மதுரை, செப்.4_ நில அளவைத்துறையில் பணியின் போது தந்தை இறந்ததால், கருணை அடிப்படையில் வேலை கேட்டு 35 ஆண்டாக போராடியவருக்கு வேலை வழங்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. சிவகங்கை, மணிமேகலை தெருவை சேர்ந்த கார்த்திகேயன் உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு: எனது தந்தை குருசாமி கடலூர் மாவட்ட நில அளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கள உதவியாளராக பணி யாற்றினார்.
பணியில் இருந்தபோது கடந்த 6.1.1979இல் இறந்தார். இதனால் கருணை அடிப் படையில் வேலை கேட்டு எனது தாய் 4.7.1979இல் விண்ணப்பித்தார். இதற்கு நீண்ட காலமாக அதி காரிகள் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தினர். இறுதி யில் என் தந்தையின் பணி, வரன்முறை செய்யப் படாததால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என கூறி என் தாயின் விண்ணப் பத்தை நிராகரித்தனர்.
இதுதொடர்பான வழக்கில், என் தந்தையின் பணியை வரன்முறைப் படுத்த 2009ஆம் ஆண்டு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் எனக்கு பணி கேட்டு விண்ணப்பித்தேன்.
3 ஆண்டிற்குள் தான் பணி கேட்டு விண்ணப்பிக்க முடியும். மிகவும் கால தாமதமாக வந்துள்ளதால் பணி வழங்க முடியாது எனக்கூறி என் மனுவையும் நில அளவைத்துறை இயக் குநர் மற்றும் உதவி இயக்குநர் நிராகரித்தனர். என் தந்தையின் பணியை வரன்முறைப்படுத்தாமல் விட்டது அரசு மற்றும் அதிகாரிகள் தவறு. எனவே, எனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் தாயும் இதே கோரிக்கைக்காக 1979ஆம் ஆண்டே விண்ணப்பித் துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனாலும் அதி காரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த ஒரு காரணத்திற் காகவே மனுதாரருக்கு வேலை கொடுக்கலாம். அவரது இளமைக்காலமே போய் விட்டது. மிகவும் காலதாமதமாக நிராகரித் துள்ளனர். பணி கேட்ட வுடன் நிராகரித்திருந்தால், அவர் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடி இருப்பார்.
அல்லது வேறு வேலைக் காவது சென்றிருப்பார். சரியான நேரத்தில் முடிவு எடுப்பது மிகவும் முக்கியம். சரியான முடிவை உரிய காலத்தில் எடுக்காமல் இருந்தாலும், தவறான முடிவை காலம் தாழ்த்தி எடுத்தாலும் பாதிப்புதான் ஏற்படும்.
அந்த வகையில் மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடி யாது. எனவே இன்னும் காத்திருக்க செய்யாமல் மனுதாரருக்கு 4 வாரத் திற்குள் பணி வழங்க வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு நீதி கிடைத் தாலும், இத்தனை ஆண் டுகள் வழக்கை நடத்தியதே அவருக்கு பெரும் தண்ட னைதான். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரருக்கு வேலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அரசுக்கு சில பரிந் துரைகளை கூறியுள்ளார். அதில், இந்த வழக்கில் அதிகாரிகள் அலட்சியத் துடன் நடந்துள்ளது தெரி கிறது. பொதுமக்களின் எந்த மனுவாக இருந்தா லும், கவனத்துடன் செயல் பட்டு குறையை போக்க வேண்டும். ஊழியர்கள் தனது கடமையை குறிப் பிட்ட காலத்திற்குள் முடிப் பதை கண்காணிக்கும் வகையில் அரசு கொள்கை களை உருவாக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் மெத் தனத்திற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.
அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்படா விட்டால், ஜாதி சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். குறிப் பிட்ட காலத்திற்குள் பணி யை முடித்து கொடுக்க அரசு உத்தரவிட வேண் டும், என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
-விடுதலை,4.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக