• Viduthalai
சென்னை, டிச. 4- பத்திரிகை யாளர்களின் நலன் காக் கும் வகையில் பத்திரிகை யாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியி ருப்பதாவது:
உழைக்கும் பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செயல்படுத்து வதுடன், நல வாரிய உதவித் தொகை கள், நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6ஆம் தேதி அறிவித் தார்.
இதையடுத்து, பத்திரி கையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறது. நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளு டன், பின்வரும் நலத் திட்ட உதவிகள் நல வாரி யம் மூலம் வழங்கப்படும். குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் குழந்தைகள், 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
மேலும், 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன், மகள், முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில் பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப் பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதி யில் தங்கிப் படிப்பவர் களுக்கு ரூ.4,000, தொழில் நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடு தியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, அய்டிஅய், பாலி டெக்னிக் படிப்பவர்க ளுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200 வழங்கப்படும்.
திருமண உதவித் தெகை
இதுதவிர, திருமணத் துக்கு ரூ.2,000, மகப்பே றுக்கு ரூ.6,000, கருக் கலைப்பு, கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணா டிக்கு ரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகை யாக ரூ.50 ஆயிரம், இறுதி நிகழ்வுக்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், பத்திரிகையா ளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலை வராகவும், 7 பேரை அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகவும்,6 பேரை அலு வல் சாரா உறுப்பினர்க ளாகவும் கொண்ட குழு அமைக்கப்படும்.
விளம்பரக் கட்டணத்தில்..
நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்ட, அரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகை, நல வாரியத்துக்கு வழங்கப் படும். நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டு, நல வாரிய உதவித் திட்டங் களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீல னைக் குழு அமைக்கப் படும். இந்த நடவடிக்கை கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி, அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன் றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக