர் களில் கு.கோபாலகிருஷ்ணன் அவர்களே வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.

இவர் இரண்டாம் உலகப் போர் (1939_ 1945) நடை பெற்ற காலத்தில் இராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக  Lans Nayak பதவி நிலையில் அய்ந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். 

அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடை பெற்ற போரில் பங்கெடுத் துள்ளார். அன்றைய காலக் கட்டத்தில் அய்ந்து பதக்கங் களையும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஒன்றிய அரசுப் பணியில் சில காலம் சுங்கத் துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலை யம் திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

அவர்களை மரியாதை செய் யும் விதமாக நிதி மற்றும் மனி தவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணை யர் க.விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) ரஞ்சித் சிங், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற் கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து சிறப்பித் தார்கள்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஓய் வூதியதாரர்களை கவுரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூ தியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட் டுள்ளது.

புதன், 1 மார்ச், 2023

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? - அறிக்கை அனுப்ப துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை, மார்ச். 1- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பக் கோரி அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பப்பட்ட சுற்றிக் கையில், " கடந்த 2003ல் இருந்து தற்போது வரை, தமிழ் நாட்டு அரசின் அனைத்து துறைகளின் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற உத்தரவு அளிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்,  அரசாணைகள் வாயிலாகவோ,  அரசு விளக்கங்கள் வாயிலாகவோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் வாயிலாகவோ புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற விருப்பம் கோரும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தது 30 ஆண்டுகள் பணியில் இருந்த அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.  இந்நிலையில், 2002-2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது. இந்த புதிய நடைமுறையின் கீழ், ஒன்றிய அரசில் 01-04-2003 ஆம் நாள் அன்றோ அதற்கு பின்னரே பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த பணியாளர்களின் அடிப் படை ஊதியம், அகவிலை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு அதற்குச் சமமான அளவு பங்குத் தொகையை செலுத்துகிறது. இந்த தொகை பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாக இருக்கும் காரணத்தினால் அரசுப் பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம் செய்யக் கோரும் பணியாளர்கள் விவரங்கள் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.


சனி, 14 ஜனவரி, 2023

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்!

 

முதலமைச்சர் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி! 

சென்னை, நவ.4 பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 31.10.2022 அன்று ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு அவர்   ஆணை களை வழங்கினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கடந்த  25 ஆண்டுகளில், ஒரே நேரத்தில்  அதிகப் படியானோருக்கு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும். இதற்காக சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு, வருமான உச்சவரம்பு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய விண்ணப் பங்களைப் பரிசீலிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்படுவதுடன், ஓய்வுக் காலத்தில் பத்திரிகையாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூ தியம் கோரி விண்ணப்பித்துள்ள பலருடைய விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றையும்  தமிழ்நாடு அரசு பரிசீ லித்து தீர்வு காண வேண்டும் என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர் (தலைவர்), மணிமாறன் (பொதுச் செயலாளர்)  சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ). தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

 

சென்னை, நவ.2- ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-_2022-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக் கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர் களின் குடும்பங்களுக்கு முதல மைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. பத்தி ரிகையாளர் நல நிதியத்துக்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் வட் டியைக் கொண்டு, பத்திரிகையாள ருக்கு நிதியுதவி, கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற் றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.89 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத் துக்கு முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்ட துடன், 20 வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்திரிகை யாளர் நல நிதியத்தில் இருந்து வழங் கப்படும். மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு, எந்த இயலாமைக்கும் ஆளா காமல் இருக்க, அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளி தழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் அடையாளமாக, இதற்கான உத்தரவுகளை 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் வழங்கினார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை பொறுப்பு செயலர் ம.சு.சண்முகம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

செவ்வாய், 8 நவம்பர், 2022

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

 

திருச்சி, நவ. 8- வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தைத் தாமதமின்றிச் சீர மைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என இந்தியன் ஸ்டேட் வங்கியின் மேனாள் தொழிற்சங்கத் தலை வர்கள் கூட்டமைப் பின் (AFCCOM) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.

