பாகுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகுபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஜாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலாச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது (பதவி உயர்வு வழக்கு ஆணை)


  

உயர் நீதிமன்றம் உத்தரவு

29

மதுரை, நவ. 4- நெல்லை யைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாட்டில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற் றேன். என்னுடன் தேர் வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பின ராக இருப்பதால் எனக் குப் பணி நியமன ஆணை வழங்க மறுத்துவிட்டனர். பணி நியமனம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டது. அதன்பிறகும் பணி வழங்காததால் மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கிலும் எனக் குப் பணி வழங்க உத்தர விட்டதால் 2013இல் மணிமுத்தாறு பட்டாலி யன் காவலராக நியமிக் கப்பட்டேன். 

பின்னர் எனக்கு 2007-2008 ஆண்டில் தேர்வானவர்களுடன் சேர்த்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு கோரி மனு அளித்தேன். என் கோரிக்கையை நிராகரித்து கமாண்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி மூப்பு, பதவி உயர்வு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண் டும்" என்று கூறப்பட்டி ருந்தது.

இம்மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசா ரித்தார். அரசு வழக்குரை ஞர் வாதிடுகையில், "பணி மூப்பு என்பது நிரந்தர பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு தான் வழங் கப்படும். முன்தேதியிட்டு பணி மூப்பு கோர முடியாது" என்றார். 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் அதிகாரி கள் சிறுபான்மையினரை சமூக விரோதிகளாக சித் தரித்து அவர்களின் உரி மைகள் மற்றும் வளர்ச் சியை தடுக்கும் உள்நோக் கத்துடன் செயல்படுவ தாக மனுதாரர் வழக்கு ரைஞர் கூறியதை புறக் கணிக்க முடியாது. மனு தாரரை போன்றவர்க ளின் வேதனையை போக் குவது நீதிமன்றத்தின் கடமை. மனிதர்களாக பிறக்கும் யாவருக்கும் தான் எந்த வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர் மானிக்கும் உரிமை உண்டு. பெற்றோர்கள், பிறக்கும் இடம், இனம், நிறம், மொழி, ஜாதியை தேர்வு செய்து பிறக்க முடியாது. 

இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு களை வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் அனைவருக்கும் சமூகத் திற்காக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். ஜாதி, இனம், நிறம், பிறக்கும் இடம், கலாச்சார அடையாளங்கள் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. நாட்டின் நல னுக்கு எதிரானவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்ப வர்கள் என மோசமான நடத்தை கொண்டவர் களை மட்டுமே தடுக்க வேண்டும். அப்படி எந்த தடையும் இல்லாத நிலை யில் ஒருவருக்கு பணி மற்றும் பதவி உயர்வு வழங்குவதை தடுக்கக் கூடாது. 

பொறுப்பான குடி மகன்களாக இருப்பவர்க ளுக்கு தடை விதிக்காமல், தேசப்பணியில் தங்களின் பங்களிப்பை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்த 21ஆவது நூற்றாண்டில் அனைவரின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். குறிப்பாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். இல்லாவிட் டால் மனுதாரர்களை போன்றவர்கள் பாதிக்கப் படுவர்.

மனுதாரர் 5 ஆண்டு தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அதி காரிகள் தான் காரணம். எனவே, மனுதாரருக்கு 2007-2008 ஆண்டிலி ருந்து பணி மூப்பு வழங்க மறுத்து பிறப்பித்த உத்த ரவு ரத்து செய்யப்படுகி றது. 

மனுதாரருக்கு 2007--2008 ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுடன் பணிமூப்பு வழங்க வேண்டும். பணி மூப்பை 4 வாரத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள் ளது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

“மகப்பேறு விடுப்பு: பாகுபாடு காட்டக் கூடாது” தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

சென்னைஆக.21 மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீமின்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்ததுஇந்த சலுகைபணி வரன் முறைப்படுத்தப்படாததற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டதுஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறிசென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜகுருஉயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய் திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.8.2021) விசாரணைக்கு வந்ததுஅப்போது நீதிபதிகள் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும்வரன்முறைப் படுத்தப் படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாதுமகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகு பாடும் காட்ட கூடாது எனவும்அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


மகப்பேறு விடுப்பு : நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுப்படுவதில்லை

 

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னைசெப்.17 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போலபணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திருமண மான பெண் அரசு ஊழியர் களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததுஇந்த சலுகைபணி வரன் முறைப்படுத்தப்படாததற் காலிக பணியாளர்களுக்கும் நீட் டித்து 2020-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

தற்காலிக ஊழியர்கள்

ஆனால்இந்த அரசா ணைகள் முறையாக அமல் படுத்தப்பட வில்லைபல மாவட்டங்களில் அரசு மருத் துவமனைகளில் பணிபுரியும்பணி வரன் முறைப்படுத் தப்படாததற்காலிக பெண் பணியாளர்கள்மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லைஅவர்களது விண்ணப் பங்கள் நிலுவையில் உள்ளனதற் காலிக அரசு பணியாளர்களுக் கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ குரு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பாரபட்சம் இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிநீதிபதி ஆதி கேசவலு ஆகி யோர் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போதுமகப்பேறு விடுப்பில் பார பட்சம் காட்டக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து கூறினர்இந்த நிலையில்இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

முடித்து வைப்பு

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்மகப்பேறு விடுப்பு வழங் குவதில் வரன்முறை செய்யப் பட்ட ஊழியர்களுக்கும்வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே அரசு பாரபட்சம் ஏதும் காட் டுவதில்லைவரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால்ஊதியத் துடன் கூடிய மகப்பேறு விடுப்பை பெற்றுக்கொள்ள லாம்மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக (ஓர் ஆண்டுஅதிகரித்து கடந்த ஆகஸ்டு 23-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள்வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.