தொழிலாளரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிலாளரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 மே, 2023

தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!

 

 *   தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக!  8 ஒப்பந்த தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருக!

* பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது  முதல் தலைமுறையில் படிக்கும் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாதிப்பே!

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்திடுக!

இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்திலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக!

1

தாம்பரம், மே 20 தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக என்பது உள்பட புதிதாக இந்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்பது உள்பட, தாம்பரத்தில் இன்று (20.5.2023) நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

தமிழ்நாடு முதலமைச்சருக்கு 

நெஞ்சம் நிறைந்த நன்றி!

தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தி லிருந்து 12 மணி நேரமாக தொழிலாளர்கள் விரும்பினால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தலாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21.4.2023 அன்று சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து திராவிடர் கழகம் உட்பட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் குரல் கொடுத்தன; இதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 100ஆம் ஆண்டு மே தினத்தையொட்டி, முக்கிய கட்சிகள், தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று, முற் றிலுமாக ரத்து செய்ததை இம்மாநாடு வரவேற்று அளவில்லா நன்றிப் பெருக்கை ‘திராவிட மாடல்’  அரசுக்கும், முதலமைச்சருக்கும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக!

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களைப் பங்காளி யாக்க வேண்டும் என்று 1944இல் சேலத்தில் நடைபெற்ற - நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்த- மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த முன்வரவேண்டும் என்று மாநில, ஒன்றிய அரசுகளை இம்மநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3:

திண்டுக்கல் மாவட்டம் பழனி, பொருந்தலாறு உள்ளிட்ட நீர்த்திட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

திண்டுக்கல் மாவட்டம் பழனி - பொருந்தலாறு, பாலாறு கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றில் 2010ஆம் ஆண்டு முதல் பணி புரிந்துவரும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல் தோராயமாக ரூ.4,000, ரூ.5000 என வழங் கப்படுவதுடன் பணிநிரந்தரம் தொடர்பான திண்டுக்கல் தொழிலாளர் நீதிமன்ற வழக்கிலும் நிருவாகம் முட்டுக்கட்டையாக இருந்து வருவதைக் கைவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021 தேர்தல் அறிக் கையில் கூறியபடி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், பணிப் பாதுகாப்புக்கு ணிஷிமி, றிதி போன்ற உத்தரவாதமும், பணி மற்றும் பணிநேர வரன்முறையை உருவாக்கி பணியில் இறந்தவர்களுக்கு வாரிசு வேலையும், பணியில் விபத்துக்குள்ளாகி ஊன முற்றவர்களுக்கு பணிநிரந்தரமும் செய்திட வேண்டு மெனவும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

 ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாட்களையும் ஊதியத்தையும் உயர்த்திடுக!

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து உத்தரவிட்டுள்ள மய்ய அரசை இம்மாநாடு கண்டிப்ப தோடு, 100 நாள் என்பதை 150 நாட்களாக உயர்த்திடவும் அப்பணியாளர்கள் பயன் பெறும் வகையில் மேலும் வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

விவசாயத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ஆண் - பெண் சமமாக ஊதியம் வழங்க வேண்டுமெனவும், 60 வயதுக்கு மேற்பட் டோருக்கு ஓய்வூதியம் வழங்கிடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

ESI மூலம் மருத்துவ வசதியில் மாற்றம் தேவை

ESI மூலம் மருத்துவ வசதி பெறும் தொழிலாளர் களுக்கு சம்பள நிர்ணயம் ரூ.20,000 என்று இருப்பதால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மருத்துவ வசதி பெற இயலவில்லை. எனவே, ரூ.20,000 என்பதை உயர்த்தி நிர்ணயம் செய்திட இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழிவந்த ‘திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாட்டில் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு கிடைத்திட சட்டம் இயற்றிட இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்புப் பணிகளுக்கு முறையாக உரிமம் பெற்றவர்களை அமர்த்திடுக!

தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்புப் பணிகள் செய்திட  உரிமம் பெற்றோர் ஏராளமாக வேலையின்றி இருக்கும் நிலையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி-புரியும் ஊழியர்களே சொந்தமாக ஆள்வைத்து மேற்கண்ட பணிகளைச் செய்வதைத் தடுத்து, தகுந்த உரிமம் பெற்றோர் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வழிவகை செய்திட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள் வதோடு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகக் கட்டடங் களுக்கான இணைப்புகளை மீண்டும் வழங்கிட ஆவன செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள இம் மாநாடு  தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

தனியார்த் துறை ஊழியர்களுக்கு 

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய நிர்ணயம் செய்திடுக!

5

தனியார்த் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய நிர்ணயம்  செய்திடும் வகையில் சட்டம் இயற்றி தனியார்த்துறை ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 9:

“பெல்’ தொழிலாளர்களும் - அவர்களின் பிரச்சினைகளும்!

BHEL (‘பெல்’) முதன்மை வேலை அளிப்பவர் (Principal Employer) ஒப்பந்த தொழிலாளர் பணிகளை ஒப்பந்ததாரரிடம் வழங்குகிறார்.  ஒப்பந்ததாரர்கள் ஆண்டுதோறும் உரிமத்தைப் புதுப்பித்து வேலை செய்கிறார்கள். ஆனால், அரசு, ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 (CLR & Act 1970) அய் நடைமுறைப்படுத்துவதில்லை. முதன்மை வேலை அளிப்பவர் தொடர்ச்சியாக எல்லா வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கு கிறார்கள். இம்முறையை மாற்றியமைத்திட வேண்டு மெனவும், தொடர்ச்சி அல்லாத வேலைகளை மட்டும் ஒப்பந்ததாரருக்கு வழங்கி அரசு இயற்றியுள்ள சட்டம் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆவன செய்திட வேண்டுமெனவும், முதன்மை வேலையளிப்பவர் ஒப் பந்தம் வழங்கும்போது ஏற்கனவே அந்தப் பணிகளைச் செய்து வந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணிகள் மறுக்கப்படுவதைக் கண்டிப்பதோடு, ஏற்கெனவே பணி புரிந்த தொழிலாளர்ளைப் பாதிக்காதவாறு ஒப்பந் தங்களை மாற்றியமைக்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

அமைப்பு சாராப் பணியாளர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேவை!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு மற்ற அரசுத் துறை ஊழியர்களுக்கு இருப்பது போல எளிமையான காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்திட தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 11:

குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் மாநகர, பேரூர், ஊராட்சி குடிநீர் வழங்கல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

கட்டுமானம், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுக!

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களில் தோட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கு மழைக்கோட், தொப்பி, களையெடுக்கும் எந்திரம் போன்றவை வழங்க ஆவன செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 13:

சேலம், காரிப்பட்டி அக்ரோ புராடக்ட்ஸ் பணியாளர்களுக்குச் சட்டப்படியான உதவிகள் தேவை!

சேலம் காரிபட்டி ஹட்சன் ஆக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களைப் பணியமர்த்தி அவர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய ESI, PF போன்றவற்றை வழங்காமல், மேற்படி தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதை இம்மாநாடு கண்டிப்பதுடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொழிலாளர் பணித்துறையும், ஆய்வு செய்து ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிடுக!

போக்குவரத்துக் கழகங்களில் 30.06.2015க்குப்பின் ஓய்வு பெறுவோருக்கு 30.06.2015 அன்று பெற்ற 11.9 சதவிகிதம் அடிப்படையிலேயே இன்றுவரை அக விலைப்படி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. நீதிமன்றம் உடனடியாக  வழங்கிட உத்தரவிட்டும், போக்குவரத்துக் கழக நிருவாகம் மேல்முறையீடு செய்துள்ளதால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வுபெற்ற தொழி லாளர் குடும்பத்தினரின் இன்னல் நீங்கிட நடப்பு தேதி வரை நிலுவையிலுள்ள அகவிலைப்படியை ஊதிய ஒப்பந்தங்களின் திரண்ட பயன்களுடன் உயர்த்தி வழங்குவதோடு நிலுவைத் தொகையினையும் உடன டியாக வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதோடு, போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சீராக இயங்கிட பணியாளர் பற்றாக் குறையைக் களையும் வகையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மற்ற அரசுத் துறைகளில் உள்ளதுபோல போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கும் வேறு துறைகளிலும் பணியமர்த்தி அக்குடும்பங்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்வதோடு, மற்ற அரசுத்துறை ஓய்வூதியர்களைப் போல போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டுமாய் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6

தீர்மானம் எண் 15:

போக்குவரத்துத் தொழிலாளர்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி!

14ஆவது ஊதிய ஒப்பந்தம் (12/3) பெரும்பான்மை சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாக ஊதிய உயர்வு வழங்கிய திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கு நமது நன்றியை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் சிறப்பாக முடிந்தாலும் போக்குவரத்துக் கழகங்களில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிறைவேற்றப் பட வேண்டும். அதேபோல் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மின் வாரியம் போல் ஓய்வு காலப் பணப்பலன்கள் அனைத் தும் ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வு காலப் பணப் பலன்களை வழங்கிடுக! 

கடந்த 1.11.2022 முதல் ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இறந்த போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு அவர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. அவை உடனே வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 17:

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்திடுக!

குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும்! அடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர் முறையையே அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மாநில, ஒன்றிய அரசுகளை வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 18:

Diploma, B.E.,படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பணியில் 

முன்னுரிமை வழங்குக!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்காக (NLC) வீடு நிலங்களை விட்டுக் கொடுத்தவர்களுக்கும், ITI தொழிற் பழகுநர் பயிற்சி முடிந்தவர்களுக்கும் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரப்பணி வழங்கிட ஆவன செய்திட வேண்டுமெனவும் அதிகாரிகள்  தேர்வில் GATE தேர்வு என்கிற பெயரில் வடமாநில மாணவர் களுக்கு GET பணிவழங்குவதைக் கண்டிப்பதோடு, கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் Diploma, B.E., படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஊதிய உயர்வுக்கான நிர்ணயக் காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகள் எனக் குறைக்க வேண்டும். அதேபோல பொதுத்துறை ஊழியர்களுக்கென தனியாக ஊதிய நிர்ணயம் செய்திட ஆவன செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 19:

மீனவத் தொழிலாளிகளின் 

இன்னல்களைக் களைந்திடுக!

தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளிக்கும் மீனவத் தொழிலாளிகள் அரசுக்கு வைத்த கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் சீர்தூக்கிச் செயல்படுத்துமாறு மாநில, ஒன்றிய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடியும், கைது செய்தும் - சிறையில் அடைத்தும், வலைகளையும், படகுகளையும் பறிமுதல் செய்தும் வரும் இலங்கை அரசின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20:

பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் தேவை!

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு, குழந்தைப்பருவம் முதல் நல்லறிவு, கட்டுப்பாடு, நேரந்தவறாமை, இவை சார்ந்த ஒழுக்கங்களைக் கற்பிக்க வேண்டும் என்றும், கோயில் குளங்களிலும் சுற்றுலா செல்லும் இடங்களிலும் நீரில் மூழ்கி இருபால் சிறுவர் சிறுமிகள் மரணம் அடையும் கொடுமை அதிகரித்து வருவதையும் எண்ணி இம்மாநாடு மிகுந்த கவலைகொள்கிறது. பிள்ளைகள்மீது கண்காணிப்புடன் கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும் என்றும், நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு ஆர்வங்களையும், கல்வி அக்கறையோடு சேர்த்துக் கவனிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களையும், ஆசிரியர் பெருமக்களையும், தன்னார்வலர்களையும், கழகத் தோழர்களையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 21(அ):

தொழிலாளர்களும் - இட ஒதுக்கீடும்!

அடிப்படையில் ஒடுக்கப்பட்டு காலம் காலமாக உரிமையற்றவர்களாக வாழ்ந்து தீர்த்த அடி மட்ட தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்து முதல் தலைமுறையாகக் கல்வி உரிமை பெற்று, மருத்துவம் போன்ற படிப்புக்குள் செல்ல ஆர்வம் காட்டும்  இந்தக் காலகட்டத்தில், அந்த முயற்சியின் குதிகால் எலும்பை முறிக்கும் வகையில் ‘நீட்’ தேர்வைத் திணித்திருப்பது திட்டமிடப்பட்ட, ஏற்கெனவே ஆதிக்கம் பெற்ற உயர் ஜாதி அரசியலின் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

ஒன்றிய அரசு உடனடியாக நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 21(ஆ):

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினருக்கு 

இடஒதுக்கீட்டின் தந்திரம்!

ஏற்கெனவே கல்வி ரீதியிலும், சமூக ரீதியிலும் மேல்நிலை ஆதிக்கத்தில் உள்ள உயர்ஜாதியினருக்கு மேலும் வசதியையும் வாய்ப்பையும் அகலத் திறந்து விடும் வகையில் உயர்ஜாதியில் உள்ள - பொருளா தாரத்தில் நலிந்தவர்கள் (EWS) என்ற பெயரால் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அவசர அவசரமாக 103ஆவது சட்டத் திருத்தமாக கொண்டுவந்து திணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசின் சமூக அநீதியை இம்மாநாடு கண்டிக்கிறது; இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. கட்சிகளை மறந்து தொழிலாளர் வர்க்கம் போராட முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 22:

அனைத்து தொழிற்சாலைகளிலும், NAPS (National Apprenticeship Promotion Scheme) பயிற்சித் தொழி லாளர்களுக்கு பயிற்சி முடிந்த பின் வேலை வழங்கு வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திஜிணி (FTE (Fixed Term Employment) அடிப்படையில் நியமிக்கப் படும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க செய்ய ஆவன செய்ய வேண்டும்.

தீர்மானம் எண் 23:

விவசாயிகளின் நலனைப் பாதிக்க கூடிய இந்திய அரசின் வேளாண் சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல் படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று, தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கக் கூடிய இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதிலிருந்து விலக்களிக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது (20.5.2023)

22

மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.  - தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் எம்.பி. தமிழர் தலைவருக்கு  பொன்னாடை அணிவித்தார். மு. சண்முகத்திற்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றார்.

23%5D'

தொ.மு.ச. பேரவை (தி.மு.க.) பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

24%5D

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு கருத்தரங்கில் பார்வையாளர்கள் (20.5.2023)

நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர்- ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டு உரை


 நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர்

1. பண முதலாளி 2. கல் முதலாளி 3. பிறவி முதலாளியாகிய ‘பிராமணன்!'

இந்த முதலாளி - தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டு தொழிலாளி  பங்காளியாக வேண்டும்!

திராவிடர் கழக தொழிலாளரணியின் தனித்தன்மை இதுதான்!

19

தாம்பரம், மே 21  நாட்டில் மூன்று வகையான முதலாளி கள் இருக்கின்றனர்; பணத்தை மூலதனமாகப் போடும் முதலாளி; கடவுளாகிய கல் முதலாளி; பிறவி முதலாளி யான ‘பிராமணன்' - இந்த முதலாளித்தன்மை ஒழிந்து முதலாளி - தொழிலாளி என்ற நிலையே அகன்று அனைவரும் பங்காளி என்ற நிலையை அடைய வேண்டும்; இதுதான் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் தனித்தன்மை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் தொழிலாளர் கழக  4 ஆவது மாநில மாநாடு

நேற்று (20.5.2023) காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டில் காலை நடைபெறும் கருத்தரங்கத்திற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மானமிகு தோழர் பேரவைத் தலைவர் மோகன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை பொருளாளர் மானமிகு மா.இராசு அவர்களே,

கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களே,

கொடியேற்றி வைத்த பேரவை செயலாளர் தோழர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் அவர்களே,

இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றி, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தினைத் திறந்து வைத்த கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,

தொ.மு.ச.வின் பொருளாளரும், உலகத் தொழிலாளர் அமைப்பின் சார்பில் சுவிட்சர்லாந்தில் தொழிலாளர் மாநாடு நடைபெறவிருக்கின்றது - அம்மாநாட்டில் தொ.மு.ச.வின் சார்பில் பங்கேற்கவிருக்கின்ற பெருமைக் குரிய நம்முடைய தோழர் நடராசன் அவர்களே, வேலுச்சாமி அவர்களே,

மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய சுயமரியாதை வீரர் பகுத்தறிவாளர் சண்முகம்!

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாகத் தொடக்கவுரையாற்றி இருக்கின்ற தொ.மு.ச. என்று சொல்லக்கூடிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கத்தை, வெறும் தொழிற்சங்கமாக மட்டும் அவர் தலைமையேற்று நடத்தாமல்,  மற்றவர்கள் நடத்திய அந்த சிறப்புக் குன்றா மலும், மேலும் சிறப்பாக நடத்துவதோடு, சுயமரியாதை, பகுத்தறிவுள்ள ஓர் அணுகுமுறையை, எப்பொழுதும் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து - இயல்பாக ஒரு சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் என்ற முறையில் சிறப்பாக தொ.மு.ச.வை நடத்திக் கொண்டிருக்

கின்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்பிற்குரிய சுயமரியாதை வீரர் பகுத்தறிவாளர் சண்முகம் அவர்களே,

இந்நிகழ்வில் அடுத்து உரையாற்றவிருக்கக்கூடிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்.சே.மெ.மதிவதனி அவர்களே, வெளி யுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களே,

தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கக்கூடிய குடந்தை குருசாமி அவர்களே, தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அருமைத் தோழர் முத்தையன் அவர்களே,

சிறப்புமிகுந்த மாநாட்டிற்குக் கடுமையாக உழைத்து, தொழிலாளரணியைக் கட்டிக் காத்து வருகின்ற தொழி லாளரணி செயலாளர் செயல்வீரர் சேகர் அவர்களே,

மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர் களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டுவரப்பட்ட சட்டம் நிறுத்தப்பட்டது; 

அது பின்வாங்கப்பட்டது!

காலையில் மண்டபத்தில் நிகழ்ச்சி, மாலையில் பொதுவெளியில் மாநாடு! 12 மணிநேர வேலைத் திட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சிய நேரத்தில், அதனை உடனடியாகச் சரி செய்து, அப்படிப்பட்ட ஒரு திட்டம் எதுவுமில்லை; கொண்டுவரப்பட்ட சட்டம் நிறுத்தப் பட்டது; அது பின்வாங்கப்பட்டது - அதிலொன்றும் கவுர வப் பிரச்சினைக்கு இடமில்லை என்ற ஒரு சிறப்புத் தன்மையை நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

தாய்க்கழகத்தின் சார்பில், நன்றி தெரிவித்தேன்; மிகவும் மகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர்

மே தினத்தன்று, மே தினப் பூங்காவிலிருந்துதான் இறுதியான அறிவிப்பு வந்தது. ஏனென்றால், முதல் அறிவிப்பின்படி, நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு சட்டத்தை நிறுத்தி வைத்திருந்தால், அதற்கு முழுமையாக உயிர்ப் போகவில்லை என்று அர்த்தம். எந்நேரமும் உயிரோடுதான் இருக்கும். புற்றில் இருக்கின்ற பாம்பு வெளியில் வருகிறதா என்பது முக்கியமல்ல; பாம்பு இல்லவே இல்லை என்று தெரிந்தால்தான், நிம்மதியாகத் தூங்க முடியும். அந்த ‘அறவே இல்லை' என்பதை, தொ.மு.ச.வினுடைய மே தின நிகழ்வில்தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித் தார்கள். அப்படி அறிவித்தவுடன், நான் உடனே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டி, தாய்க்கழகத்தின் சார்பில், நன்றி தெரிவித்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

ஏனென்றால், எவ்வளவு வேகத்தோடு எதிர்த் தோமோ, அந்த வேகத்தைவிட ஒருபடி வேகமாகவே நன்றி சொன்னோம். அப்பொழுது சொன்னேன் ‘‘வரும் 7 ஆம் தேதி திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது; அந்த மாநாட்டில், உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்'' என்று சொன்னேன். 

அதற்குப் பிறகு, பல தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த மாநாடு 20 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.

இன்று மாலையிலும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றன.

பகுத்தறிவைதான் தொழிலாளர்களுக்குப் போதிக்கவேண்டும்; சுயமரியாதையை சொல்லிக் கொடுக்கவேண்டும்!

ஒவ்வொரு மாநாட்டிலும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை நூல்களாக நாம் வெளியிடுவோம். மே தினத்தையொட்டி அண்ணா அவர்களின் உரையை எடுத்துக்கொண்டால், பகுத்தறி வைத் தான் தொழிலாளர்களுக்குப் போதிக்கவேண்டும்; சுயமரியாதையை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றுதான் அண்ணா அந்த உரையைத் தொடங்குவார். ஏனென்றால், அய்யாவிடம் கற்ற பாடம் அது.

அதேபோன்று, இன்றைக்கு ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தோம். அய்யா தந்தை பெரியாரை 90 ஆண்டு களுக்கு முன்பு கேரளாவிற்கு அழைத்து சிறப்பு செய்தார்கள்.

நாம் என்ன நினைக்கின்றோம், தமிழ்நாடு எப்படி பகுத்தறிவு பூமியோ, அதுபோல, கேரளமும் பகுத்தறிவுப் பூமி, பொதுவுடைமை பூமி என்று நினைக்கின்றோம். ஆனால், அங்கேதான் வைக்கம் போராட்டம் போன் றவை நடந்தன.

தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தார்; உலகளாவிய சிந்தனையாளராக, ஒப்பற்ற சுய சிந்தனையாளராக இருந்தார் என்பதை இன்றைக்கு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம்.

‘‘முதலாளித் தன்மை ஒழிக!’’

இதனுடைய தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். ‘‘முதலாளித் தன்மை ஒழிக'' என்று சொல்கிறார் அய்யா. 

தனிப்பட்ட நபர்கள்மீது நமக்குக் கோபம் கிடையாது. முதலாளி - தொழிலாளி என்கிற பெயரை வைத்துத்தான் தொழிற்சங்கங்கள் செயல் படுகின்றன. இந்தப் புத்தகத்தின் நன்கொடை ரூ.15 தான்.

அந்தப் புத்தகத்தினுடைய சிறப்பைப்பற்றி சொல்லுகிறேன், நாமெல்லாம் பிறக்காத காலத்தில், அல்லது பிறந்த குழந்தையாக இருக்கின்ற காலத்தில், தந்தை பெரியாருக்கு, கேரளாவில் சிறப்பு செய்திருக்கிறார்கள்.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், கொச்சியில் 5 ஆம் தேதி, ஆலப்புழாவில் 10 ஆம் தேதி, திருநெல் வேலியில் 23 ஆம் தேதி.

மூன்று இடங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது.

அதில் இருக்கின்ற ஒரு பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘‘முதலாளிகளின் வாழ்வுக்கும், செல்வம் சேர்ப்பிப்பதற்கும் மாத்திரம் தொழிலாளிகள் பாடுபடுகிறார்கள் என்பதில்லாமல், இந்த முதலாளி களைக் காப்பாற்றவும், தொழிலாளிகளை அடக்கவுமான காரியத்தின் செலவுக்கும், இந்தத் தொழிலாளிகளே பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகளுடைய நிலைமை நாளுக்கு நாள் அடிமைத் தனத்திலும், தரித்திரத் திலுமே அமிழ்த்தப்படுகின்றது.

ஆதலால், தொழிலாளிகளது கஷ்டமும், துன்பமும், அடிமைத் தனமும், கவலையும், குறையும் நீங்கவேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது இல்லாமல் போயே ஆகவேண்டும்.''

முதலாளித்தன்மை இல்லாமல் போகவேண்டும் என்று சொல்கிறார் 

தந்தை பெரியார்!

‘முதலாளி' இல்லாமல் போகவேண்டும் என்று சொல்லவில்லை; ‘முதலாளித்தன்மை' இல்லாமல் போக வேண்டும் என்று சொல்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.

மிக முக்கியமானது  நம்முடைய இரண்டு சங்கங்கள் தனித்தன்மையோடு உருவானவை. தொ.மு.ச. பேரவைக்கு ரயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகியான ராகவானந்தம், செ.குப்புசாமி போன்றவர்கள் இப்படி வரிசையாகப் பொறுப்பில் இருந்த காலத்தில், அங்கே ஆஸ்தானப் பேச்சாளர்கள் என்று அதிகமாகப் போனது எங்களை மாதிரி இருக்கக் கூடியவர்கள்தான். மாணவர் பருவத்தில் அவர்கள் அழைத்த எல்லா இடங்களுக்கும் சென்று பேசுவோம்.

தமிழில் உள்ள சொல்லாட்சி என்பது 

மிகவும் முக்கியமானது

வார்த்தைகளை நாம் அதிகமாக பயன்படுத்து கின்றோமே தவிர, தமிழில் உள்ள சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எழுத்தாளர் - எழுத்தை ஆளக்கூடியவர். 

கிளார்க்காக இருக்கக்கூடியவர் - அவருக்கு எழுத்தர் என்று பெயர். அவர் எழுத்தாளர் அல்ல. 

எழுத்தாளருக்கும், எழுத்தருக்கும் என்ன வித்தியாசம்?

எழுத்தர் எழுதுவார் அவ்வளவுதான்.

அதுபோன்று, தொழிலாளர் - முதலாளி.

முதலாளி - அவர் தொழிலுக்குரிய முதலைப் போடு கிறார். பெரியார் அய்யா அவர்கள் மிக எளிமையாகச் சொன்னார்.

ஒரு பெரிய வேற்றுமை பாராட்டவேண்டி - இரண்டு பேருக்குமிடையே ஒரு பகைமை இருந்தால்தான் சிறப்பு என்று நினைக்கவேண்டாம்.

இன்றைக்கு நம்முடைய அமைப்புகள் - இரண்டும் ஒன்றாக இருக்கின்றன.

தி.மு.க. - தி.க. தொழிற்சங்கங்களும் 

இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!

திராவிடர் கழகத் தொழிலாளரணி - தொ.மு.ச. வும் எப்படி என்றால், எப்படி தி.மு.க.வும் - தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளோ, அதுபோல, தொழிற்சங்கங்களும் இரட்டைக் குழல் துப்பாக் கிகள்.

தொ.மு.ச. என்ன முடிவு எடுக்கிறதோ, அதை திராவிடர் தொழிலாளர் கழகமும் எடுக்கலாம். அதனால் தவறு ஒன்றும் இல்லை.

தொ.மு.ச. இருக்கும்பொழுது, தனியே திராவிடர் தொழிலாளர் கழகம் எதற்கு என்று கேட்கலாம்; அவர்கள் சொல்ல முடியாததை, சொல்ல சந்தர்ப்பம் இல்லாததை சேர்த்து நாங்கள் சொல்வோம், செய்வோம்; அதுதான் எங்களுக்குக் கூடுதல் வேலை.

அதேபோன்று கம்யூனிஸ்ட் நண்பர்களும். சி.அய்.டி. யூ.வாக இருக்கட்டும்; ஏ.அய்.டி.யூ.சி.யாக இருக்கட்டும் -எந்தத் தொழிற்சங்கத்திற்கும், திராவிடர் கழக தொழிற் சங்கம் போட்டியாக வரவேண்டும் என்று வரவில்லை. 

அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், திராவிடர் கழக தொழிலாளரணி என்பது ஓர் அரசியல் கட்சி அமைப்பு இல்லை.

தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளரணிகள் என்பது ஓர் அரசியல் கட்சியின் அமைப்புகள்தான்.

