உழைப்பவர் உலகு

பக்கங்கள்

  • முகப்பு
  • கோத்ரேஜ் தி.தொ.ச.[GODREJ DWU]
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மே, 2025

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

 

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4

• கே.ஜி. சுப்பிரமணியன்

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946

ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட பின் அந்தத் தொழிற்சங்கமானது அதல் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலையாணைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே பலப் பிரச்சினைகள், குறிப்பாக வேலை நிபந்தனைகள் பற்றி அடிக்கடி இருதரப்பிலும் தொழில் தகராறுகள் ஏற்படும். அப்படிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஆணை சட்டம் பெரிதும் பயன்படுகிறது. பம்பாய் தொழிற் தகராறுகள் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பின்னர் 1943, 1944, 1945-ஆம் ஆண்டுகளில் முத்தரப்பு அமைப்பாகிய இந்தியத் தொழிலாளார் மாநாடுகளில் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு நிலையானைகள் சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

தொழிற்சாலை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு எடுத் துக் கொள்வதற்குரிய நிபந்தனைக ளைத் தெளிவுபடுத்துவதற்கும் ஏற்க னவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தெரி யப்படுத்துவதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2. வேலை நீக்கம், தொழிலாளர்கள் செய்யும் தவறான செயல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இவைகள் பற்றிய விளக்கம்.

3.நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் எல்வா தொழிலாளர்களுக்கும் ஒரு மாதிரி வேலை நிலைகளை உருவாக் குதல்

4. நிர்வாகம் தொழியாளர்கள் இருவர்களின் உரிமைகளையும் பொறுப்புக்களையும் விளக்குதல்,

தொழில் நிறுவனம்

1. 1948-ஆம் ஆண்டின் தொழிற் சட்டத்தின் பிரிவு (ளம்) குறிப்பிட்டுள்ள தொழிற் சாலைகள்,

2. 1800-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே சட்டப் பிரிவு 2(4)கீழ் வருகிற இரயில்வே நிறுவனங்கள்

3. பொது மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

4 சரங்கங்கள், பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள்.

5. உள்துறை நீர்வழிப் போக்கு ரத்துக் கழகங்கள்.

6. துறைமுகங்கள், கப்பல் துறைகள், கப்பல் தங்குமிடங்கள்.

7. மலைத் தோட்டங்கள்.

8. கால்வாய்கள், மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.

9. மின் உற்பத்தி மற்றும் அதைப் பங்கீடு செய்யும் நிறுவனங்கள்.

10. தொழில் நிறுவன உரிமையாள ரிடம் நிறுவனத்தின் வேலையை முடிப்பதற்குத் தேவையாக வேலை யாட்களை வேலைக்குச் சேர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தக்காரரின் நிறுவனங்கள்.

11. 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் பத்திரிகை நிருபர்கள் (லேவை அமைப்பு, நிபந்தனைகள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகள்) சட்டம் செயல்படுத்தப்படும் பத்திரிகை நிறு வனங்கள்.

12: 50 பணியாட்களுக்கும் அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பீடி மற்றும் சுருட்டுத்தொழில் நிறுவனங்களையம் குறிக்கும்

"வேலையளிப்பவர்"  ஒரு தொழிற்சாலையில் உரிமையாளரா கவோ அல்லது முதலாளியாகவோ இருக்கின்றவரையும் அல்லது அரசு நிறுவனங்களைப் பொருத்தவரையில் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரையோ அல்லது அப்படி அலுவலர் இல்லாத இடத்தில் அந்தத்துறையின் தொழில் நிறுவனத்தில் உரிமையாளரின் மேற்பார்வைப் பொறுப்பேற்றுள்ள யரையும் குறிக்கும்.

