சென்னை, பிப். 3- திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் க.தமிழினியன் பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் அவர் எழு திய தமிழ் தமிழர் தமிழ் நாடுÕ என்ற புத்தகம் வெளி யீட்டு விழா 31.1.2016 அன்று காலை அன்னை மணியம் மையார் அரங்கத்தில் நடை பெற்றது.
எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்து பணிநிறைவின்போது தர ஆய்வாளராக பணியாற்றி யவர் க.தமிழினியன். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தவர் ஆவார்.
விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மாநில தொழி லாளர் அணி துணைத் தலைவர் பெ. செல்வராசு வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் க. பார்வதி முன்னிலை வகித் தார்.
திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள், பணிநிறைவு பெற்ற தமிழினியன் மற்றும் அவர் வாழ் விணையர் சி.விஜயலட்சுமி இருவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டி, சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழினியன் எழுதிய Ôதமிழ்_தமிழர்_தமிழ்நாடுÕ நூலை வெளியிட்டார். போக்குவரத்துத் துறை மேனாள் சார்புச் செயலாளர் சோ.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.
க.தமிழினியன் பணி நிறைவுவிழாவில் அசோக் லேலண்ட் சேமநலநிதி அறங்காவலர் எஸ். உமா காந்தன், அசோக் லேலண்டு தொழிலாளர் சங்க உப தலைவர் முருகப்பிரேமன்-, மேனாள் செயற்குழு உறுப் பினர் சுரேஷ்குமார்-, அசோக் லேலண்ட் தொழிலாளர் நலமன்ற மேனாள் பொரு ளாளர் ராம்குமார், தொழி லாளர் நலமன்ற மேனாள் செயல்முறைத் தலைவர் சண்முகக்கனி-, தொழிலா ளர் நலமன்ற மேனாள் செயலாளர் வெங்கடேஷ் ராஜன், அசோக் லேலண்டு தொழிலாளர் கல்வி ஆசிரி யர் தமிழரசன்-, உரிமைக் குரல் இதழ் ஆசிரியர்குழு கி.சுரேஷ், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக மேனாள் தலைவர் மதிவாணன், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர்கழக மேனாள் செயலாளர் அறி வழகன், கருப்புச்சட்டைக் காரர் ஜம்புலிங்கனார் அவர்களின் மருமகனும் நங்கநல்லூர் திராவிடர் கழகச் செயலாளர் பெ. மோகன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், எழுத்தா ளர் கெஜராஜ், அசோக் லேலண்டு செயற்குழு உறுப் பினர் சதீஷ்குமார், வெற்றி வீரன், பணியாளர்கள் வி.எஸ்.பாண்டியன், உதய குமார், ஜெகன்னாதன் இராஜேந்திரன், இராம சாமி, இராஜ்குமார், லட் சுமி நரசிம்மன். வள்ளுவன், பக்கிரிசாமி உள்ளிட்ட பல ரும் விழாவில் குடும்பத்தின ருடன் பங்கேற்று வாழ்த் துரை ஆற்றினார்கள்.
விழாவில் பங்கேற்ற ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.
அசோக் லேலண்டு தொழி லாளர் நலமன்றத்தின் சார் பில் பி.கிருஷ்ணமூர்த்தி சண்முகக்கனி உள்ளிட்ட நிர்வாகிளும், மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை சார்பில் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், நங்கைநல்லூர் திராவிடர் கழகம் சார்பில் பெ.மோகன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரும் சால்வை அணி வித்தனர்.
அசோக் லேலண்டு தொழி லாளர் நலமன்றத்தின் சார் பில் பி.கிருஷ்ணமூர்த்தி சண்முகக்கனி உள்ளிட்ட நிர்வாகிளும், மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை சார்பில் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், நங்கைநல்லூர் திராவிடர் கழகம் சார்பில் பெ.மோகன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரும் சால்வை அணி வித்தனர்.
திராவிடர் தொழிலா ளர் கழக மேனாள் தலை வர் தி.வ.விசுவநாதன் நன்றி யுரை ஆற்றினார்.
-விடுதலை,3.2.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக