நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2024

அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்


விடுதலை நாளேடு

 சென்னை, மே 19 அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர் களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை நேற்று (18.5.2024) வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல் நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில்(https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.

அயலகத் தமிழர் (வெளிநாடு): இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும்/கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearanceபெறப் பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவர்.
அயலகத் தமிழர் (வெளிமாநிலம்): இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதி யுடையவர்கள் ஆவார்கள். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15ஆம் தேதி முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம்.

விபத்துக் காப்பீடு: அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் இவ் விபத்து காப்பீட்டில் சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) ரூ. 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.395+ ஜிஎஸ்டி தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.10,00,000 காப்பீட்டு தொகைக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.700+ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான இக்காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் பேரில் விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தி இணையலாம். இத்திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்டரி பை-பாஸ் கிராப்ட்ஸ், இதய வால்வு அறுவை சிகிச்சை, பக்கவாதம், மாரடைப்பு, கோமா, நோய்கள் வரும்.

கல்வி உதவித் தொகை திட்டம்: இத் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்தி லுள்ள மகன்/மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக் கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு ரூ.3000 உதவித் தொகை, 11 மற்றும் 12ஆம் வகுப்பு (மேல்நிலைக் கல்வி) -ரூ.4000, தொழிற் பயிற்சி கல்வி, பொறியியல் பட்டயப் படிப்பு, மருத்துவப் பட்டயப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டயப் படிப்புக்கு ரூ.5,000 உதவி தொகை. பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு, உடற் பயிற்சி கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.8000 உதவி தொகை, பொறியியல் பட்ட மேற்படிப்பு, மருத்துவ பட்ட மேற்படிப்பு, சட்ட மேற்படிப்பு, விவசாய மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி மேற் படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத் திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தை களுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண் டும். பிற பிரிவினர் குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வ மான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களை அணுகும் நிலையில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் மேற்கொள்ளப் படும்.
அயலகத் தமிழர்களுக்கான ஒளிப்பட அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முறை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு இவ்வாணையரக வலைதளத் தினை (https://nrtamils.tn.gov.in) பார்க்கலாம்.
அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரவுள்ள தமிழர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து அரசின் நலத் திட்டங்களை பெற்றிட தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
எப்படி உறுப்பினர் ஆவது?

அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், வாரியத்தில் உறுப்பினராகுதல் தொடர்பான சந் தேகங்களுக்கும் தீர்வுகாண இவ்வாணையரகத் தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மய் யத்தினை தொடர்பு கொள்ளலாம். கட்டண மில்லா உதவி எண் 18003093793 (இந்தியா விற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு), 8069009900 (Missed Call) கொடுக்க வேண்டும்.

புதன், 22 மார்ச், 2023

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக சேர தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 

சென்னை, ஆக. 11- நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கிற்கு, தமிழக சுற் றுலா, கலாச்சாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்படுகிறது. மார்கழி மற் றும் அரசு, தியாகராஜர் ஆராதனை விழாக்கள் உள்ளிட்ட விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இந்த கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளத்தில் பணி நியமனம் தரப்படு கிறது.


தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் 35 ஆயிரம் 385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் இவர்களின் குடும் பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் உள்ளன. விபத்து நிவா ரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நிதி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட் டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 58 வயதை கடந்தவு டன் அவர்களுக்கு மாத ஓய்வூதிய மாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.


கரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் பதிவு செய் துள்ள 24 ஆயிரத்து 736 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள் ளது. இரண்டாவது நிவாரண தொகையாக ரூ.1000 ஜூன் மாதம் 26ஆம் தேதி 24 ஆயிரத்து 656 பேருக்கு தரப்பட்டுள்ளது.


அரிதான இசை வாத்தியங்களான சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்றவற்றை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் இவர்க ளுக்காக தனி நல வாரியம் அமைக்க முடியாது. தெருக்கூத்து கலை நிகழ்ச் சிகளில் பங்கேற்கும் நாதஸ்வரம், தவில், கிளாரினெட், மிருதங்கம், தாள இசைக்கலைஞர்கள், தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை. அதனால், இவர்களுக்கு என்று தனி நல வாரி யம் அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு அரசு ஆணை வெளியீடு

 

சென்னைபிப்.25 தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

2021-_2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்செய்தித்துறை அமைச்சர்தமிழ்நாட்டில் முதன் முறையாகஉழைக்கும் பத்திரிகையா ளர்களை முன்களப் பணியாளர் களாக முதலமைச்சர்அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில்உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங் களையும் ஒருங்கிணைத்து செவ் வனே செயல்படுத்துவதோடுநல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாணை வெளியீடு

அமைச்சரின் அறிவிப்பிற் கிணங்கஉழைக்கும் பத்திரிகையா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செவ்வனே செயல்படுத் துவதோடுநலவாரிய உதவித் தொகை கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகை யாளர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நலவாரியத் திற்கு வரப்பெறும் விண்ணப்பங் களை பரிசீலனை செய்துபயனா ளிகளைத் தேர்வு செய்துநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகை யாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்துஅதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அரசு ஆணையிடுகிறது.

தலைவர்உறுப்பினர்கள்

செய்தித் துறை அமைச்சர் அதன் தலைவராக இருப்பார்நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா ளர்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணை யர்நில நிர்வாகத் துறை ஆணையர்செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் (அல்லதுஇந்த அதிகாரிகளால் நியமனம் செய் யப்படும் அலுவலர்ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல்சாரா உறுப்பினர்கள்

தினத்தந்தி குழுமத்தின் பா.சிவந்தி ஆதித்தன்தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன்தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர்புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம்.ரமேஷ்தி வீக் செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லெட்சுமி சுப்பிரமணியன் ஆகி யோர் அலுவல்சாரா உறுப்பினர் களாக செயல்படுவார்கள்.

1.12.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படிபத்திரிகை யாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன்பத்திரிகை யாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் இந்த குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.