பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மார்ச், 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணி நியமன ஆணைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் Published March 6, 2024

 

Published March 6, 2024, விடுதலை நாளேடு

சென்னை,மார்ச் 6 – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை கொண்டு சுய உதவிக்குழுக் கள் மற்றும் கூட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் உறுப்பினர்க ளுக்கு தொழிற் பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள் போன்ற வற்றை பெற்று தந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறை யாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் உருவாக்கப்பட்ட 51 பூங்காக்களை தேர்வு செய்து, அவற்றினை பராம ரிப்பதற்காக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளை யாட்டு சாதனங்களை பராமரித் தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, பராம ரிப்பிற்கான உபகரணங்கள், சான்றி தழ், கையேடுகள் போன்றவை வழங்கப் பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் வாயி லாக சுமார் 500 சுய உதவிக் குழுவி னரின் குடும்பங்கள் நேரடியாக பயனடைவர். இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில் முதற் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பூங் காக்களை பராமரிக்கும் பணிக் கான ஆணை மற்றும் உபகரணங் களை நகர்ப்புற சுய உதவிக் குழுக்களி டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4.3.2024 வழங் கினார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநக ராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநக ராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந் தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 7 நவம்பர், 2023

இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்

  

 3


சென்னை, அக். 31-  சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று (30.10.2023) வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறியதா வது: 

முதலமைச்சர் அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சி யாக இந்து சமய அற நிலையத்துறையில் செயல் அலுவலர் (நிலை -1) 25 நபர்களும், 81 இள நிலை உதவியாளர்கள், 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கியதை தொடர்ந்து இன்றைய தினம் 32 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள், செயல் அலுவலர் (நிலை -4) நிலையிலான 2 நபர்கள் என மொத்தம் 240 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. 

இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் பணி நிய மன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 110 -விதியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றிய 1,278 நபர் கள் பணி நிரந்தரம் செய் யப்பட்டுள்ளனர். 

மேலும், காலியாக உள்ள 151 பணியிடங் களை நிரப்புவதற்கு அர சுப் பணியாளர் தேர் வாணையத்திடமிருந்து பட்டியல் எதிர் நோக் கப்பட்டுள்ளது. ஆகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதும், துறையி னுடைய அன்றாட பணி கள் எந்த வகையிலும் தடைபடாமல் இருப் பதற்கும் பல்வேறு முயற் சிகளை துறையின் சார்பில் எடுத்து வரு கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 22 மார்ச், 2023

தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை - முதலமைச்சர் வழங்கினார்

 

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணை யத்தால் ஒப்பந்த அடிப்படையில் 15,409 செவிலியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இவர்களது ஒப்பந்தப் பணி குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, நிரந்தர காலி பணியிடத்தில் வரிசைப் படி நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தால் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்கு 92 பேர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு 85 பேர் என 177 இருட்டறை (Dark Room) உதவியா ளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை யின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படு கின்றன. இங்கு காலியாக உள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-மிமி பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட் டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாள மாக, 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இதுதவிர, 21 இளநிலை உதவியாளர் பணியிடங்க ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் அடையாள மாக 4 பேருக்கு ஆணைகளை முதல மைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் செந்தில்குமார், மருத்துவ தேர்வு வாரி யத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் 

டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரி சுந்தரி, உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.