ஒன்றிய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்றிய அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.2087 கோடி நிலுவை

 சென்னை, ஆக. 24– மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2087 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2026-2027 நிதியாண் டில் கடந்த ஏப்.1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 29.83 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப் பட்டு, 3.22 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.1804 கோடி செலவிடப் பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் வளர்ச்சி அடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி-ஜி ராம் ஜி) தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் நிதி பங்கீடு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் தனி நபர் தொழி லாளர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,38,314 மாற்றுத் திறனாளிகள், 581 திருநங்கைகள் உள்ளடங்குவர். ஜூலை 25-ஆம் தேதி நிலவரப்படி 26.75 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மனித சக்தி நாட்களில் 87.08 சதவீதம் பெண்கள், 29.69 சதவீதம் எஸ்சி, எஸ்டி குடுங்களை சேர்ந்த பயனாளிகளால் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரத்தை கேட்டிருந்தார். அதற்கு, ரூ.2087 கோடி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டி இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை பதில் அளித்துள்ளது.

 - விடுதலை நாளேடு,24.08.26

சனி, 18 ஜூலை, 2026

பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் - ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை

 01.04.2025 முதல் நடைமுறைக்கு வரும் பெருக்குபவருக்கான குறைந்த அளவு ஊதியம் வழங்கக் கூறும் ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை அரசு ஆணை



சனி, 17 பிப்ரவரி, 2024

ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம்

 



புதுடில்லி,ஜன.4- திருமண விவகாரம் சர்ச் சையில் இருந்தால், அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவ ருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக் கலாம் என்று ஒன்றிய அரசு விதி முறை திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது.

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2021-இன் 50ஆவது விதி முறைப்படி, ஓர் அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரோ மரணம் அடைந்தால், அவரது வாழ்க்கை துணைக்கு (கணவன் அல்லது மனைவி) ஓய்வூதியம் வழங்கப்படு கிறது.
ஒருவேளை அந்த வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டாலோ அல்லது அவரது மரணத்துக்கு பிறகோ அவர்களின் குழந்தைகள், வரிசை அடிப்படையில் குடும்ப ஓய்வூ தியம் பெற தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், அரசு பெண் ஊழியர், தனது கணவருக்கு பதிலாக தனது குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட் டுள்ள ஆணையில் கூறப்பட்டிருப்ப தாவது, கணவருக்கு எதிராக விவா கரத்து வழக்கு தாக்கல் செய்த பெண் ஊழி யர்கள்,
தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தையை குடும்ப ஓய்வூ தியம் பெற நியமிப்பதற்கு அனுமதிக் கலாமா என்று கேட்டு பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன.

அதன் அடிப்படையில் இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அதன்படி, கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவா கரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்தாலோ. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந் தாலோ, அத்தகைய பெண் ஊழியர்கள் தங்கள் மரணத்துக்கு பிறகு கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு தங்கள் துறை தலைவரிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுக்கலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.