வேலையாள்: 1. ஒரு தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மேற் பார்வையாளர், எழுத்தர், தொழில் நுட்ப பணியாளர்களும் இச்சட்டத்தின் படி வேவையால் எனப்படுவர் 

2. மாதச் சம்பளம் ரூ.500/- மேல் பெறும் மேற்பார்வையாளர்களும் நிர்வாகிகளும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும், சிவில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அரசு இலாக்காக்களிலும் துறைகளிலும் பாதுகாப்புத் துறைகளிலும் இரயில்வே சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டவர்களும் தொழிலாளாகளாக கருதப்படமாட்டார்கள்.

நிலையாணைகள்: தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிபந்தனைகள் பற்றிய விதிகள் தான் நிலையாணைகள் ஆகும். பணி நிபந்தனைகளின் தன்மை கீழ்க்கணடவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர்களின் வகைகள் நிரந்தரம், தற்காலிகம், வேலை கற்பவர், மாற்றாள் முதலியன

2. வேலைக்காலம் விடுமுறைகள் ஊதிய விகிதங்கள், ஊதியும் வழங்கும் நாட்கள்

3. ஷிட்டு வேலைமுறை

4.வேலைக்கு வருதல், தாமதமாக வருதல்

5. விடுப்பு எடுப்பது நிபந்தனைகள், முறைகள்,

6. ஆலையின் நுழை வாயிலில் வேலைக்குச் செல்லும்போதும் ஆலையிலிருந்து வேலை முடித்து வரும் வழியில் சோதனைகள் செய் தல்,

7. சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்துதல், திறத்தல், இவைகள் 'சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள்.

8. வேலை நீக்கம் - வேலையை விட்டுச் செல்லுதல்

9. தவறான செயல்களுக்கு காரணமான சூழ்நிலை, அதற்கான தண்டனைகள்,

10.தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குப் பரிகாரம்,

11.அரசால் குறிப்பிடக் கூடிய இதர விசயங்கள்.

தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள், அங்கு தொழிற்சங்கம் செயல்பட்டால் அதன் பெயரையும் தெரிவித்து இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக நிர்வாகம் தனது நிறுவனத்திற்கான நிலையாணைகளை தயாரித்து 5 நகல்களை சான்று அளிக்கும் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

சான்று அளிக்கும் முறை

நிர்வாகத்தினரிடமிருந்து பெற்ற 5 நகல்களில் ஒன்றை, அங்கு தொழிற் சங்கம் செயல்பட்டால் அதற்கு அனுப்பி வைப்பார். சங்கம் இல்லையெனில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகல் ஒன்றை சான்றளிக்கும் அதிகாரி அனுப்பிவைப்பார். 15 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். ஏதாவது ஆட்சேபம் இருந்தால் சான்று அளிக்கும் அதிகாரி இருதரப்பினரது கருத்துக்களையும் அறிந்த பின்னர் மாதிரி நிலையாணைகளின் அடிப்படையில் உள்ளதா என அறிந்த பின்னர் தேவையான மாற்றங்களை செய்து நேர்மையான நிபந்தனைகளா மற்றும் நியாயமானதா என்று சீர்தூக்கிப் பார்த்து சான்று அளிப்பார். நிலையாணைகள் சான்றளித்த 7 நாட்களுக்குள் அதன் நகல்களை நிர்வாகம், மற்றும் தொழிற்சங் கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

மேல் முறையீடு:

இத்தகைய சான்று அளித்ததினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் 30 நாட்க ளுக்குள் மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு அதிகாரி சம்பந்தப்பட்ட அரசுகளினால் நியமிக்கப்படலாம். மேல் முறையீடு அதிகாரியின் முடிவு இறுதியானது. அவர் சான்றளிக்கும் அதிகாரியின் உத்தரவை உறு திப்படுத்தியோ அல்லது மாற்றங்கள் செய்தோ உத்தரவு இடுவார். இந்த உத்தரவு செய்த 7 நாட்களுக்குள் சான்று வழங்கும் அதிகாரிக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் மேல் முறையீடு அதிகாரி அனுப்பி வைப்பார்.

