சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை தி.மு.கழக அரசு திறமையாகச் செயல்படுத்தும்!” என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டதாவது:-
ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப் படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத்திறன்வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, நம்முடைய மாநிலத்திற்கு கடந்த முறை, 24 இலட்சம், 25 இலட்சத்தைத் தாண்டவில்லை. இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, கிட்டத்தட்ட வேலை நாட்களைப் பார்த்தீர்களென்றால் பல இடங்களிலெல்லாம் 20 நாட்கள் தாண்டாமல் இருந்தது. 20 நாட்கள், 30 நாட்கள் இருந்தது.கடந்த 4 மாதங்களில் எடுத்த நடவடிக்கைகளில் வேலை நாட்கள், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் 60, 70 நாட்களைத் தாண்டி, வேலை நாட்கள் ரூ.32 கோடியை இன்றைக்கு workers budget அய் 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக் கியிருந்தாலும், நாங்கள் அதையெல்லாம் எதிர்பார்க் காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வருகிற ஆண்டுகளில் அந்த கோடி என்பதை 35 கோடி என்று, நீங்கள் நிதிநிலை அறிக்கையை படித்துப் பாருங்கள். மனித வேலை நாட்களை 35 கோடிக்கு உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். வேலைத்திறன் நாட்களை 25 கோடியிலிருந்து 35 கோடி ஆக்குவோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுவே 35 கோடி நாட்கள் என்று சொன்னோமென்றால், 35 கோடியைத் தாண்டி, 40 கோடிக்கு மேலும் உயரும் என்று நிச்சயமாகச் சொல் கிறேன், இன்னும் சொல்லப் போனால், எல்லா கிராமங் களுக்கும் இந்த வேலைத் திட்டம் போய்ச் சேர வேண்டும். Cluster என்று பார்த்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் 20,000 clusters தான் இருந்தது. ஆனால், தற்போது கிராமங்களை இணைக்கக் கூடிய இந்த வேலைத்திறன் clusters, கடந்த இரண்டாண்டு காலத்தில் சுமார் 3,000 clusters கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வருகிற காலத்தில் அதை 30,000 ஆக உயர்த்தி, வேலைத் திறன் நாட்களை உயர்த்தி, ஊதியத்தையும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கொடுப்பதற்கு எங்களுடைய இந்த அரசு முதலமைச்சர் அவர் களுடைய வழிகாட்டுதலில் நிச்சயம் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும்.
பேரவைத் தலைவர் அவர்களே, 100 நாள் வேலைத் திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பொறுத்தளவில், அதற்கான நிதியை 100 சதவிகித நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள், பேரூராட்சிக்கும் அதை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் Pilot Scheme போன்று ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒரு பேரூராட்சியைத் தேர்ந்தெடுத்து அந்தத் திட்டத்தை பேரூராட்சிகளி லும் செயல்படுத்திய அரசு எங்களுடைய அரசு என்பதை உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அமைச்சர் இ. பெரியசாமி குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக