அரசாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 அக்டோபர், 2026

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணி நாள்களை 150-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 சென்னை, ்அக்.23 ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாள்களை 150-ஆக உயா்த்தியும், இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையின் விவரம்:

ஒன்றிய அரசின் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்க (ஊரகம்) சட்டம், 2025-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களில் ஒரு நிதியாண்டில் 125 நாள்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நிகழாண்டு ஜூலை 1 முதல் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை ஒன்றிய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்குகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே 125 நாள்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2026-2027-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை  நாளேடு, 23.10.26

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அரசு ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு! அரசாணை வெளியீடு

 சென்னை, செப். 4- தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில், முழு ஊதியத்துடன் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையின்போது, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 3ஆவது குழந்தைக்கான 12 வார மகப்பேறு விடுப்பு 365 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையை பெறலாம். இந்த 365 நாட்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும்.

மேலும், மகப்பேறு விடுப்பை மகப்பேறுக்கு முந்தைய ஓய்வு காலம் முதல் மகப்பேறுக்குப் பிந்தைய உடல்நல மீட்பு காலம் வரை, சம்பந்தப்பட்ட பெண் ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு முன்பே 3ஆவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, அந்த விடுப்பை தொடர்ந்து அனுபவித்து வரும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த புதிய சலுகை பொருந்தும். அவர்கள் மொத்தமாக 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 4.9.26

திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்! அரசாணை வெளியீடு!

 சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு (1.4.2004-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (டிஏபிஎஸ்) என்ற புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை, தமிழ்நாடு நிதித் துறைச் செயலர் த. உதயசந்திரன் நேற்று முன்தினம் (10.1.2026) வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாணையின்படி, ஓய்வூதியா்களின் கடைசி மாத ஊதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்றும், ஒன்றாம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான புதிய திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டம் ஜன. 1ஆம் தேதிக்கு முன்பு காலாவதியாகிவிட்டது. ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், 10.1.2026 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தாா். இந்த குழுவின் பரிந்துரை மற்றும் அரசின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு பலன்களைத் தொடா்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு 50 சதவீதத்துக்கு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்துக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரா் இறந்துவிட்டால், அவா் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினா்களுக்கு அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலா்கள் ஓய்வு பெறும்போதும், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும்போதும், அவரவரின் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில் இதற்குப் பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்ந்து, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னா் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவா்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஜன. 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 12.01.25

திங்கள், 21 ஜூலை, 2025

அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு

 


சென்னை, மே 30 அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ஆம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தகுதி காண் பருவ பணிக்காலம்

இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசு பணியில் உள்ள மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கிணங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ பணிக்காலம் கடந்த ஏப்.28-ஆம் தேதி முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஏப்.28-ஆம் தேதிக்கு முன் தகுதிகாண் பருவ பணிக்காலம் முடிந்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.பி.அய். விதிகள்
வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது

அமைச்சர் பெரியகருப்பன்

நகைக்கடன் குறித்த ஆர்.பி.அய். விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆர்பிஅய் விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனக் கூறிய அவர், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு,30.05.2025

வியாழன், 4 மே, 2023

அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை அமைக்க குழு அரசாணை வெளியீடு

 

 சென்னை,ஆக.5- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணை உருவாக்குவதற்கான குழு அமைத்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்றவை கோட்ட அளவில் மாறுபடும். இதை விடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணையை உருவாக்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பும் அளித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து துறை செயலர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை அமைப்பது தொடர்பாக நிர்வாகம்மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு போக்குவரத்து கழக வழக் குரைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழு உறுப்பினர்கள்

இதன் தொடர்ச்சியாக மாநகரபோக்குவரத்து கழகம், விரைவுபோக்குவரத்து கழகம், சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள், மாநகர போக்குவரத்து கழக தலைமை நிதி அலுவலர், கும்பகோணம் போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஆகிய துறைசார் அலுவலர்களும், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை(எல்பிஎப்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (சிஅய்டியு), தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் (டிடிஎஸ்எப்) ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, பொதுவான நிலையா ணையில் அடிப்படை சரத்துகளில் மாற்றம் செய்யாமல், ஒரே மாதிரியான நிலையாணையை தயார் செய்து அளிக் குமாறு அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.