வேலை நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூலை, 2025

10 மணி நேர வேலை: புதிய நெருக்கடி

 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் நாளொன்றுக்கு 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்றி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களை வேலை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, வார துவக்கத்தில் 10 மணி நேரம் வரை வேலை வாங்கினால் அடுத்துவரும் நாட்களில் வேலைநேரம் குறைந்து வார இறுதி நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு கிடைக்கும். அதற்கு அதிகமாக வேலைவாங்குவதென்றால் கூடுதலாக பணியாற்றும் நேர அளவுக்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடைவெளியின்றி அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே வேலை வாங்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரின் வசதிக்காக இந்த மாற்றங்களை செய்வதாக தெலங்கானா அரசு அறிவித்திருப்பது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதமே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்கு 9 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரத்தை 10 மணி நேரமாக கடந்த மாதம் மாற்றியதுடன், பெண் பணியாளர்களை இரவு பணியில் ஈடுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின்தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில்துறையினரின் வசதிக்கேற்ப சட்டத்தை மாற்றும்படி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், மாநிலங்கள் இத்தகைய மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்திலும் கடந்த 2023-ஆம் ஆண்டு 8 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரம் 12 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்பையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பையடுத்து, இச்சட்டத்தை வாபஸ் பெற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம், 12 மணிநேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, எல் அண்டு டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் போன்றோர் வலியுறுத்தியதையடுத்து தொழிலாளர் வேலை நேரம் குறித்து நாடு முழுக்க பெரும் விவாதம் நடந்தது. அவர்களது கோரிக்கையை ஒவ்வொரு மாநிலமாக தற்போது அமல்படுத்த தொடங்கி விட்டன. நாட்டின் வளர்ச்சிக்காகவும், தொழில்துறையினர் கூடுதல் லாபம் ஈட்டுவதற்காகவும் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டதால், மாநில அரசுகளுக்கும் தற்போது நெருக்கடி ஏற்பட்டு வருவதையே நடந்துவரும் மாற்றங்கள் உணர்த்து கின்றன.

அதிகாரமும் பண பலமும் ஒன்றிணைந்து அசுர பலத்துடன் காய்களை நகர்த்தி வருவதால் நாடு முழுவதும் விரைவில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது உறுதியாகிவிட்டது. தொழிலாளர்களை பொறுத்த மட்டில், மாற்றங்களை எதிர்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதுடன் தங்கள் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்வது அவர்கள் கையில்தான் உள்ளது.

– எம்.எஸ்.

நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 7.7.2025

-விடுதலை நாளேடு,7.7.25

புதன், 3 மே, 2023

திராவிடர் கழக தலைவர்ஆசிரியர் கி.வீரமணி உள்பட தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

  

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைப்பு : முதலமைச்சர் அறிவிப்பு

2

சென்னை, ஏப்.25  தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத் துகளின் அடிப்படையில், 12 மணிநேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார். தி.மு.க. எப்போதும் தொழி லாளர் சமுதாய தோழனாக, தொண்ட னாக, காவல்அரணாக விளங்கும் என்பதற்கு, செயல்படுத்திய திட்டங்களே சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த ஏப்.12-ஆம் தேதி தாக்கல் செய்தார். பேர வைக் கூட்ட நிறைவு நாளான கடந்த 

21ஆ-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர் களின்எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நேற்று (24.4.2023) ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), அந்திரிதாஸ் (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), ரவிகுமார் (விசிக) கே.ஏ.எம். அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜவாஹிருல்லா (மமக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோர் நேற்று  (24.4.2023) இரவு நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

தலைவர்கள் வேண்டுகோள் 

அதில், ‘தமிழ்நாட்டில் 100-வது ஆண்டு மே தினத்தை கொண்டாடும் சூழ்நிலையில், இந்த சட்டத்திருத்தம் வந்திருப்பது, மே தின பின்னணியையே நிராகரிப்பதாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினையில் மக்கள் நலன், தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட் டுள்ளதாவது: தமிழ் நாட்டில் பெரும் முதலீ டுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற் படுத்தும் நோக்கிலும், சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்தச் சட்ட மசோதா கடந்த ஏப்.21ஆ-ம் தேதிஅரசால் நிறைவேற்றப் பட்டது.

தொழிலாளர் நலனை பாதுகாக்கும் பல் வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் 24-ஆம் தேதி (நேற்று) ஆலோசனை நடத்தினர்.சட்டத்தில் உள்ள விதிகள் குறித்தும், மசோதாவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்கு வரத்து வசதி உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலை களுக்கு மட்டுமே நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் அரசின் பரி சீலனைக்கு பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழலிலும், தொழி லாளர் நலனில் சமரசம் செய்யப் படாது என்றும் அமைச்சர்கள் எடுத்துக் கூறினர். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப் புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண் டுள்ளது என்றும் எடுத்துக் கூறினர். இக்கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இந்த மசோதாவை நடைமுறைப்படுத் தினால் தொழி லாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்கள்கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம், தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. தொழில் முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் அதே நேரம், தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பேணுவதும் அரசின் நோக்கமாகும்.

நாட்டில் தொழிற்சாலைகள் பெருக, அங்கு தொழில் அமைதி மிகவும் அவசியம். தொழி லாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. 

திமுக எப்போதும் தொழிலாளர் களின் சமுதாய தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக விளங்கும் என்பதற்கு, செயல் படுத்திய திட்டங்களே சான்று.கடந்த 2 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் நிலவும் தொழிற்சூழல் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்திய பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீ டுகள் செய்து, அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெற்று வரு கின்றனர்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்பு

இந்த அரசு ஒரு சட்ட மசோ தாவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ, அதுகுறித்து மக்களிடம் மாற்றுக் கருத்துகள் வந்தால், அதை ஆராய்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட மசோதா மீதுபல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தொழிற் சாலைகள் சட்டத் திருத்த மசோதா மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

இவ் வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புக்கு தொமுச, அய்என் டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளன.

8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டது!

  

மே 7 இல் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் பாராட்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

8 மணி வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்திய மசோதா திரும்பப் பெறப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தொழிலாளர் பணி நேரத்தை - சில தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம் என்று சட்ட மன்றத்தில் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் விடுத்த வேண்டு கோளை ஏற்று, நமது முதலமைச்சர் அதை நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவித்தார்.

மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்தினோம்!

அதனை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது, அதையே திரும்பப் பெற்று ரத்து செய்ய வேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்திக் கோரிக்கை வைத்தோம்.

அதனை இன்று (1.5.2023) நமது முதலமைச்சர் ஏற்று, மே நாள் கொண்டாட்டத்திற்கு முழு மகிழ்ச்சி அனைத்துத் தொழிலாளருக்கும் ஏற்படும் வகையில் அம்மசோதாவைத் திரும்பப் பெற்றதாக  - ரத்து செய்த தாக அறிவித்திருப்பதற்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு - வாழ்த்து - நன்றியைத் தொலைபேசியில் உடனடியாகத் தெரிவித்தோம். 

முதலமைச்சரும் நன்றி தெரிவித்தார்.  

திராவிடர் கழகத் தொழிலாளரணி 

மாநில மாநாட்டில் முதலமைச்சருக்குப் 

பாராட்டு விழா!

வருகிற 7 ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் முதலமைச் சருக்குப் பாராட்டு விழாவும் இணைத்து நடத்திடுவோம் என்று அவர்களிடமே மகிழ்ச்சியோடு தெரிவித்தோம்.

உண்மையான மக்களாட்சி தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்' ஆட்சியாகவே நடைபெறுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டும் இது!

இது தொழிலாளருக்கு அளித்த  ஆக்கப்பூர்வ பரிசு - இவ்வாண்டு!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.5.2023 

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

 

 தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

aaa

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (21.4.2023) அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி யிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று (21.4.2023) சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு

இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட வெளிநடப்பு செய்துள்ளன.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ் நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும்  என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழி லாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப் படும்'' என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் விளக்கம்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் பேசுகையில்,

‘‘வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, அய்ந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக் கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற் சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

1945 இல் பெற்றுத் தந்த உரிமை

நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு.

1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர்  அவர்களின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேர மாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு.

இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

நெகிழ்வுத்தன்மை எங்கிருந்து வந்தது?

இதில் நெகிழ்வுத் தன்மை எங்கிருந்து வந்தது? சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கிய மாகக் கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டாமா?

விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே!

தேவை மறுபரிசீலனை!

எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் ‘திராவிட மாடல்' நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரை - பழியைத் தவிர்க்கவேண்டும்!

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.4.2023 

சனி, 22 ஏப்ரல், 2023

இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டமாம்!

 


Viduthalai December 01, 2022 உலகம்,

லண்டன், டிச. 1- இங்கிலாந் தில் உள்ள 100 நிறுவ னங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத் துக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. இதுகுறித்து "தி கார்டியன்" நாளிதழில் கூறியிருப்பதாவது.

முந்தைய பொருளா தார சூழலில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்து வதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க் கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், முதல் கட்டமாக 100 நிறுவனங் கள் வாரத்துக்கு 4 நாட் கள் மட்டுமே பணிபுரியும் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. சுமார் 2,600 பணியா ளர்கள் பயனடையவுள்ள இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டுள்ளன.

தற்போது நடை முறைப்படுத்தப்பட வுள்ள 4 நாட்கள் வேலை திட்டத்தால் ஊழியர்க ளுக்கான சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது எனவும், முன்பு வழங்கப் பட்ட அதே அளவிலான ஊதியத்தை அவர்கள் பெறலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத் தால் பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படு வதோடு நாட்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என அந்த நிறுவனங்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஆட் டோம் பேங்க் மற்றும் பன்னாட்டுச் சந்தை நிறு வனமான ஏவின் ஆகி யவை இங்கிலாந்தில் உள்ள தங்களது 450 பணி யாளர்களுக்கு வாரத் துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் வேலைத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதில் பெரும்பாலானவை தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்ற சேவை துறை நிறுவனங்களாகும். மேலும், உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களும் இந்த திட்டத்தில் கையெ ழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.