திருச்சியில் 6.11.2022 அன்று நடைபெற்ற இக் கூட்டமைப்பின் நிர்வா கக் குழு கூட்டத் திற்கு இதன் தலைவர் எஸ்.பி. இராமன் தலைமை வகித் தார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன் முன் னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1986ஆம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண் டுகளாக குறைந்த ஓய்வூ தியத்தில் உடல் நலக் குறைவோடும், விண்ணை முட்டும் விலைவாசியோ டும் அய்ந்து லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஓய்வூதி யர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  அவர்களில் ஓய்வூதிய தைத் தாமதமின்றி சீர மைத்து உயர்த்த இந்திய வங்கிகள் நிர்வாகத்துக் குத் தகுந்த வழிகாட்டு நெறிகளை ஒன்றிய அரசு வழங்க முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியதாரர்கள் பெறும் தொகையை (Commutation Against Anticipatory Pension)  பத்து ஆண்டுகளுக்கு மட் டுமே பிடித்தம் செய்ய வேண்டும்.

கரோனா நோய் தடுப்பு காலத்தில் ரத்து செய்த மூத்த குடிமகக் களுக்கான ரயில் கட்டண பயண சலுகையை மீண் டும் தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்.

நாற்பது ஆண்டு களாக தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழி யர்களை நிரந்தரமாக்கி பணி நிலைமைகளை வரை முறைப்படுத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பினக் கடுகுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விதை உற்பத்திக்கும் வர்த் தக பயன்பாட்டுக்கும் அளித்த அனுமதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று நாட்டு நலனையும் விவசாயிகளையும் காப் பாற்ற முன் வரவேண் டும் என வலியுறுத்தி தீர் மானம் நிறை வேற்றப் பட்டுள்ளன.

இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் இச்சங்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.மூர்த்தி, மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு, மதுரை எம்.முருகையா, திருச்சி என்.சுப்பிரமணியன், எம்.சந்திரா கில்பர்ட், வேலூர் ஆர்.லோகநா தன், கோயம்புத்தூர் எம். ரகுநாதன், திருவாரூர் என்.பாண்டுரங்கன், திருச்சி கே.வாசுதேவன், தஞ்சாவூர் வி.பூமிநாதன், மதுரை பரவை எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்

புதுடில்லி,ஆக.25, பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் முக்கிய முடிவு எடுக்கும் மத்திய அறங்காவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அய்தராபாத்தில் நடைபெற்றது. இதில்  பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் 1995ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பகுதியளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும். இந்த திட்டம் 2009ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் 2009க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் முன்பணம் எடுக்கும் வசதிக்கு ஈபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதிய தொகை  அடுத்த 15 ஆண்டுகளுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும். 15 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அவர்கள் முழு ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 6.3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
- விடுதலை நாளேடு, 25 .8 .19

வெள்ளி, 31 மே, 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருச்சி, மே 15- புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமத மின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வேண்டும் என வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஸ்டேட் வங்கியின் (SBSU) முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் (AFCCOM) கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் சாரதாவில் 12.5.2019 அன்று நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தீர்மானங் களை விளக்கிப் பொதுச் செய லாளர் வி.ஆர்.உதயசங்கர் உரை நிகழ்த்தினார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- இந்தியன் ஸ்டேட் வங்கியின் பென்ஷன் கார்ப்பசில் (Pension Corpus) 69364 கோடி யும், பொதுத்துறை வங்கிகளின் பென்ஷன் கார்ப்பசில் 1,78,000 கோடியும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வங்கி ஓய்வூதியர் களுக்கு பின் தேதியிட்டு ஓய்வூ தியத்தை உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியன் ஸ்டேட் வங்கி உள் ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியிடங்களில்  நிரந்தரப் பணியாளர் களைப் பணியில் அமர்த்தி, தொழிலாளர் நலச்சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்து வதை இந்திய வங்கிகள் நிர்வாக மும், மத்திய அரசும் உறுதிப் படுத்த வேண்டுமென வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமதமின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை நிர்வாக குழு உறுப்பினர் எம்.சந்திரா கில்பர்ட் வரவேற்றார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.கண்ணன், உதவிப்பொரு ளாளர் பி.துரைராஜ், உதவிச்செய லாளர் அடையாறு பாபு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருச்சி என்.சுப்பிரமணியன், மதுரை எம்.முருகையா, திருவண் ணாமலை கே.பி.சாரதி, திருவாரூர் என்.பாண்டுரங்கன் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

-  விடுதலை நாளேடு, 15.5.19

வியாழன், 4 ஏப்ரல், 2019

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை

டில்லி,ஏப்.3, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு உரிய ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000யை உச்சவரம்பாக கொண்டு அதன் அடிப்படையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.  இது தொடர்பான வழக்கில் வெறும் ரூ. 15,000யை அடிப்படை ஊதியமாக கருதாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து  EPFO தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, இனி வரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

அதன்படி இந்த உத்தரவிற்கு முன்பு ஒரு தனியார் நிறுவன ஊழியர் 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி சம்பளமாக ரூ.50,000 பெற்று ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.5,180 பென்சன் கிடைக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்க வழி பிறந்துள்ளது. அதே போல ஒரு நபர் தன்னுடைய கடைசி சம்பளமாக ரூ.1,00,000 பெற்று இருந்து ரூ.33 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

- விடுதலை நாளேடு, 3.4.19

புதன், 27 பிப்ரவரி, 2019

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம்: பொது சேவை மய்யங்களில் விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி, பிப். 19- மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரத மரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலா ளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட் சம் பொது சேவை மய்யங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத் துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 48 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இத் திட்டத்தில் இணைய தகுதியுடைய வர்கள் ஆவர். அவர்கள் மாதந்தோறும் ஒரு பங்களிப்புத் தொகையை அளித்து வருவதன் மூலமாக, 60 வயதுக்குப் பிறகு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

மொத்தமுள்ள 3.13 லட்சம் பொது சேவை மய்யங்களில் 2.13 லட்சம் மய் யங்கள் கிராமப்புற பஞ்சாயத்துகளில் இயங்குகின்றன. ஒவ்வொரு திட்டத் தையும், அதற்குத் தகுதியான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மய்யங்கள்தான் பெரும் உதவிகரமாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களி லும், வளரும் நகர்ப்புறங்களிலும் மத் திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மய்யங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

ஓய்வூதியத் திட்டத்தில் இணைப வர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். பொது சேவை மய்யங்கள் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கிளைகளுக்கு செல்லாமலேயே, பொது சேவை மய்யங்களில் நேரடியாக வங் கிக் கணக்குகளையும் தொடங்க மு யும்.

அதே சமயம், இனி வரும் காலத் தில், பிரதமரின் ஓய்வூதியத் திட்டத் துக்கான பிரத்யேக இணையதளத்திலும், அது சார்ந்த செல்லிடப்பேசி செயலியி லும், பயனாளர்கள் நேரடியாக தங்களை இணைத்துக் கொள்ளும்படியான வசதி கள் மேம்படுத்தப்படும். ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதில் தெரிவித்து ஓய்வூதியத் திட்டத் தில் இணைந்து கொள்ளலாம் என்றார் அந்த அதிகாரி.

மாதந்தோறும் ரூ.15,000-க்கும் குறை வான ஊதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது.

அதன்படி, இத்திட்டத்தில் இணை யும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர் மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண் டும். 29 வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். 40 வயது தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்த வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு பங்களிப்பை அளிக்கும் தொழி லாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந் தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக கிடைக் கும்.

- விடுதலை நாளேடு, 19.2.19

திங்கள், 12 நவம்பர், 2018

அரசு ஓய்வூதியதாரர்கள் 70,000 பேர் கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் திட்டத்துக்கு மாற்றம்

சென்னை, நவ.12  பொதுத்துறை வங்கித் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருவூலக்கணக்கு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களின் சிலர் பொதுத்துறை வங்கி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அந்த ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களது நலன் காக்கும் பொருட்டும் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70,000 தமிழக அரசின் ஓய்வூதியர்கள் தமிழக அரசின் ஆணைப்படி இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத் துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூ லங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை அலுவலகங்களில் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பொதுத்துறை வங்கித் திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர். தற்போது அந்த ஓய்வூதியர்கள் அனைத்து பதிவேடு களும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான  தங்களது வாழ்நாள் சான்றினை, தங்கள் ஓய்வூதியம் பராமரிக்கும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள் அல்லது சார் கருவூலங்களில் வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 12.11.18