மேல் முறையீடு செய்யப்படாவிடில் சான்று அளிக்கும் அதிகாரிகள் உத்தரவு கிடைத்த 30 நாட்கள் முடிவடைந்த பிறகு சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கும். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குப் பிறகு அல்லது உத்தரவின் படி செயல்படத் தொடங்கும்.

சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் நகலை யாரும் நகல் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு அதிகாரியிடமிருந்து பெறலாம்.

நிலையாணைகளில் மாற்றம் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை

சான்று அளிக்கும் அலுவலர் சான்ற ளித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பின் நிறுவனமோ அல்லது தொழிற் சங்கமோ அல்லது ஒரு தொழிலாளியோ மேற்கண்ட சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளில் மாற்றம் செய்ய விரும்பினால், சான்றளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு. சான்றளிக்கும் அலுவலர் ஏற்கனவே முறையாக என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடித்தாரோ அதே முறைகளைக் கடைப்பிடித்து நிலையாணைகளை மாறுதல் செய்யும் நடவடிக்கையில் செயல்படுவார். சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

நிலையாணைகளை நடைமுறைப் படுத்துவதில் நிறுவனத்தினருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.

நிர்வாகத்தின் கடமை: நிலையா ணைகளை ஆங்கிலத்திலும் பெரும் பாலான தொழிலாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் நன்கு தெரியும்படி விளம்பரப் பலகையில் எழுதி அனைத்துத் தொழிலாளர்களும் நுழையும் இடத்தில் நிறுவனத்தினுள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

சான்றளிக்கும் அலுவலர்கள்: சென் னையில் தொழிலாளர் நலத் துணை ஆணையர்கள் 1ஆவது வட்டம் மற்றும் 2-ஆவது வட்டமும், தொழிலாளர் நல துணை ஆணையாளர் திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கப் பதிவாளராகவும் சான்றளிப்பவர்களாகவும் இயங்கி வருகின்றனர்.

தண்டனைகள்: ஒரு நிறுவனமானது' நிலை ஆணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றளிக்கும் அதிகாரிக்கு அனுப்பி சான்றினைப் பெறாவிட்டாலும், சான்று பெற்ற நிலையாணைகளை குறிப்பிட்டபடி விளம்பரப்படுத்தாமல் இருந்தாலும், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அதிகபட்ச தண்டனையாக ரூ.5000/- அய்யாயிரம் வரை அபராதமாக நிர்வாகத்தினர் மேல் விதிக்கலாம்.

- உண்மை இதழ் 16-30-6-1998

இடுகையிட்டது dwu நேரம் 9:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சட்டம், நிலை ஆணைகள், standing order

சனி, 14 டிசம்பர், 2024

மாற்றுத் திறனாளிகள் சட்டம் தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு

 

விடுதலை நாளேடு
Published December 13, 2024
அரசு, தமிழ்நாடு

மதுரை, டிச. 13- தற்காலிக பணியாளர் களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற அமர்வு தெரி வித்துள்ளது.

திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2000இல் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் முருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடந்த 2002இல் தேவகோட்டை – திருச்சி பேருந்தை ஓட்டிச்செல்லும் போது காரைக்குடி பர்மா காலனி அருகே பேருந்து மீது சிலர் கல்வீசினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியதில் ராஜேந்திரனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

மருத்துவச் சான்றிதழ்

அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2005இல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட போது மருத்துவ சான்றிதழ் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி மருத்துவக் குழு முன்பு ஆஜரானபோது கண் பார்வையில் பாதிப்பு இருப்பதால் ராஜேந்திரன் ஓட்டுநர் பணிக்கு தகுதியற்றவர் என சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கத்தை ரத்து செய்யவும், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் தனக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரியும் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை தனி நீதிபதி விசாரித்து, தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் (சம வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு) 1995 பொருந்தும். அதன்படி மனுதாரரை மீண்டும் பணியி்ல் சேர்த்து மாற்றுப் பணி வழங்க வேண்டும் என 6.10.2023இல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், திருச்சி கிளை மேலாளர் ஆகியோர் மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மனுதாரர் தற்காலிக பணியாளர் தான். தற்காலிக பணியாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தாது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.


மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிடுகையில், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995இன் பிரிவு 47இல் பணியிலிருக்கும் போது மாற்றுத் திறனாளியாகும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் ஊதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்படி மனுதாரரரை மீண்டும் பணியில் சேர்த்து மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணியாளர்கள் என்பது தற்காலிக பணியாளர்களையும் உள்ளடக்கியது தான் என உயர் நீதிமன்ற அமர்வு 2017இல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்தக்காரணமும் இல்லை. எனவே மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இடுகையிட்டது dwu நேரம் 7:56 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: உயர்நீதிமன்றம், சட்டம், தற்காலிக பணியாளர், மாற்றுத் திறனாளிகள்

வெள்ளி, 22 ஜூலை, 2022

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை : ஒன்றிய அரசு முடிவு



   June 25, 2022 • Viduthalai

புதுடில்லி, ஜூன் 25  புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கூடுதல் வார விடு முறை, அதிகமான பி.எப். தொகை உள்ளிட்ட பல பலன்கள் தொழி லாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை  அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல மாதங்கள் பரி சீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 முக்கிய திருத்தங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இன் னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை.

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு வாரத் தில் 3 நாட்கள் விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.

தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய் கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அதேபோல் ஊழியர்கள் பெறும் ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை ஊதியம், மொத்த ஊதியத்தில் 50 சதவீதமாக இருக் கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் ஊதியம் குறையலாம்.

அதாவது இதன் மூலமாக பி.எப். திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இத னால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓய் வுக்குப்பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். இதன் மூலம் ஓய் வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

தனது பணிக் காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறு வது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.

ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழி யர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள லாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.

ஆனால் இந்த விதிகள் கட்டாயம் அல்ல. நிறுவனத்திற்கும் ஊழியர் களுக்கும் இடையே நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம். புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறுகிறது.


இடுகையிட்டது dwu நேரம் 12:56 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சட்டம், திருத்தம், விடுமுறை
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திதொக கொடி

திதொக கொடி
திராவிடர் கழக தொழிலாளர் கொடி

உழைப்பாளர் சிலை

உழைப்பாளர் சிலை
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 10 மணி நேர வேலை
  • 100 நாள்
  • 100 நாள் வேலை
  • 100 வயது
  • 100நாள்
  • 20 விழுக்காடு
  • 24 மணி நேரம்
  • 4 நாட்கள் வேலை
  • அகவிலை படி
  • அகவிலைப்படி
  • அங்கன்வாடி பணி
  • அடிப்படை ஊதியம்
  • அதிக ஓய்வூதியம்
  • அபராதம்
  • அமைச்சர்
  • அமைப்புசாரா
  • அமைப்புசாரா தொழிலாளர்
  • அயல்நாட்டு வேலை
  • அயலக தமிழர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு ஊதியம்
  • அரசு ஊழியர்
  • அரசு மருத்துவமனை
  • அரசு வேலை
  • அறநிலையத்துறை
  • அறிக்கை
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் பணி
  • ஆசிரியர்கள்
  • ஆட்டோ சங்கம்
  • ஆணை
  • ஆதார்
  • ஆர்ப்பாட்டம்
  • இஎஸ்அய்
  • இங்கிலாந்து
  • இசைக் கலைஞர்
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்திய ஸ்டேட் வங்கி
  • இரயில்வே
  • இரவு
  • இரவுப்பணி
  • இலா பட்
  • இழப்பீடு
  • இஸ்திரி பெட்டி
  • இஸ்ரேல்
  • உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
  • உச்ச வரம்பு
  • உச்சவரம்பு வயது
  • உட்கார்ந்து பணி
  • உத்தரவு
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உயர்நீதிமன்றம் உத்தரவு
  • உயர்வு
  • உள்ளக புகார் குழு
  • உற்பத்தி
  • உறுப்பினர்
  • ஊதிய உயர்வு
  • ஊதியக்குறைப்பு
  • ஊதியம்
  • ஊதியம் வழங்குதல்
  • ஊரக வேலை
  • ஊரக வேலை உறுதி
  • ஊரக வேலைவாய்ப்பு
  • ஊனமுற்றாலோ
  • எழுத்தர்
  • ஏழை
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்பந்த அடிப்படை
  • ஒப்பந்த ஊழியர்
  • ஒப்பந்த செவிலியர்
  • ஒப்பந்த தொழிலாளர்
  • ஒப்பந்தம்
  • ஒபிசி
  • ஒரு லட்சம் பயனாளிகள்
  • ஒன்றிய அரசு
  • ஓட்டுநர்
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வு ஊதிய ஆணை
  • ஓய்வு பெற்ற தொழிலாளர்
  • ஓய்வு வயது
  • ஓய்வூதிய திட்டம்
  • ஓய்வூதியத் திட்டம்
  • ஓய்வூதியதாரர்
  • ஓய்வூதியம்
  • கட்டணமின்றி காப்பீடு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • கடிதம்
  • கடை கள் மற்றும் நிறுவனங்கள்
  • கடை திறப்பு
  • கடைகள்
  • கடைகள் மற்றும் நிறுவனங்கள்
  • கணக்கெடுப்பு
  • கம்யூனிஸ்ட் கட்சி
  • கருணை அடிப்படை
  • கருணைப் பணி
  • கருத்தரங்கம்
  • கருநாடகா
  • கலந்துரையாடல்
  • காணொலி
  • காலிப்பணியிடங்கள்
  • காவல்
  • கிண்டி தொழிற்பேட்டை
  • கிராமப்புற வேலைத் திட்டம்
  • குடும்ப ஓய்வூதியம்
  • குடும்ப நலன்
  • குடும்பப் பாதுகாப்பு
  • குழந்தை தொழிலாளர்
  • குழு
  • குறைந்த அளவு ஊதியம்
  • குறைந்த வருமானம்
  • குறைந்தபட்ச ஊதியம்
  • குறைந்தளவு ஊதியம்
  • கூலிக்காரர்
  • கேரளா
  • கைத்தறி நெசவாளர்
  • கைது
  • கையேடு
  • கொத்தடிமை
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்ட விதிகள்
  • சட்டத் திருத்தம்
  • சட்டம்
  • சத்துணவு ஊழியர்
  • சந்திப்பு
  • சம ஊதியம்
  • சாதனை
  • சாம்சங்
  • சாம்சங் தொழிலாளர்கள்
  • சான்றிதழ்
  • சிக்கிம்
  • சிறப்பு மிக்க தீர்ப்பு
  • சிறுசேரி
  • சிறுவர்
  • சுகாதாரபணி
  • சுழற்சி அடிப்படையில் பணி
  • சுற்றுச்சூழல்
  • சேமநலநிதி பிஎப்
  • தகுதி காண் பருவ பணிக்காலம்
  • தகுதித் தேர்வு
  • தமிழ்
  • தமிழ் வழி படிப்பு
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அரசு
  • தரவு மய்யம்
  • தற்காலிக பணியாளர்
  • தாம்பரம்
  • திராவிடர் தொழிலாளரணி
  • திருத்தம்
  • தில்லி கடைகள் சட்டம்
  • திறந்தவெளி பல்கலை
  • தினக்கூலி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துபாய்
  • தேசிய அளவில்
  • தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்
  • தேயிலைத் தோட்டம்
  • தேர்தல்
  • தொ.மு.ச.
  • தொ.மு.ச. மாநாடு
