வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2022

தொழிற்சங்கங்களின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: தொழிலாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

 

சென்னைமார்ச் 29- மத்திய தொழிற்சங்க கூட்ட மைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியதுமுதல்நாளில் தமிழ்நாட்டில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைவங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாதுவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று (28.3.2022) தொடங்கினர்.

ஒன்றியமாநில அரசு ஊழியர் சங்கங்கள்சிஅய்டியுஅய்என்டியுசிஎம்எம் எஸ்ஏஅய்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளனஇதனால்பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் போராட் டத்துக்கு ஆதரவு தெரி வித்திருந்தனபெரும்பாலான தொழிற்சங்கங்கள்அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர்போக்கு வரத்துமின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர் களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது’ என ஒன்றியமாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட நேற்று பொது வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்ததுதமிழ்நாட்டில் 8 அரசு போக்கு வரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றி வருகி றார்கள்அவர்களில் பெரும்பாலான ஓட்டுநர்நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லைஇதனால் தமிழ்நாடு முழு வதும் சுமார் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைஅண்ணா தொழிற்சங்கத் தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவித்து இருந்தனர்ஆனால்நேற்று காலை அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்நடத்துநர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர்இதனால் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டதுஅரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பேருந்துகள் ஓடவில்லை

சென்னையில் 80 சதவீத மாநகர பேருந் துகள் ஓடவில்லைஇதனால்பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர்வேலைக்கு செல்பவர்கள்பள்ளிகல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்ஆட்டோடாக்சிகளில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித் தனர்பலர் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர்சிலர் நடந்தே சென்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழி யர்களும் பங்கேற்றுள்ளதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டதுவங்கி  ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தியாகராய நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வங்கி இணையதள சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டனஏடிஎம் மய்யங் களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப் பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் காரணமாகநாள் ஒன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு கோடி காசோலைகள் என்ற அளவில் 2 நாளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்இந்த போ ராட்டத்தில்பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்க வில்லை.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை மய்ய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் எஸ்.சுந்தர மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்இதேபோலஎல்அய்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் சென்னை பகுதி-1 தலைவர் ஜெயராமன்பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார்சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார்முகவர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சென்னையில் 21 இடங்களில் மறியல்

அண்ணா சாலைஎழும்பூர்சென்ட்ரல் உட்பட சென்னையில் 21 இடங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் உடனே கலைந்து போக செய்ததால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லைஇதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறதுதமிழ் நாட்டில் ரயில்சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துபின்னர் விடுவித்தனர்மாநிலம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்குறிப்பாக 323 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 155 இடங் களில் ஆர்ப் பாட்டமும் 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் 5 இடங்களில் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்ததாக காவல்துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பேருந்துகள் இயக்கப் படாததால் பொது மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர்போராட்டத்தின் வடிவை மாற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்இன்று (29ஆம் தேதி) 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

சனி, 5 ஜனவரி, 2019

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8,9 பொது வேலை நிறுத்தம்: தொழிலாளர்கள் தேசிய மாநாடு அறிக்கை

சென்னை, டிச.30 மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து 2019 ஜனவரி8,9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்ய இந்தியத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறை கூவல் விடுத்தது.

அனைத்துத் தொழிலாளர் களுக்கும் மாதம் ரூ.18,000 க்கு குறையாத சம்பளம், 58 வயதான அனைவருக்கும் 6ஆயிரம் ரூபாய்க்கு குறையாத மாத ஓய்வூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளை ஒழித்தல், தொழிலாளர்சட்டங்களை முத லாளிகளுக்கு சாதகமாக திருத்துவதை கைவிடுதல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பணிக்கொடையை அதிகரித்தல், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்கு விற்பதைநிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறு கிறது.வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர் களை ஆயத்தப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டாக கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதியும், மதுரையில் டிசம்பர்18ஆம் தேதியும் பெரும் திரளான மாநில மாநாடுகளும் நடந்தன.

வேலைநிறுத்தத் கோரிக்கைகளை விளக்கி ஆலைவாயில் கூட்டங்கள், சங்கப் பேரவைகள், தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களும் இரண்டு மாதங் களாக நடந்து வருகின்றன. தொழிற் சாலைகளுக்கு வேலைநிறுத்த முன்னறிவிப்புகள் முறையாகத் தரப்பட் டுள்ளன. பலலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட பணிகளை நிறைவேற்றிய, பங்கெடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களைப் பாராட்டி வாழ்த்து கிறோம். 2019 ஜனவரி 8,9 தேதிகளில் தமிழகத்திலுள்ள பஞ்சாலைகள், பின்ன லாடை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோ, வேன், டாக்ஸி, லாரி, பீடி, சிமெண்ட், சர்க்கரை, இஞ்சினியரிங், சிவில் சப்ளை, மின்சாரம், டாஸ்மாக், காகிதத் தொழிற்சாலைகள், வங்கிகள், காப்பீட்டுநிறுவனங்கள், உள் ளாட்சிகள், மத்திய, மாநில அரசுப்பணிகள் தொலைத் தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெறும்.இதே நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களும், உடலுழைப்புத் தொழி லாளர்களும் வேலைநிறுத்தம் செய்கின் றனர்.

அவர்களின்பங்கெடுப்பை வெளிக் காட்டுவதற்காக ஜனவரி 9ஆம்தேதி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மய்யங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  மறியல் நடைபெறும் நேரம் மற்றும் இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவுசெய்யும்.

இந்த மறியலில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.உள்நாட்டு, வெளிநாட்டுகார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு முகவர்களாகி, இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, தொழிலாளர்களையும் விவசாயி களையும் சீரழிக்கிற மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்கள் வெற்றிபெற அனைத்துப் பொது மக்களும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள் கிறோம்.

- விடுதலை நாளேடு, 30.12.18