செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்கள் சங்கம் (AFCOM) தீர்மானம்

மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் வழங்கும் 
வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த வேண்டும்



தஞ்சாவூர், ஜன. 28- மூத்த குடி மக்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்கள் சங்கம் (AFCOM) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தீர்மானங்கள் வருமாறு:

1. பல்லாண்டுக் காலம் வங்கிப் பணியிலும், அரசுப்பணி யிலும் பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற பின்னர் சொற்ப ஓய்வூதியத்தில் தாங்க முடியாத மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு மற்றவர் களைக் காட்டிலும் ஒரு சதவிகித மும், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு இரண்டு சதவிகிதமும், கூடுதலாக வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு தாமதமின்றி முன்வரவேண்டும்.

2. மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். ஓய்வூதிய மாகப் பெறும் தொகையில் பெரும்பகுதியை வருமான வரியாகச் செலுத்தும் இக்கட்டான சூழலைத் தவிர்க்க ஓய்வூதியர் களுக்கான வருமான வரி உச்ச வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வர இருக்கும் நிதிநிலை அறிக் கையில் அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

3. ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வுக்காலப் பயன்களாகப் பெற்ற பிராவிடண்ட் பண்ட், கிராசுவிட்டி ஆகியவற்றை வைப்புத் தொகையாக வங்கி களில் வைக்கும் போது கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்வதைத் தவிர்த்து வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

4. விலைவாசி உயர்வை ஈடுகட்ட வழங்கப்படும் அக விலைப்படியை  (Dearness Allowence) ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வழங்கும் முறையைத் தவிர்த்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்க அரசு முன்வர வேண்டும்.

5. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த (AFCOM)    அமைப்பின் முதல் பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை ஏற்று மறைந்த  முதல்வர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் நாள் 2016 முதல் சென்னையிலுள்ள ஓய்வூதியர் களுக்கு இலவசப் பேருந்து கட்டணச் சலுகை வழங்கியதற்கு தமிழக அரசை கிதிசிளிவி பாராட்டு கிறது. சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஏற்று தமிழ்நாடு முழுமையும் உள்ள அறுபது வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பேருந்துப் பயணச் சலுகையை எவ்விதக்கட்டுப்பாடுமின்றி வழங்க தமிழக அரசு தாமதமின்றி முன்வரவேண்டும்
தொழில் வரியை 
ரத்து செய்க

6. இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் தமிழ்நாடு உள் ளிட 15 மாநிலங்களில் மட்டும் தான் தொழில்வரி வசூலிக்கப் 
படுகிறது. சிறப்புப் படிப்பும், சிறப்புப் பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள் ஆகியோர் “PROFESSIONAL” என்று அழைக் கப்படுகின்றனர். இந்தக் கருத் துக்கு மாறாகத் துப்புரவுப் பணி யாளர்கள், எழுத்தர்கள், காசாளர் கள், வங்கி அதிகாரிகள் ஆகி யோரிடம் தொழில் வரிபிடித்தம் செய்வது தவிர்க்கப்பட வேண் டும். ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செல் லரித்த நடைமுறையை தமிழக அரசு தாமதமின்றி கைவிட்டு தொழில்வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

7. தமிழகத்திலுள்ள 32 மாவட்டத் தலை நகரங்களிலும் இந்தியன் ஸ்டேட் வங்கியின் சார்பில் வங்கி ஊழியர்களின் நலம் காக்க ‘BANK DISPENSARY”  அமைப்பதோடு, தேவையான மருந்துகளை தங்கு தடை யின்றி வழங்கவும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளைச் செய்து கொள்வதற்கான வசதிகளை ஏற் படுத்தவும் காலதாமதமின்றி முன்வர வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக