வாழ்நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 நவம்பர், 2022

ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ்: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

 

சென்னை, மே 25  ஓய்வூதியர்களுக் கான வாழ்நாள் சான்றிதழை, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மற்றும் இ-சேவா மய்யங்கள் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பான அர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடத் தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டு விலக்கு அளித்து உத்தர விடப்பட்டது. இந்நிலையில் தற் போது அது மீண்டும் அமலுக்கு வந்து, எளிமைப்படுத்தப்பட்டுள் ளது.அதன்படி, இனி பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டி.எல்.சி. (எ) டிஜிட்டல் லைப் சான்றிதழ் (வாழ்நாள் சான்றிதழ்) பெறமுடியும். இந்திய அஞ்சல் வங்கியின் சேவைகளுடன் இந்த பயோமெட்ரிக் முறை வழியாக அப் டேட் செய்யும் வசதி இணைக்கப் பட்டுள்ளது. ஜீவன் பிரமான் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழை பெற, தமிழ்நாடு வட்டத்தின் இந்திய அஞ்சல் ஜீவன் பிரமான் இணைய தளத்தில் போதுமான உள்கட்ட மைப்புகள் வசதிகள் செய்யப்பட் டுள்ளன.

இதை கூடுதலாக தகவல் திரட்டுவோரும் பெற முடியும். இவ்வசதிக்காக தமிழ்நாட்டில் 11,018 வங்கி அணுகல் புள்ளிகள் மற்றும் 14,723 வங்கி சேவை வழங்குநர்கள் உள்ளனர். சேவைகளை வழங்கு வதற்கு ஒரு டிஎல்சி-க்கு (வாழ்நாள் சான்றிதழ்) ரூ.70 வசூலிக்க முன்மொழிந்துள்ளனர்.ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர் ஓய்வூதியம் பெறுவோர் பெயர், ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் அய்.டி (பதிவு ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்துடன் ஆதார் எண்ணை ஏற்கனவே இணைத்திருக்க வேண் டும்), முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றின் விவரங்களை இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கியுடன் பகிரவும்.

நடப்பு ஆண்டு ஜூலை முதல், இவற்றை முறையாக திரட்டும் செயல்முறையை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதம், ஓய்வூதியம் பெறு வோர் அவர்களின் வசதிக்கேற்ப சேவையை பெறலாம். ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் பெற எண்ணுவோர், பின்வருபவனவற்றில் ஏதேனும் ஒன்றின் சேவை இடத்தை பயன்படுத்தி தங்களுக்கான சேவையை பெறலாம்.

அ) இந்திய அஞ்சல் கட்டண வங்கி கதவுடன் படி சேவை.

ஆ) இ-சேவா மய்யங்கள், பொது சேவை மையங்கள்.

இ) ஜீவன் பிரமான் போர்ட்ட லுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் சாதனம் கொண்ட ஓய்வூ தியர் சங்கங்களுடன் இணைக் கப்பட்ட இடங்கள் இப்படியாக இ-சேவா மய்யம், சிஎஸ்சி, ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் பயோ-மெட்ரிக் சாதனங்களை கொண்டிருப்பதால், வயதான ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய அலுவலகம், கருவூலங் களுக்கு நேரில் வந்து கூடுதல் சேவை களை செய்வதற்காக சிரமப்படுவதை தவிர்க்க முடியும்.

ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழ் வீட்டுக்கே சென்று பெறும் திட்டம் அமல்

 

சென்னை, ஜூன் 1 அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்தல், அஞ்சல் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தை பயன்படுத்தி ‘ஜீவன் பிரமான்’ இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையில் வாழ்நாள் சான்றிதழை நேர்காணலில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கும் நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதை கருத்தில்கொண்டும், அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று ‘ஜீவன் பிரமான்’ இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய 5 முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந் நிகழ்வில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி நிறுவன தலைமை பொதுமேலாளர் குருசரண் ராய் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.