  • தொகுப்பூதிய பணி
  • தொடக்கப் பள்ளி
  • தொழில்
  • தொழில் கடன்
  • தொழில் நிறுவனங்கள் மூடல்
  • தொழில் மனைப் பட்டா
  • தொழில் முகவர்
  • தொழில் முனைவோர்
  • தொழில் வளாகம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் கூட்டம்
  • தொழிலாளர் நல நிதியம்
  • தொழிலாளர் நலத் துறை
  • தொழிலாளரணி
  • தொழிலாளி
  • தொழிற்சங்கம்.
  • தொழிற்சாலை
  • தொழிற்சாலைகள் சட்டம்
  • நடவடிக்கை
  • நல வாரியம்
  • நலச் சட்டங்கள்
  • நலத்திட்ட உதவிகள்
  • நலத்துறை
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நாட்டுப்புற கலைஞர்கள்
  • நான் முதல்வன்
  • நான்கு தொழிலாளர் சட்டங்கள்
  • நிதி
  • நிதி ஒதுக்கீடு
  • நிதியுதவி
  • நியமனம்
  • நிரந்தரம்
  • நிலை ஆணைகள்
  • நிலையாணை
  • நிறுவன பதிவுச் சான்றிதழ்
  • நிறுவனம்
  • நீக்கம்
  • நீதிமன்றம்
  • நீதிமன்றம் ஆணை
  • நூல் வெளியீடு
  • நேரம்
  • படிப்பு
  • பணி ஆணை
  • பணி ஓய்வு
  • பணி நியமன ஆணை
  • பணி நியமனம்
  • பணி நிரந்தரம்
  • பணிக்காலம்
  • பணிக்கொடை
  • பணிநீக்கம்
  • பணியிடை நீக்கம்
  • பத்திரிகையாளர்
  • பதவி உயர்வு
  • பதிவு
  • பதிவை புதுப்பித்தல்
  • பயிர்க் கடன்
  • பயிற்சி
  • பயிற்சி வகுப்புகள்
  • பயிற்சிப் பள்ளிகள்
  • பழங்குடியினர்
  • பாகுபாடு
  • பாதிப்பு
  • பாராட்டு
  • பி.எப்.
  • பிஎப் நிதி
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் சங்கம்
  • பின்னலாடை
  • பிஜேபி
  • புகார் குழு
  • புத்தொழில்
  • புதிய இணையதளம்
  • புதுப்பிப்பு
  • புலம் பெயர் தொழிலாளர்
  • புலம்பெயர் தமிழர்
  • புறக்கண்ணிப்பு
  • பெண்
  • பெண் வாரிசுகள்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெருக்குபவர்
  • பெல்
  • பெல் நிறுவனம்
  • பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர
  • பேச்சுவார்த்தை
  • பேதம்
  • பொதுப்பிரிவு
  • பொதுவிடுமுறை
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • போக்குவரத்து
  • போக்குவரத்து ஊழியர்
  • போக்குவரத்து கழகங்கள்
  • போக்குவரத்துக் கழகம்
  • போனஸ்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர் சுய உதவிக் குழு
  • மகளிர் புகார்
  • மத்திய ஆரசு
  • மருத்துவ கல்லூரி
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவத்துறை
  • மாதவிலக்கு விடுப்பு
  • மாநாடு
  • மாநில மாநாட்டு
  • மாநில மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மாற்றுத் திறனாளிகள்
  • மாற்றுத் திறனாளிகள் சட்டம்
  • மின் ஊழியர்
  • மீட்பு
  • மு.சண்முகம்
  • முத்தரசன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முதலாளி
  • முதலீடு
  • முன்னுரிமை
  • மூத்தவர்
  • மே தினம்
  • மே நாள்
  • யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
  • யூனியன் வங்கி
  • ரயில்வே
  • ரேஷன்
  • வங்கி
  • வங்கி தொழிற்சங்கம்
  • வசதிகள்
  • வட்டி
  • வட்டி குறைப்பு
  • வடமாநில தொழிலாளர்
  • வணிகம்
  • வணிகர்
  • வணிகவரி
  • வயது
  • வயது உச்சவரம்பு
  • வரவேற்பாளர்
  • வரி
  • வருங்கால வைப்பு நிதி
  • வருமான வரி
  • வருமானம்
  • வழக்கு
  • வாக்குறுதி
  • வாடகைத் தாய்
  • வாயிற் கூட்டம்
  • வாரியம்
  • வாழ்த்து
  • வாழ்நாள்
  • விடுப்பு
  • விடுமுறை
  • விபத்தில் இறந்தாலோ
  • விபத்தில் உயிரிழப்பு
  • விருப்ப ஓய்வு
  • விலக்கு
  • விளையாட்டு
  • வெகுமதி
  • வெளி மாநிலத் தொழிலாளர்
  • வெளிநாடு
  • வெளிமாநில தொழிலாளர்கள்
  • வெளிமாநிலம்
  • வெளியேற்றம்
  • வேலை
  • வேலை உறுதியளிப்பு
  • வேலை நாள்கள்
  • வேலை நிறுத்தம்
  • வேலை நீக்கம்
  • வேலை நேரம்
  • வேலை வாய்ப்பு
  • வேலை வாய்ப்புகள்
  • வேலைவாய்ப்பு
  • வேலைவாய்ப்புத் திட்டம்
  • வேளாண் துறை
  • வேளாண்மை
  • ஜாக்டோ-ஜியோ
  • standing order

