அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2024

298 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் 40 விழுக்காட்டினர் மோடிக்கு வெட்கமாக இல்லையா? – மனோ தங்கராஜ்


விடுதலை நாளேடு

 சென்னை, மே 20- ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைந்த வருமா னத்தில் 40% பேர் இருக்கிறார்கள் என்றும், இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா என்றும் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக சாடியுள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங் களாக நடைபெற்று வரும் நிலை யில், 4 கட்ட வாக்குப்பதிவு வெற்றி கரமாக நடைபெற்று முடிந் துள்ளது.
அடுத்து, 5ஆவது கட்டத் தேர் தல் இன்று நடைபெறுகிறது. அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் களம் அனல்பறந்து கொண்டிருக்க அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலை வர்கள் கடுமையாக சாடி வரு கிறார்கள். இதற்கு பதிலடியாக இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவை சேர்ந்த அமைச்சரான மனோ தங்கராஜ், ஒன்றிய அரசை கடுமையாக தேர் தல் தொடங்கியதில் இருந்தே சாடி வருகிறார்.

குறிப்பாக ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை புள்ளி விவரங்களுடன் தாக்கி பேசி வருகிறார். அந்த கையில், “இந்தியாவில் 40%க்கும் அதிகமா னோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க் கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.
இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா? என கடுமையாக விமர்சித்து பதிவிட் டுள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்ப தாவது:-
இந்தியாவில் 40%க்கும் அதிக மானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத் தில் வாழ்கிறார்கள். ஆனால் பெரும் பணக்காரர்களின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பிரதமர் மோடிக்கும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வெட்கம் இல்லையா? மோடி அரசு கார்ப்ப ரேட் வரியை 2019இல் 30% லிருந்து 22% ஆக குறைத்தது, இது இரண்டு ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தொகை 2020-2021ஆம் ஆண்டில் விநிழிஸிணிநிகி மற்றும் ழிதிஷிகி ஆகிய இரண்டு திட்டங்களுக் கான பட்ஜெட்டுகளை விட அதிகமானது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தில் உள்ளது- இது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இருந்த அளவை விட அதிகம்.
0.001% மேல் தட்டு மக்கள் (10 ஆயிரத்திற்கும் குறைவான நபர் கள்) 50% கீழ் தட்டு மக்களை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்துள்ளனர்.
இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் எனபதற்காக தான் சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா?” என்று சாடியுள்ளார்.

செவ்வாய், 7 நவம்பர், 2023

இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்

  

 3


சென்னை, அக். 31-  சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று (30.10.2023) வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறியதா வது: 

முதலமைச்சர் அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சி யாக இந்து சமய அற நிலையத்துறையில் செயல் அலுவலர் (நிலை -1) 25 நபர்களும், 81 இள நிலை உதவியாளர்கள், 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கியதை தொடர்ந்து இன்றைய தினம் 32 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள், செயல் அலுவலர் (நிலை -4) நிலையிலான 2 நபர்கள் என மொத்தம் 240 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. 

இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் பணி நிய மன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 110 -விதியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றிய 1,278 நபர் கள் பணி நிரந்தரம் செய் யப்பட்டுள்ளனர். 

மேலும், காலியாக உள்ள 151 பணியிடங் களை நிரப்புவதற்கு அர சுப் பணியாளர் தேர் வாணையத்திடமிருந்து பட்டியல் எதிர் நோக் கப்பட்டுள்ளது. ஆகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதும், துறையி னுடைய அன்றாட பணி கள் எந்த வகையிலும் தடைபடாமல் இருப் பதற்கும் பல்வேறு முயற் சிகளை துறையின் சார்பில் எடுத்து வரு கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

  

 1

சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறி வுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச் சினைகள் தொடர்பாக மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ முன்னிலையில் சென்னை கிண்டியில் உள்ள வாரிய அலுவல கத்தில் நேற்று (30.10.2023) நடை பெற்றது.

அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவு கள், அபாயகரக் கழிவுகளை கண் காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண் டும். கேரளத்துக்கு செல்லும் வாக னங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள சிப்காட், சிட்கோ வளாகங்களை தொடர் ஆய்வு செய்து அவ்வளாகத்தினுள் அமைந்திருக்கும் பெரிய வகை (சிவப்பு) தொழிற்சாலைகள் சுற் றுச்சூழலுக்கு உகந்த புதிய மாற்று தொழில் நுட்பங்களுடன் இயங்கு கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட் டங்களில் அமைந்துள்ள கிரா னைட் குவாரிகளை தொடர் ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அரு கில் உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்து வதை சுட்டிக்காட்டி அந்நகராட்சி களில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சி திடக்கழிவுகள் குப்பை கிடங்குகளில் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பயோ மைனிங் மூலம் திடக்கழிவுகளை பிரித்து அறிவியல் முறையில் கையாள தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையிலி ருந்து வெளியேறும் திடக்கழிவு களை அறிவியல்முறையில் கையாண்டு மின்சாரம் தயாரித்தல் மற்றும் கரிம உரமாகமாற்றுதல் போன்ற நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

வெள்ளி, 31 மார்ச், 2023

100 நாள் வேலைத் திட்டம் : ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த நிலையிலும் - பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்தியவர் முதலமைச்சர்! - அமைச்சர் இ.பெரியசாமி

 

12

சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை தி.மு.கழக அரசு திறமையாகச் செயல்படுத்தும்!” என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டதாவது:- 

ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப் படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத்திறன்வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, நம்முடைய மாநிலத்திற்கு கடந்த முறை, 24 இலட்சம், 25 இலட்சத்தைத் தாண்டவில்லை. இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, கிட்டத்தட்ட வேலை நாட்களைப் பார்த்தீர்களென்றால் பல இடங்களிலெல்லாம் 20 நாட்கள் தாண்டாமல் இருந்தது. 20 நாட்கள், 30 நாட்கள் இருந்தது.கடந்த 4 மாதங்களில் எடுத்த நடவடிக்கைகளில் வேலை நாட்கள், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் 60, 70 நாட்களைத் தாண்டி, வேலை நாட்கள் ரூ.32 கோடியை இன்றைக்கு workers budget அய் 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக் கியிருந்தாலும், நாங்கள் அதையெல்லாம் எதிர்பார்க் காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வருகிற ஆண்டுகளில் அந்த கோடி என்பதை 35 கோடி என்று, நீங்கள் நிதிநிலை அறிக்கையை படித்துப் பாருங்கள். மனித வேலை நாட்களை 35 கோடிக்கு உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். வேலைத்திறன் நாட்களை 25 கோடியிலிருந்து 35 கோடி ஆக்குவோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுவே 35 கோடி நாட்கள் என்று சொன்னோமென்றால், 35 கோடியைத் தாண்டி, 40 கோடிக்கு மேலும் உயரும் என்று நிச்சயமாகச் சொல் கிறேன், இன்னும் சொல்லப் போனால், எல்லா கிராமங் களுக்கும் இந்த வேலைத் திட்டம் போய்ச் சேர வேண்டும். Cluster என்று பார்த்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் 20,000 clusters தான் இருந்தது. ஆனால், தற்போது கிராமங்களை இணைக்கக் கூடிய இந்த வேலைத்திறன் clusters, கடந்த இரண்டாண்டு காலத்தில் சுமார் 3,000 clusters  கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வருகிற காலத்தில் அதை 30,000 ஆக உயர்த்தி, வேலைத் திறன் நாட்களை உயர்த்தி, ஊதியத்தையும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கொடுப்பதற்கு எங்களுடைய இந்த அரசு முதலமைச்சர் அவர் களுடைய வழிகாட்டுதலில் நிச்சயம் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும். 

 பேரவைத் தலைவர் அவர்களே, 100 நாள் வேலைத் திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பொறுத்தளவில், அதற்கான நிதியை 100 சதவிகித நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள், பேரூராட்சிக்கும் அதை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் Pilot Scheme போன்று ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒரு பேரூராட்சியைத் தேர்ந்தெடுத்து அந்தத் திட்டத்தை பேரூராட்சிகளி லும் செயல்படுத்திய அரசு எங்களுடைய அரசு என்பதை   உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு அமைச்சர் இ. பெரியசாமி குறிப்பிட்டார்.

வியாழன், 9 மார்ச், 2023

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி.கணேசன்

 

 சென்னை, செப்.28  குழந்தை தொழி லாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.  

சென்னை டி.எம்.எஸ்.வளா கத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடந்த தொழிலாளர் நலத் துறை தொடர் பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச் சர் சி.வி.கணேசன் பேசியதாவது,

தமிழ்நாடு  முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழி லாளர் களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறை யானது சிறப்பான முறை யில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலு வலர் களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் அனைவரும் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும். தொழி லாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழு மையாக தீர்வு காணும் நோக்கத்தி லும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.தொழிற் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலா ளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலா ளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தி அதிகளவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன் மூலம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத்  தொழி லாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு  அமைச்சர் கூறினார்.