‘‘எண்ணெய்ச் செலவே தவிர, 

பிள்ளை பிழைக்கவில்லை.’’

அந்த அரசியல் இருப்பதினால்தான், இன்றைக்குத் திராவிட மாடல் அரசு இருக்கிறது. திராவிட மாடல் அரசு இருப்பதினால்தான், கருநாடகத்தில் கஜ கர்ணம் போட்டுப் பார்த்தாலும், கடைசியில் ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை.''

‘திராவிட மாடல்’ 

ஆட்சிதான் வழிகாட்டி. தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது!

அங்கே புதிதாக ஒரு திருப்பம் ஏற்படுகிறது. நாம் இங்கே மாநாட்டினை நடத்திக் கொண்டிருக் கின்றோம்; கருநாடகாவில் பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். 

இதற்கு யார் வழிகாட்டி என்றால், ‘திராவிட மாடல்' ஆட்சிதான் வழிகாட்டி. தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது.

திராவிடர் தொழிலாளர்களுக்கு நான் சொல் கிறேன் - நாம் இணை கோடுகள் போன்றவர்கள். தண்டவாளத்தின் இரண்டு இணை கோடுகள் போன்றவர்கள்.

நம் போன்று பட்டாங்கமாய், பகிரங்கமாய் 

பல விஷயங்களைச் சொல்ல முடியுமா?

அவர்கள் செய்யாத, செய்ய முடியாத - ஏனென்றால், செய்ய முடியாத சூழ்நிலை - அரசியல் ரீதியாக அவர்கள் இருப்பதினால், வாக்கு வாங்குகிறவர்களால், நம் போன்று பட்டாங்கமாய், பகிரங்கமாய் பல விஷயங்களைச் சொல்ல முடியுமா?

பகுத்தறிவு, சுயமரியாதை என்பது அவர்களுடைய ரத்தத்தில் ஊறியது. அதை மாற்ற முடியாது. அதுதான் தனித்தன்மை. அதுதான் திராவிட மாடல். திராவிடன் என்று சொல்வதினுடைய அடிப்படை.

வயிறு முக்கியம்தான்; 

அதைவிட மிக முக்கியம் மூளை!

ஆகவே, போட்டி கிடையாது. எப்படி என்று கேட்டால், கூலி உயர்வு - போனஸ், மற்ற பிரச்சினைகள் - அதில் அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் எல்லாம் இருக்கும். அதுவும் தேவை. ஏனென்றால், தொழிலாளிக்கு வயிறு மிகவும் முக்கியம். அதற்குப் போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்.

பெரியார் என்ன சொன்னார் என்றால், வயிறு முக் கியம்தான்; அதைவிட மிக முக்கியம் மூளை என்றார்.

ஆகவே, திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது எந்த சங்கத்திற்கும் விரோதியோ, போட்டியோ கிடை யாது. மாறாக, ஒரு ஸ்பெஷலிஸ்ட் - பகுத்தறிவு ஸ்பெஷ லிஸ்ட் - சுயமரியாதை ஸ்பெஷலிஸ்ட்!

இவர் பொது மருத்துவர்; நீங்கள் நரம்பியல் மருத் துவரிடம் சென்று பாருங்கள்; சிறுநீரக மருத்துவரிடம் சென்று பாருங்கள் என்பார்கள்.

திராவிடர் தொழிலாளர் கழகம் தனித்தன்மையோடு இயங்கக்கூடியது

மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம் பொது மருத்துவர் போன்றவை. திராவிடர் தொழிலாளர் கழகம் இருக்கிறதே, அது ஸ்பெஷலிஸ்ட் - பகுத்தறிவு ஸ்பெஷலிஸ்ட். தனித்தன்மையோடு இயங்கக்கூடியது.

உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், முதலாளி என்றால், நம்முடைய நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வெளிநாட்டில் முதலாளி என்றால், முதல் போடுகிற ஒரே ஒரு ஆள்தான்.

நாட்டில் மூன்று வகையான முதலாளிகள்!

நம்முடைய நாட்டில் மூன்று வகையான முதலாளிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

அது என்னங்க, மூன்று வகையான முதலாளிகள் என்றால்,

ஒன்று, தொழிலுக்காக முதல் போடுகிறவர். சாதாரண வெற்றிலைக் கடை, மளிகைக்கடைக்கு முதல் போடு கிறவர்களிலிருந்து அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாக்கள் எல்லாம் முதலாளிகள்தான். நடமாடுகிற, முதல் போட்ட முதலாளிகள்.

அடுத்து இன்னொரு முதலாளி இருக்கிறார்; ஆந்திராவில் இருக்கிறார். அவர்தான் வெங்கடாசலபதி; அவர் கல் முதலாளி. அவர் நகரமாட்டார்; அவரிடம் சேரும் பணத்தைப் பார்த்து, அவரையே நகர்த்திக் கொண்டு வந்துவிட்டார்கள். எல்லா ஊர்களிலும் வசூல் செய்யவேண்டும் என்று.

 அவர் எந்த வேலையும் செய்வதில்லை. சொந்த முதலீடும் செய்கிறவர் அல்ல. வருகின்றவர்கள் உண்டிய லில் போட்டுப் போட்டு, பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர். ஆனால், சர்வ சக்தி உள்ள கடவுள் என்பார்கள் அவரை.

அதேபோன்று, நம்மாள் - தொழிலை ஆளுகின்றவர். தொழிலாளி. தொழில் என்கிற மூலதனம் நம்மாளிடம். முதல் போடுகின்ற மூலதனம் அவர்களிடம்.

ஒருவரிடம் உழைப்பு மூலதனமாக இருக்கிறது; இன் னொருவருக்குத் தொழில் நிதி மூலதனமாக இருக்கிறது. இரண்டும் சேருகிறது.

முதலாளியும் - தொழிலாளியும் சேர்ந்து, பிறக்கின்ற குழந்தைக்குப் 

பெயர்தான் லாபம்!

அய்யாதான் சொல்வார், தொழிற்சங்கங்களை வெறுப்போடு பார்க்கவேண்டிய அவசியமில்லை. பகுத் தறிவுப்படி சிந்தித்தால், முதலாளியும் - தொழிலாளியும் சேர்ந்து, பிறக்கின்ற குழந்தைக்குப் பெயர்தான் லாபம். சரியாக இல்லை என்றால், நட்டம் என்றாகிறது. உடலில் கோளாறு என்றால், நட்டம்தான்.

லாபம் எனக்கு மட்டும்தான் என்று முதலாளி சொல்ல முடியுமா?

ஆகவே, லாபத்தில் பங்கு கொடு.

தொழிலாளி - முதலாளி என்ற வாக்கியத்தை மாற்றி, பங்காளி என்று ஆக்குங்கள்; கூட்டாளி என்று ஆக்குங்கள்.

தொழிலாளி என்றாலும், முதலாளி என்றாலும் பேதம் இருக்கிறது. அதனால், முதலாளித்தன்மை ஒழிய வேண்டும்.

அப்படி வந்தால், சமத்துவம் வந்துவிடும்.

இதுதான் மிக முக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவுமே சோடை போனதில்லை

அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பது திராவிடர் தொழிலாளர் கழகம்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவுமே சோடை போனதில்லை. நம்முடைய சண்முகம் எம்.பி., அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது மிக அழகாகச் சொன்னார்.

பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று சொன்னால், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடை பெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மான மாகக் கொண்டு வருகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

உலக வரலாற்றிலேயே அற்புதமான சாதனை!

அன்றைய காலகட்டத்தில் கலைஞருக்கு அய்ந்து வயது. அவர் 1924 ஆம் ஆண்டு பிறந்தவர். 5 வயது குழந்தையாக இருந்தவர், பிற்காலத்தில் அவரே முதலமைச்சராகி, தந்தை பெரியாருடைய தொண்டரே, அதே கொள்கையை நிறைவேற்றம் செய்த வரலாறு - உலக வரலாற்றிலேயே அற்புதமான சாதனை - தேடி னாலும் கண்டுபிடிக்க முடியாது. இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்'. 

இது எப்பொழுதும் காலாவதியாகாது. சில கபோதிகள் வேண்டுமானாலும் காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாமே தவிர, கண் விழித்திருப்பவர்கள் சொல்ல மாட்டார்கள். 

இரண்டு முதலாளிகளைப்பற்றி சொல்லியாயிற்று. இன்னொரு முதலாளி இருக்கிறான்; அது யார் என்றால், பிறக்கும்பொழுதே நான் முதலாளி என்று சொன்னவன். பிறந்த ஜாதியினாலே நான் முதலாளி என்று சொன்ன வன்.

அதுதான் வருணாசிரம தர்மம் - இந்த நாட்டைத் தவிர, இந்திய நாட்டைத் தவிர, இந்து மதம் இருக்கின்ற நாட்டைத் தவிர, சனாதனம் இருக்கின்ற நாட்டைத் தவிர வேறு கிடையாது.

முதல் போடுகின்ற முதலாளி - அதற்கடுத்து கல் முதலாளி - அதற்கடுத்துப் பிறவி முதலாளி. 

‘‘எப்படி பிறவி முதலாளி?'' என்று சந்தேகம் உங்களுக்கு வந்தால், நீங்கள் எங்கேயும் போகவேண்டாம் - சுருக்கமாக சொல்கிறேன். இதோ என் கைகளில் இருப்பது அசல் மனுதர்மம் நூல்.

