முன்னுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஏப்ரல், 2025

திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 விழுக்காடு முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

 


விடுதலை நாளேடு
இந்தியா

சென்னை, ஏப்.18- தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்தவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளி யிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி 4-இல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பதிலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து அரசு ஆணையிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

இதர மொழிகளை பயிற்று மொழியாக படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த முன்னுரிமை ஒதுக் கீட்டுக்கு தகுதியுடை யவர்கள் இல்லை. பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் முன் னுரிமை வழங்கப்பட தகுதி யுடையவர்கள் அல்லர்.

கல்வித் தகுதி சான் றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர் களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத் திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள் வது தொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைகள் நட வடிக்கை மேற்கொள்ளும்.

இந்த 20 சதவீத முன் னுரிமை ஒதுக்கீடா னது நேரடி பணி நியமனத் துக்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சனி, 14 ஜனவரி, 2023

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை அமைச்சர் தங்கம் தென்னரசு

 


    

கிருஷ்ணகிரி, நவ. 26 தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற் சாலையில் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித் துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை தாலுகாவில் அமைந் துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா எலெக்ட் ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் நிறுவனம், மின்னணு பொருட் களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள நிவிஸி தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக் கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும்போது பணியாளர் தேவை யில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த வர்களை நியமிக்க டாடா எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவ னத்துடன் கலந்தாலோசனை மேற் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்நிறு வனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நாமக்கல் (14.10.2022), தர்மபுரி (15.10.2022), கிருஷ்ணகிரி (15.10.2022, 16.10.2022, 29.10.2022) (ம) 6.11.2022 (ஓசூர்), விழுப்புரம் (15.10.2022), திருப்பத்தூர் (17.10.2022), சேலம் (19.10.2022), பெரம்பலூர் (20.10.2022), திருவண்ணாமலை (20.10.2022), இராம நாதபுரம் (20.10.2022), மயிலாடுதுறை (21.10.2022), கள்ளக்குறிச்சி (22.10.2022), புதுக்கோட்டை (28.10.2022), ஈரோடு (30.10.2022 (ம) 31.10.2022), சிவகங்கை (2.11.2022), வேலூர் (12.11.2022), மதுரை (15.11.2022), திருநெல்வேலி (17.11.2022), தேனி (17.11.2022), காஞ்சிபுரம் (18.11.2022), திண்டுக்கல் (18.11.2022), தூத்துக்குடி (19.11.2022), செங்கல்பட்டு (19.11.2022), இராணிப்பேட்டை (20.11.2022), விருதுநகர் (22.11.2022), தஞ்சாவூர் (22.11.2022), தென்காசி (23.11.2022), நாகப்பட்டினம் (23.11.2022), நாகர்கோவில் (24.11.2022), திருவள்ளூர் (24.11.2022) ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1993 நபர் களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந் நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம் களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கு வதை இந்த அரசு உறுதி செய்யும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 November 26, 2022 • Viduthalai