சென்னை, ஜூலை 22 ஊழியர்களின் வரு
2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான வ
இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்
இதன்படி தங்களது சேமிப்பில் 75
சென்னை, ஜூலை 22 ஊழியர்களின் வரு
2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான வ
இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்
இதன்படி தங்களது சேமிப்பில் 75
சென்னை, மே 29 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான குறைதீர் கூட்டம் முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திரசிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் ஜூன் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- விடுதலை நாளேடு, 29.5.19
சென்னை, மே 5 வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31வரை 8 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கும் இந்த 8 சதவீத வட்டியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதிவரையிலான காலக்கட்டத்திற்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 5.5.19
புதுடில்லி, மார்ச் 3 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு
(பி.எப்.,) இனி அடிப்படை சம்பளத்துடன் சிறப்பு படிகளும் சேர்த்து கணக்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பி.எப்., சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். இதே சதவீத தொகையை நிறுவனங்களும் அளிக்கும். சில நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, சிறப்பு படிகளை அதிகரித்து மோசடி செய்தன.
இதன் மூலம் குறைவான தொகையை பி.எப்., பங்கிற்கு செலுத்தி வந்தன.இவற்றை தடுக்கும் விதமாக அடிப்படை சம்பளத்துடன் அனைத்து சிறப்பு படிகளையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதாரணமாக ஒருவர் அடிப்படை சம்பளம் ரூ. 10,000, சிறப்பு படிகள் ரூ. 5,000 சேர்த்து ரூ. 15,000 சம்பளம் பெற்றால், 10,000 ரூபாய்க்கு மட்டும் முன்பு பி.எப் பிடித்தம் செய்யப்படும். இனி சிறப்பு படிகள் சேர்த்து 15,000 ரூபாய்க்கு பி.எப்., பிடிக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் கையில் வாங்கும் சம்பளம் குறையும்.
- விடுதலை நாளேடு, 3.3.19