இன்றைக்குப் போராட்டம் - அரசியல் ரீதியாக இந்தப் போராட்டம்தான்.

சனாதனத்திற்கு எதிரானது சமதர்மம்

மனுதர்மத்திற்கு எதிரானது - மனித தர்மம்.

சனாதனம் என்றால் என்ன?

சனாதனத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று சொல்கிறார்களே, அந்த சனாதனம் என்றால் என்ன? மனுதர்மம்தான் சனாதன தர்மம். அதுதான் அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்பொழுது இருக்கின்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்குமேலாக இந்த இயக்கம் இந்தப் பணிகளை செய்துகொண்டிருக்கிறது? 

இதனுடைய தனித்தன்மை என்ன?

பிறவி முதலாளி என்கிற மூன்றாவது முதலாளி இருக்கின்றானே, அவனுக்கு என்ன ஆதாரம் என்றால், எல்லாவற்றையும்விட நான்தான் முதலில் - என்னை மாற்ற முடியாது என்பதுதான்.

நேற்றைய பணக்காரன் இன்றைக்கு ஏழையாகலாம். பெரிய பெரிய கம்பெனி நடத்துகின்றவர்கள்கூட, திவாலாகிவிடலாம். நேற்று வரையில் கோ-ஏர் விமானம் ஓடிக்கொண்டிருந்தது; இன்றைக்கு ஓடவில்லை. முன்பெல்லாம் ராஜாக்கள் இருந்தார்கள்; இப்பொழுது ராஜாக்கள் இல்லை. சீட்டுக் கட்டில்தான் இஸ்பட் ராஜாக்கள் இருக்கிறார்கள். வேறு எங்கும் ராஜாக்கள் கிடையாது. 

கடவுளுக்கு மேலே நாங்கள் என்று 

பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்!

ராஜாக்கள் போயாகிவிட்டது; ஆனால்,  பிறவி முதலாளி என்று சொல்லிக் கொள்கிறார்களே, கட வுளுக்கு மேலே நாங்கள் என்று பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள். 

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது -

கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது -

மந்திரங்கள் எங்களுக்குக் கட்டுப்பட்டவை - ஆகவே, எங்களை முதலில் தொழுங்கள் என்று சொல்கிறார்கள். கடவுள் இரண்டாவதுதான் என்றார்கள். அதுதான் பிறப்பால் ‘பிராமணர்'' பிறவி முதலாளி - இது மனுதர்மத்தில் இருக்கின்ற பகுதி.

இதை சொல்லக்கூடியதே திராவிடர் தொழிலாளர் கழகம். இதை மற்ற தொழிற்சங்கங்கள் வெளிப்படை யாகவோ, பகிரங்கமாகவோ சொல்ல முடியாது.

இதைச் சொல்வதுதான் திராவிடர் தொழிலாளர் கழகத்தினுடைய வேலை. ஏனென்றால், வேரிலிருந்து வருபவர்கள் நாங்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம்!

‘‘நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும்.'' எங்கே கிருமிகள் இருக்கின்றனவோ, அந்தக் கிருமிகளைக் கண்டுபிடித்து அழித்தால்தான், நோயை அழிக்க முடியும். இதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம்.

ஆகவே, திராவிடர் கழகம் என்பதே, தொழிலாளர் இயக்கம்தான்.

அந்த அடிப்படையில் நண்பர்களே, மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், மனுதர்மம்.

உலகத்தில் இப்படி ஒரு கொடுமையான  பிறவிப் பேதம் வலியுறுத்தும் மனுதர்ம சட்டம் என்பதை வேறு எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

நாம் யார்மீதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. சில பேர் இதை திசை திருப்புகிறார்கள். பாருங்கள், ‘பிராமணர்கள்'மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று.

வெறுப்பில்லை; 

அது மனித விருப்புப் பிரச்சாரம்!

இஸ்லாமியர்கள்மீது, கிறிஸ்தவர்கள்மீது அவர்கள் வெறுப்புப் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்தபொழுது, இங்கே இருக்கின்ற பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்துகொண்டு, ‘‘திராவிடர் கழகத்தில் பெரியார் பேசி யதை எடுத்து, அது வெறுப்புப் பிரச்சாரம்'' என்பார்கள். வெறுப்பில்லை. அது மனித விருப்புப் பிரச்சாரம்.

என்னிடம் ஒருமுறை இதயம் பேசுகிறது இதழுக்காகப் தாமரை மணாளன் என்பவர் பேட்டி கண்டபொழுது, ஒரு கேள்வி கேட்டார்.

‘‘நான் மனிதனை நேசிக்கிறேன்; 

ஆகவே, பிராமணர்களை வெறுக்கிறேன்!’’

‘‘சார், நீங்கள் ஏன் ஆண்டி பிராமிணாக இருக் கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

நான் இரண்டே வார்த்தையில் பதில் சொன்னேன், ‘‘நான் மனிதனை நேசிக்கிறேன்; ஆகவே, பிராமணர்களை வெறுக்கிறேன்'' என்றேன்.  ‘‘Prohuman, so Anti Brahmin'' என்றேன்.

மனிதர்கள் சமம் என்று நினைக்கின்றபொழுது, 

ஒருவன் எப்படி பிராமணனாக இருக்க முடியும்? 

இன்னொருவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்?

ஒருவன் எப்படி பார்ப்பானாக இருக்க முடியும்?

இன்னொருவன் எப்படி பறையனாக, பள்ளனாக, சக்கலியனாக இருக்க முடியும்?

சமத்துவம் என்று வருகின்றபொழுது,  எப்படி ஒருவன் மேலானவன் - இன்னொருவன் கீழானவனாக இருக்க முடியும்?

எல்லோரும் சமமானவர்கள் என்று சொல்லும் பொழுது, ஒருவன் தொடக்கூடியவன்; இன்னொருவன் தொடக்கூடாதவன் என்று எப்படி இருக்க முடியும்?

இதுதான் மிக முக்கியம்.

சனாதனத்தைப்பற்றி மனுதர்மத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள்?

தொழிலாளிகள் வேறு; 

சூத்திரர்கள் வேறு கிடையாது!

மனுதர்மம் 415 ஆவது சுலோகம்; 8 ஆவது அத்தியாயம்

‘‘தொழிலாளர்கள் ஏழு வகைப்படுவார்கள்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்

 பக்தியினால் வேலை செய்கிறவன்

 தன்னுடைய தேவடியாள் மகன்

 விலைக்கு வாங்கப்பட்டவன் 

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

 குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்

 குற்றத்திற்காக வேலை செய்கிறவன்''

என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.

சூத்திரன் என்கிற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தம். அப்படியென்றால், தொழிலாளிகள் வேறு; சூத்திரர்கள் வேறு கிடையாது.

தொழிலாளி = சூத்திரன்

சூத்திரன் = தொழிலாளி. இதுதான் சனாதனம்!

இதைத்தான் நாம் எதிர்க்கிறோம். இதை எதிர்ப்ப தற்காகத்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். தொழிற்சங்கம் என்ற முறையில் இந்தப் பணியை செய்கிறோம்.

அதற்கு என்ன நியாயம் என்றால், மனுதர்மத்தைத் தான் சாட்சிக்கு அழைக்கின்றேன். அந்த மனுதர்மத்தை எடுத்துச் சொல்லவேண்டும். சனாதனத்திற்கு அதுதானே சாசனம்.

சனாதனம் என்ற தத்துவத்திற்கு, நாம் எப்படி ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக்காட்டாகக் காட்டுகின்றோமோ, அதேபோல, சனாதன தத்துவம். தொழிலாளர்கள் இங்கே இருக்கிறீர்கள்; எல்லா இடங்களிலும் இதைச் சொல்லவேண்டும் நீங்கள். 

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' 

என்பதுதானே சமூகநீதி!

நாம் யார்மீதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல; எல்லோரையும் கட்டித் தழுவுகிறோம். பார்ப்பனர்களுக்குரிய பங்கைக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். 3 சதவிகிதமாக அதை நீங்கள் அனுபவியுங்கள். நீங்கள் ஏன் 300 சதவிகிதம் கேட் கிறீர்கள்?

இதுதான் எங்களுடைய கேள்வி!

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதானே சமூகநீதி - ‘திராவிட மாடல்'.

எல்லோருக்கும் எல்லாம் - பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்.

அனைவருக்கும் அனைத்தும் என்றால், பார்ப் பனர்களுக்கும் சேர்த்துத்தான். உங்களுடைய பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக நீங்கள் கேட்கிறீர்களே, இது என்ன நியாயம்?

உலகத்தில் தொழிலாளர்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் - ஆனால், நம்முடைய நாட்டில், பிறவி முதலாளிக்கு இருக்கின்ற சக்தி எப்படிபட்டது என்றால், 413 ஆவது சுலோகத்தில் இருப்பது என்ன?

‘அவாளின்’ தொழிற்சங்க விதி!

‘‘பிராமணன், சம்பளம் கொடுத்தேனும், கொடுக் காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.''

இந்த ‘அவாளின்' தொழிற்சங்க விதியை யாராவது ஏற்றுக்கொள்கிறீர்களா?

இதை சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறார்கள்; சிலர் தலையாட்டுகிறார்கள்; கூலிக்கு ஆட்களைப் பிடிக்கிறார்கள்; அதற்கு அண்ணாமலைகள் கிடைக்கிறார்கள்.

நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இது மானப் பிரச்சினையல்லவா?

மனிதர்கள் வெட்கப்படவேண்டிய விஷயமல்லவா?

சம்பளம் கொடுக்கவில்லை என்றால், சிவப்புக் கொடியை நட்டு விடுகிறோமே!

‘‘பிராமணன், சம்பளம் கொடுத்தேனும், கொடுக் காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.

ஏனெனில், அவன் பிராமணனுக்கு ஊழியஞ் செய் வதற்காகவே, அவனது வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கின்றவன்'' என்கிறது மனு தர்மம்!

உங்களையெல்லாம் 

சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே?

இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும் தோழர்களே! அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக சென்னை - தியாகராயர் நகரில் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘நான் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை; உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகி றேனே? என்றுதான் கவலைப்படுகிறேன்’’ என்றார்.

இது எவ்வளவு ஆழமான வார்த்தை என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

அதற்கு அடுத்து அந்த சுலோகம் 414 ஆவது சுலோகம் - அதில் உள்ளவற்றைப் பாருங்கள்,

‘‘சூத்திரன், எஜமானனால் வேலையிலிருந்து நீக்கப் பட்டு இருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது.''

அம்பேத்கர் அதனால்தான் சொன்னார், நான்கு மாடி கட்டடத்தை கட்டிவிட்டு, அதற்குப் படிகட்டுகள் கிடையாது. கீழே இருப்பவன் மேலே ஏறிப் போக முடி யாது என்றால், என்ன அர்த்தம்? இதுதான் அம்பேத்கர் எழுதிய முதல் கட்டுரை.

மாபெரும் புரட்சியாளர்தான் 

தந்தை பெரியார்

ஆகவே, ஜாதீயக் கொடுமையை, வருணாசிரமக் தர்மக் கொடுமையை எப்படி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

இதைக் கண்டறிந்து சொன்ன மாபெரும் புரட்சி யாளர்தான் தந்தை பெரியார் என்கிற மாமனிதர்.

இன்றைக்கும்  இதைச் சொல்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால், வேறு உண்டா?

நீங்கள் ஏன் சூத்திரர்கள்?

ஏன் இன்னொருவன் பிராமணன்?

முதலாளி நான்தான் என்றால், கைதட்டுவார்கள்; நீங்கள்தான் தொழிலாளி என்றால், கைதட்டுவார்கள்.

நீ ஏன் பிராமணன்? நான் ஏன் சூத்திரன்? என்றால், எல்லோரும் கைதட்டுவார்களா? என்றால், கொஞ்சம் பேர் கையை இழுத்துக் கொள்வார்கள்.

அதைச் சொல்வதற்குத் துணிவு வேண்டும்; அதற்குத்தான் திராவிடர் தொழிலாளர் கழகம் வேண்டும். அதுதான் அதனுடைய தனித்தன்மை.

அதைவிட இன்னொரு கொடுமையை சொல்கிறேன், மனுதர்மம் 417 ஆவது சுலோகத்தில்,

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழு வகை தொழிலாளியான சூத்திரனிடமிருந்து அவனுடைய பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எஜமானன் எடுத்துக்கொள்ளத் தக்க பொருளை உடைய அந்த சூத்திரர், தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரர் அல்ல!''

இதன்படி உலகத்தில் அவன்  பிறவி அடிமை - சொந்தமே கிடையாது. 

ஆகவேதான், அவன் கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் அவை பிராமணர்களுக்குச் சொந்தம்.

‘பிறவி முதலாளிகள்' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது எவ்வளவு பொருத்தம்? எவ்வளவு சரியானது என்பது இப்பொழுது புரிகிறதா?

மனிதர்களாக ஆக்குவதும் - மாற்றுவதும்தான் திராவிடர் கழகத்தினுடைய தொழிலாளரணி!

எனவே, முதல் போட்ட முதலாளி - கல் முதலாளி  - பிறவி முதலாளி - இந்த மூன்று முதலாளிகளையும், மனிதர்களாக ஆக்குவதும் - மாற்றுவதும்தான் திராவிடர் கழகத்தினுடைய தொழிலாளரணி. இந்தப் பணி எல்லா தொழிற்சங்கத்திற்கும் அடிப்படைப் பணி!

இந்த நாட்டில் மட்டுமே உள்ள நோய்க்கு - அந்த நோய்க்கு பெரியார் - பகுத்தறிவு - சுயமரியாதை - திராவிடம் என்பதுதான் விடியல். 

தன்மானத்தைப் பெறுங்கள் - 

இனமானத்தைப் பெருக்குங்கள்!

அதே நோக்கில் தொழிலாளர்களே பிரச்சாரம் செய்யுங்கள் - தன்மானத்தைப் பெறுங்கள் - இனமானத்தைப் பெருக்குங்கள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

தந்தை பெரியாரின் ‘‘முதலாளித்தன்மை ஒழிக'' என்ற நூல் வெளியீடு


22

தந்தை பெரியாரின் ‘‘முதலாளித்தன்மை ஒழிக'' என்ற நூலை மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட, அரூர் ராஜேந்திரன் (தி.மு.க.), கே.சி.எழிலரசன் (தி.க.) மற்றும் ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர்.


திராவிடர் கழக தொழிலாளரணியின் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



'தொழிலாளர்' பற்றிய பெரியாரின் புரட்சிகரமான நிலைப்பாடுகள் என்ன? பாடம் எடுத்தார் ஆசிரியர்!

 முதலாளி முதல் போடுகிறான்; தொழிலாளி உழைப்பைப் போடுகிறான்;

லாபம் கிடைத்தால் தொழிலாளிக்கு பங்கு தேவை! நிர்வாகத்தில் உரிமை கொடு!

30

தமிழர் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு பட்டாடை அணிவித்தார். அமைச்சருக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி கழகத் தலைவர் சிறப்பாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

தாம்பரம்.மே,21- திராவிடர் கழக தொழிலாளரணியின் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

திராவிடர் கழக தொழிலாளரணியின் 4 ஆம் மாநில மாநாடு மேற்கு தாம்பரத்தில் உள்ள டி.ஜி.பி. திருமண குளுமை மண்டபத்தில், 20-5-2023, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. 

திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் தலைவர் அ.மோகன் தலைமையேற்க, பொருளாளர் மா.இராசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பேரவையின் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கொடியேற்றினார். 

தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி உரையாற்றினார். 

தொடர்ந்து தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மு. சண்முகம் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார். 

நிகழ்வில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், முனைவர் துரை. சந்திர சேகரன், தொழிலாளரணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, தொ.மு.ச. பேரவையின் பொறுப்பாளர்கள் நடராசன், செயலாளர் வேலுச்சாமி, தனசேகரன், பொன்னுராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஓசூர் பாகலூர் ஏசியன் பெரிங் ஒர்க்கர்ஸ் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அ.கிறிஸ்து நேசன், பெ.நாராயணன், செ.பாபு, ராமச்சந்திரன் ஆகியோர் வனவேந்தன் முன்னி லையில், 1 ஆண்டு விடுதலை சந்தா மற்றும் கோரிக்கை மனுவை தமிழர் தலைவரிடம் அளித்தனர். 

தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மாநிலங் களவை திமுக உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் தமிழர் தலைவருக்கும், ஆசிரியர் அவர்கள் மு.சண்முகத்திற்கும் அடுத்தடுத்து ஆடை அணிவித்து மரியாதையை பகிர்ந்து கொண்டனர். 

தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மாநிலங் களவை திமுக உறுப்பினர் மு. சண்முகம் பேசுகையில், 

தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் பல்வேறு சட்டசிக்கல்களைக் குறிப்பிட்டு இதில் தொ.மு.ச.பேரவை என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என்று பட்டிய லிட்டார். மேலும், ‘தமிழர் தலைவர் வழிகாட்டியபடி நாங்கள் இயங்குகிறோம்’ என்று கூறி உரையை நிறைவு செய்தார். 

31

தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் மாண்புமிகு சி.வி. கணேசன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

மாண்புமிகு அமைச்சர் சி.வி. கணேசன் அவர்களுக்குக் கழகத் தலைவர் சிறப்பாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கருத்தரங்கம், 

தீர்மானங்கள் நிறைவேற்றம்

தொடர்ந்து, “தொழிலாளியா? பங்காளியா?” எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், “ஊதியத்தில் ஆண், பெண் வேறுபாடு ஏன்?” எனும் தலைப்பில் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ”தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை, ஏன்?” எனும் தலைப்பில் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, “ஒப்பந்தத் தொழிலாளர் முறை நீடிக்கலாமா?” எனும் தலைப்பில் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். 

அதைத் தொடர்ந்து தீர்மான அரங்கை கும்பகோணம் குருசாமி தொடங்கி வைத்தார். 22 தீர்மானங்களை திராவிடர் கழக தொழிலாளரணியின் மாவட்டப் பிரதிநிதிகள் முன் மொழிய கூடியிருந்த தோழர்கள் அதை ஒருமனதாக நிறைவேற்றித் தந்தனர். 

திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் க. வீரய்யன் நன்றி கூறினார்.

திறந்த வெளி மாநாடு

திராவிடர் கழக தொழிலாளரணியின் 4 ஆம் மாநில மாநாடு, தாம்பரம் பெரியார் நகர், பாரதி திடலில் உள்ள சண்முகம் சாலையில் திறந்தவெளி மாநாடாக, 20-05-2023, சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 9:30 மணிக்கு நிறைவுற்றது. தொழிலாளரணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்தவெளி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.

பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செய லாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரையாற்றினர். 

தமிழர் தலைவர் தலைமையுரை

அதுதான் திராவிட நாகரிகம்!

 திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றிய ஆசிரியர்,

“100 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1916 இல், நம்மை இணைக்கின்ற ஒரு சொல் கிடையாது. சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் பல்வேறு ஜாதிகளாக பிரிந் திருந்தோம் என்றார் தொடக்கத்தில், பின்னர், “நமக்கென்று வரலாறு இல்லையா?” என்று கேள்வி கேட்டார். ‘இருக்கிறது, அதுதான் திராவிட நாகரிகம்!’ என்று மயிர்க்கூச்செரியும் படியாக பதில் சொன்னார். அதிலும் ஒரு கேள்வியாக, ‘எது திராவிட நாகரிகம்?’ “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” “அனைவருக்கும் அனைத்தும்!, எல்லோருக்கும் எல்லாமும்” என்று அடுக்கி, இதுதான் திராவிட நாகரிகம்’ என்றார் பலத்த கைதட்டல்களுக்கிடையே. இப்படிப்பட்ட வரலாற்றை மீட்டு நமக்கு, “பார்ப்பனரல்லாதார்” என்று குறிப்பிட்டனர். பின்னர் எதிர்மறையான பெயர் எதற்கு? ஆகவே ’திராவிடர்’  என்ற நேர்மறையான பெயர் தந்தை பெரியாரால், 1944 இல் சேலத்தில் “அண்ணா தீர்மானம்” என்ற பெயரில் சூட்டப்பட்டது.

நீதிக்கட்சி தொடங்கிய பள்ளிக்கூடம்!

தொடர்ந்து, ‘திராவிடர் என்றாலே தொழிலாளர்கள்தான்’ என்று சொன்னவர், அதற்கு ஆதாரமாக மனுதர்மத்தை எடுத்துக் கொண்டு விளக்கினார். வரலாற்றில் திராவிடர் கழகம் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றுதான் விளிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தினார். அதனுடைய தொடர்ச்சியாக அண்ணா, நீதிக்கட்சி எங்கள் பாட்டன்! என்று சொன்னதையும் அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கிருக்கும் திராவிட மாடல் ஆட்சி! மேலும் அவர், “1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முதல் முதலில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக்கூடங்களை திறந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது தெரியுமா?” என்று கேள்வி கேட்டு, “லிணீதீஷீuக்ஷீ sநீலீஷீஷீறீs" என்று பதிலும் சொன்னார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று திராவிடர் இயக்கத்தின் மூல வரலாற்றை திறந்தவெளி அரங்கில் எடுத்து வைத்தார்.

தொழிலாளர்களுக்கு 7 மணி நேரம் வேலை!

தொடர்ந்து, 91 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கத்தின் பெருமைமிகு ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தினார். அதாவது, சமீபத்தில் 12 மணி நேரம் வேலை தொடர்பாக எழுந்த சர்ச்சையும், திராவிடர் கழகமும், மற்ற கூட்டணிக் கட்சிகளும் ஆற்றிய எதிர்வினையும் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மே தினத்தில் சொன்ன பதிலையும் நினைவூட்டி,  தந்தை பெரியார் அளித்த சுயமரியாதை - சமதர்ம வேலைத்திட்டத்தில் 7 ஆவது திட்டம் என்ன தெரியுமா? என்று கேட்டு, “தொழில் செய்கிறவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது! அவர்களின் வாழ்க்கை நிலை உயர்த்தப்பட கூலி உயர்வு வேண்டும்! இலவச நூல் நிலையம் அமைத்து அறிவைப் பெருக்க வேண்டும்!” என்று பதில் சொன்னார். தொடர்ந்து சனாதனம், சமதர்மம் ஆகிய இரண்டு  தத்துவங்களுக்கிடையே நடக்கின்ற போராட்டம் இது. அறிவைக் கொடு என்பது திராவிடம்! அறிவைக்கொடுக்காதே என்பது ஆரியம்? என்று அந்த தத்துவங்களின் குணங்களையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 1907 சென்னை பல்கலைக்கழகம், கல்வி நிலை, உத்தியோகநிலை முதல் எம்.ஜி.ஆர், மோடி வரை பல பிரச்சினைகளை கொள்கை ரீதியாக சம்பத்தப்படுத்தி, 2023 செப்டம்பருக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2024 க்கு பிறகு மோடி அரசே; பி.ஜே.பி.அரசே செல்லாமல் போய்விடும் என்று சிந்தனையும் தோய்ந்த வண்ணம் பேசி, பொதுத்துறையை தனியார் மயமாக்குகின்ற ஒன்றிய அரசின் மோசடியைத் தகர்க்க, தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டுவரவேண்டும். அதற்குப் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் நமது அடுத்த இலக்கு அதுதான்! என்று சொல்லி, மக்களைப் பார்த்து, ‘இது எங்களுக்காக அல்ல, உங்கள் எதிர்காலத்திற்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திறகாக’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரை

பெரியாருக்கு முன்! பெரியாருக்கு பின்!

முன்னதாக பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘பெரியாரை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. நான் ஆசிரியர் அய்யாவைத்தான் பெரியாராகப் பார்க்கிறேன். நான் ஆசிரியர், கவிஞர் எப்போது அழைத்தாலும் வந்துவிடுவேன். காரணம், நான் இப்படி நன்றாக உடையுடுத்தி இங்கு உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தான்! அதனால் நான் பெரியாரை, கி.மு., கி.பி., போல, ’பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்’ என்று பிரித்து தமிழ்நாட்டைப் பார்க்கிறேன்’ என்றார். திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றி மிகக்குறுகிய காலத்தில், 1,07,000 பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுத்திருக்கிறோம்’ என்றார், 13 லட்சத்திற்கும் மேற்பட்டோரை புதிதாக நலவாரியத்தில் இணைத்திருக்கிறோம். அதே போல, பெல்  தொழிலாளரணிச் செயலாளர் சேகர், சொன்னதை நிறைவேற்றுவேன் என்றார். விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகிக்கொண்டிருந்தது. இப்போது கரூர் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் உரியதொகை 24 மணி நேரத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வழங்கப்பட்டது. இதுதான் திராவிட மாடல் அரசு என்று பெருமிதத்துடன் என்று பல்வேறு தகவல்களைக் கூறி, உரையை நிறைவு செய்தார்.  

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!

ஆசிரியர் பேசுவதற்கு முன்பு, பல்வேறு கட்சித்தோழர்கள் ஆசிரியருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தனர். தொழிலாளரணிச் செயலாளர் மு. சேகர் தலைமையில் மாநாட்டு நிதியாக ரூபாய் ஒன்றரை லட்சம் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இதில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி ஏழுமலை, சிவகுருநாதன், நிலவன், ஆத்தூர் சுரேஷ் உள்ளிட்ட மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

நன்றியுரைக்கு முன்னதாக கடைவீதி வசூலில் ஈடுபட்ட இருபால் தோழர்களுக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். இறுதியில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். 

நிகழ்வில் கழகப்பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  தலைமைக்கழக அமைப்பாளர்கள் வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், ஈரோடு த,.சண்முகம் மற்றும் திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன்,  வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் உத்தமவிஜயன் உள்ளிட்ட மாநில, மாவட்டங்களின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 பெரியார் பெருந்தொண்டர் ஞானசேகரன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அரூர் இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்டக்கழகத் தலைவர் எழிலரசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சுமதி கணேசன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணிச் செயலாளர் கண்ணன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநிலம் தழுவிய அளவில் தோழர்கள் வந்திருந்து மாநாட்டை சிறப்பித்திருந்தனர்.

17

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில திறந்தவெளி  மாநாட்டில்  கலந்து கொண்டோர் (20.5.2023)

திங்கள், 6 பிப்ரவரி, 2023

திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

 தாம்பரத்தில் மே 7இல் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநில மாநாடு

தொழிலாளிகளை பங்காளியாக்குவதே நமது இலக்கு! 

தமிழர் தலைவர் அறிவிப்பும் - கருத்துரையும் -திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 

16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை, ஜன.31- திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30.1.2023) பிற்பகல் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 :

அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல திராவிடர்  தொழிலாளர் சங்க மத்திய சங்க தலைவர் இராமசாமி அவர்கள் 17.12.2022ஆம் தேதி இயற்கை எய்தினார் என்பதை  ஆழ்ந்த வருத்தத்துடன் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 :

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர் போல் மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும். (14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்ச வார்த்தையின் போது இது ஏற்றுக் கொள்ளப்பட்டது).

தீர்மானம் 3 :

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை தனது உழைப்பால் உயர்த்திய ஓய்வு பெற்றவர்களக்கு கடந்த 7 (ஏழு ஆண்டு) ஆண்டுகளாக ஓய்வு  பெற்றவர்களின் ஊதியத் துடன் காலமுறையான ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உயரும் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்காமல் நிலுவையில் உள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நவம்பர் 2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என உத்ரவிட்ட பின்னரும் அதை நிறைவேற்றாமல் அரசும், ஓய்வூதிய பொறுப்பாட்சியரும், அதை எதிர்த்து தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கைகளை  உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் தலையிட்டு 208% புள்ளிகள் உயர்ந்த போதும் 119% மட்டும் பெற்றுக் கொண்டுள்ள சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 :

கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக தொழிலாளர்கள் வேலைக்கு (ஓட்டுநர், நடத்துநர் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள்) அமர்த்தப்படவில்லை. எனவே, பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன் னுரிமை அளித்து உடனடியாக புதிய தொழிலாளர்களை பணியமர்த்தப்பட வேண்டும். தி.மு.க. அரசு பொறுபேற்றதற்குப் பின் சுமார் 135 பேருக்கு மட்டும் வாரிசு வேலை வழங்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் பாராட்டுகிறது.

தீர்மானம் 5 :

14ஆவது ஊதிய ஒப்பந்தம் சிறப்பாக முடிந்தாலும் பல போக்குவரத்து கழகங்களில் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதே போல் கழக ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மின் வாரியம் போல் அனைத்து ஓய்வு கால பணப் பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும நாள் அன்றே வழங் கப்பட வேண் டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6 :

கடந்த 1.4.2022 முதல் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இறந்த தொழிலாளர்களுக்கு அவர் களின் ஓய்வு கால பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. அவை உடனே வழங்கப்படவேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7 :

14ஆவது ஊதிய ஒப்பந்தம் (12/3) பெரும்பான்மை சங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாக ஊதிய உயர்வு வழங்கிய திராவிட மாடல் தி.மு.க. அரசுக்கு நமது நன்றி. ஆனால், ஊதிய ஒப்பந்த சம்பள உயர்வு 1.9.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்தம் 24.8.2022 அன்று காலதாமதமாக நிறைவேற்றப்பட்டதால் 1.9.2019 முதல் 31.8.2022 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்றவை மாற்றியமைக்கப்படவேண்டும்.

தீர்மானம் 8 :

வருகின்ற 30.1.2023ஆம் தேதி அன்று  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாநில தொழிலாளர் அணி கலந் துரையாடல் கூட்டத்திற்கு அதிக அளவில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 9 :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி பாலாறு- பொருந்தலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் (CWSS-175)  பழனி-2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

நிரந்தத்தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்ததாரரை நியமனம் செய்யக் கூடாது. பணியின்போது விபத்தினால் உயிரிழந்த, ஊனமுற்ற தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறையால் பணிச் சுமை பல மடங்கு கூடுவதால் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணி நேரம் வரைமுறைப் படுத்தப்படுவதோடு உரிய பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கி பணியாளர்கள் அனைவருக்கும் E.S.I., PF பிடித்தம் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்ததர வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10 :

சேலம் காரிப்பட்டியில் செயல்படும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் சுற்றுப் புறத்திலுள்ள தொழிலார்களைப் பணியமர்த்தி அவர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய சம்பளம் ESI, PF போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல நடத்துவதை கண்டிப்பதுடன் மாசுக் கட்டுப்பாடு வாரியமும், தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆய்வு செய்து தொழிலாளர் களுக்கு விரோதமாக செயல்படும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிருவாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 11 :

ஒப்பந்ததாரரிடம் முதன்மை வேலை அளிப்பவர்கள் ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்குகிறார்கள். ஒப்பந்ததாரர் ஒப்பந்த உரிமம் பெற்று ஆண்டுக்கு ஆண்டு புதுப்பித்து வேலை செய்கிறார்கள். ஆனால், அரசு ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் 1970 (CLR&A act 1970) சட்டத்தை அவர்கள் முறைப்படுத்துவதில்லை.

மேலும் ஒப்பந்தம் அளிக்கும முதன்மை வேலையளிப்பவர் தொடர்ச்சியாக வேலைகளையும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குகிறார்கள். இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஒப்பந்ததாரருக்கு வழங்கும் வேறு தொடர்ச்சியில்லாத வேலைகளை மட்டும் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசு இயற்றியுள்ள சட்டம் தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் சட்டமாகும். ஒன்றிய - மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

ஒப்பந்தம் வழங்கும் முதன்மை வேலையளிப்பவர் ஒப்பந்ததாரர்களை மாற்றி ஒப்பந்தம் வழங்கும்போது ஏற்கெனவே அந்தப் பணிகளை செய்துவந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணிகள் வழங்குவதில்லை. எனவே, ஒப்பந்ததாரர் மாறினாலும் ஏற்கெனவே பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்காத வண்ணம் அந்தப் பணியாளர்களுக்கே வேலை வழங்கும் வகையில் ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 12 :

100 நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தித் தரவேண்டும்.

100 நாள் வேலை ஊதியம் ரூ.250 ஆக உயர்த்தித் தரவேண்டும்.

ஒவ்வொரு அட்டைதாரருக்கும் கட்டாயம் 150 நாள்கள் வேலை தரவேண்டும்.

விவசாயத் தொழிலாளர்கள் விவசாயம் செய்யக்கூடிய நேரத்தில விபத்து ஏற்படும்போது அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆண் - பெண் ஊதியம் சமமாக வழங்கப்பட வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

தீர்மானம் 13 :

ESI கார்ப்பரேசன் மூலமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் ESI கார்ப்பரேசன் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரூ.20,000/-க்கு அதிகமாக உள்ளவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை எனக் கூறியுள்ளது. ஆகவே, ESI கவரேஜ் இல்லாத தொழிலாளர்களுக்கு அந்தந்த தொழிற்சாலைகளே மருத்துவ செலவை சரி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

தீர்மானம் 14 அ:

தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில உள்ள அனைத்து அமைப்பு சாரா கட்டுமானத் துறை சார்ந்த தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் நலவாரிய சமூக நலத் திட்டங்களை எடுத்து கூறி அவர்களை நமது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து நல வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தர நமது சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் சங்கப் பணிகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் வழியுறுத்தப்படுகிறது.

தீர்மானம் 14ஆ :

நமது சங்கப் பணிகளை எளிமைப்படுத்தி நமது சங்கத்தை விரிவுபடுத்தும் வகையில் மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதியில் புதியதாக சேர்க்கும் உறுப்பினர்களை ஒன்று இணைக்கும் வகையில் அப்பகுதியில் 25 உறுப்பினர்களுக்கு மேல் சேர்ந்தால் அங்கு கிளை சங்கம் துவங்கி பொறுப்பாளர்களை நியமித்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் நலனில் கலந்து கொள்வதோடு அவர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளையும், வாழ்வாதார  பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கிடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 14இ :

தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல், கல்வி உதவித் தொகைகள், உதவித் தொகைகள் மற்றும் பென்சன் உதவி தொகைகளைப் பதிவு  செய்தால் மாத கணக்கில் நலவாரிய பணிகள் நீண்ட கால தாமதம் ஆகிறது. விண்ணப்பம் செய்தால் கிராம நிருவாக அலுவலர் காலதாமதம் செய்கிறார். தமிழ்நாடு நல வாரியத்தில் பதிவு பெற்ற விண்ணப்பங்களை / தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க அரசு துறைகளை வழியுறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 14ஈ :

தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வு பெறும வயதில் ஓய்வு ஊதியமாக ரூ.1000 என்பதை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் ரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 14 உ :

தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில பதிவு செய்து அட்டை பெறும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போல் வாரியத்திற்கும் எளிமையான காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி பதிவு அட்டையை பயன்படுத்தி மருத்துவ உதவியாக ரூ.500000 (ரூபாய் அய்ந்து லட்சம் மட்டும்) வரை காப்பீடு பெற தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 15அ :

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் அரசு மின் பணியாளர்களே மின் இணைப்புப் பணிகளுக்கு அரசு விதிகளுக்கு புறம்பாக அவர்களே ஆள் வைத்து செய்து கொள்கிறார்கள். உரிய உரிமம் பெற்று அப்பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா மின் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதைத் தடுத்து இப்பணியினை வேலை இல்லா திண்டாட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களிடமே வழங்கிட உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசையும் மின் பகிர்மான கழகத்தையும் வலியுறுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 15ஆ :

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வருவாய் வருவதைத் தடுத்திடும் நோக்கில் வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு தருவது. இதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து முடித்து, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசுக்கும் மின் வாரியத்திற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உரிய வருவாய் ஈட்டிட ஆவன செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் திராவிட மாடல் அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 16அ :

ஒன்றிய மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். சமூகநீதியை ஒழித்துக்கட்டுவதற்காக பொதுத்துறை பங்குகள் விற்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசுத் துறை நிறுவனங்கள் பொதுத் துறைகளாக மாற்றப்படுவதை கைவிட்டு சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

தீர்மானம் 16ஆ :

ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என வலியறுத்துகிறோம்.

தீர்மானம் 16இ :

ஒன்றிய அரசின் நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் 80% பணியமர்த்ப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

- தீர்மானங்களை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  வி.மோகன் முன்மொழிந்தார்.