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • தமிழக அரசு ஊழியர்களுக்கு படி உயர்வு: அரசு ஆணை வெளியீடு
    சென்னை, அக். 18- அரசு ஊழியர் களுக்கு மருத்துவப் படி, இடர் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட  படிகளை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இ...
  • நாடாளுமன்றத்தில் போனஸ் மசோதா நிறைவேறியது
    புதுடில்லி, டிச.23-  20 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க போனஸ் சட்டம்-1965...
  • க.தமிழினியன்¢ பணிநிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று வாழ்த்து
    சென்னை, பிப். 3-  திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் க.தமிழினியன் பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் அவர் எழு திய தமிழ் தமிழர் ...
  • போனஸ் வழங்கல் சட்ட திருத்தம்-2016
  • வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
    புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விக...
  • கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
           சென்னை, மே 16-_ கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவ தற்கு கருணை அடிப் படையில் பணியில் சேர்ந் தவர்களுக்கு உரிமை உள் ளது ...
  • மாற்றுத் திறனாளிகள் சட்டம் தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு
    விடுதலை நாளேடு Published December 13, 2024   மதுரை, டிச. 13- தற்காலிக பணியாளர் களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிம...
  • தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை
    - தந்தை பெரியார் தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலி யார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்...
  • தேசிய அடிநிலை குறைந்த அளவு ஊதியம்(NFLMW)மீண்டும் உயர்வு-W.E.F. 01.07.2015
              இந்தியா முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென்று இதைவிட குறைவாக கூலி கொடுக்கக்கூடாது என்று ஒரு தொகையை இந்திய தொழிலாளர் அம...
  • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
      அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல் திருச்சி, டிச,14 – திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில...

Translate

என்னைப் பற்றி

dwu
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (7)
    • ▼  ஜூலை (2)
      • பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் - ஒன்றிய அரச...
      • உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (4)
  • ►  2025 (21)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (5)
  • ►  2024 (37)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (7)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2023 (103)
    • ►  நவம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (29)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (28)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (5)
  • ►  2022 (27)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2021 (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  ஆகஸ்ட் (6)
  • ►  2019 (46)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (5)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (4)
  • ►  2018 (16)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2017 (58)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (21)
  • ►  2016 (43)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (62)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2014 (1)
    • ►  நவம்பர் (1)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.