100 நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
100 நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஏப்ரல், 2025

100 நாள் திட்ட நிலுவை தொகை ரூ.4 ஆயிரம் கோடியை விடுவிக்காத ஒன்றிய அரசு மீது வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

 

விடுதலை நாளேடு
தமிழ்நாடு

தஞ்சை ஏப்.18  100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத் தில் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை உடனே ஒன்றிய அரசு விடுவிக்க வேண் டும். இல்லா விட்டால், உச்ச, உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

100 நாள் வேலை

கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காக, கிராமங் களில் அனைத்து வகையான தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்துவதற்காக 100 நாள் வேலை உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தற்போது வரை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத் தின் கீழ் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு நாள்தோறும் ரூ.319 கூலியாக வழங்கப்படுகிறது. பணி நாட்களில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பணி செய்யும் பகுதியைப் ஒளிப்படம் எடுத்து, ஆட்சியர், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது அனுப்பி, வேலைக்கான பணியை உறுதி செய்து வருகின்றனர்.

வழக்கு தொடர முடிவு

இதனால், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் முழுமையாக நடைபெற்று வந்ததுடன், கிராமப் புற தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வந்தது. இந்நிலையில், 2024, நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்கள், முடிந்த பணிகளுக்கான தொகையைப் பெறாமல் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து, கணபதியக்ர ஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, பல மாதங்களாக கூலித் தொகையைப் பெற முடியாததால், தங்களுக்கு கூலித் தொகையை வழங்கக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஒன்றிய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடு விக்காவிட்டால், உச்ச, உயர் நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழைத் தொழிலாளர்கள்

இதுதொடர்பாக, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கூறியது: தமிழ்நாட்டில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் 1,02,000 மாற்றுத்திறனாளிகள் உட்பட 92 லட்சம் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு ஒன்றிய அரசு 2024 நவம்பர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் வரை 5 மாதங்களாக ரூ.4,034 கோடியை இதுவரை விடுவிக்காமல் இருப்பது எதேச்சாதிகாரமானது, வருத்தத் திற்குரியது, கண்டனத்திற்குரியது.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் 2005ன் படி, பணிகள் முடித்ததில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்படியாக தொழிலாளிகளுக்கு கூலித் தொகையை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 5 மாதங் களாக வழங்காமல் இருப்பது, தொழிலாளர்களை உதாசீனப் படுத்துவதற்கு சமமாகும்.

கால தாமதம்

வெயிலில் உழைத்தவர்களின் உழைப்பை சிறிது கூட கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசு, விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கால தாமதத்திற்குரிய வட்டி யுடன் சேர்த்து, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதில்லை.

எனவே, தமிழக அரசு. இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் சார்பில் உயர், உச்ச நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 17 மே, 2024

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு

 


சென்னை, மே 17 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் இந்த 2024-_2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொழி லாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

மேலும், நபர் ஒருவ ருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத் தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழ்நாட்டுக்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஒன் றிய அரசு ஒதுக்கியது.இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு எழு திய கடிதத்தில், ஒன்றிய அரசின் 75 சதவீதம் நிதி யான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1,229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 அய் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, அந்த நிதியை பயன் படுத்த ஒப்புதல் அளித் துள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ள வழிகாட்டுதல் களை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டத ற்கான சான்றிதழை உரிய விதிகள் படி ஒன் றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை ரூபாய் 1679 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 


சென்னை, மார்ச் 15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள பதிவு செய்யப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய மான திட்டங்களில் ஒன்றாகும். மேலும், ஊரக மக்களுக்கு வாழ் வாதார வாய்ப்பை வழங்குவதுடன், நீடித்த மற்றும் நிலையான ஊரக சொத்துக்களை உருவாக்கி, உள் ளூர் மக்களின் முனைப்பான பங் கேற்புடன் கிராமங்களை மேம் படுத்தும் ஒரே திட்டமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் அனைவரையும் உள்ள டக்கி செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 86 விழுக்காடு மகளிர், 29 விழுக்காடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மாற்றுத் திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு வழங்கு வதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ் கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அளவீடுகளில் தமிழ்நாடு எப்போதும் திட்ட செய லாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
இதுவரை, மூன்று தவணைகளில் 37 கோடி மனித சக்தி நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள் ளது. 06.03.2024 வரை தமிழ்நாடு 40.51 கோடி மனித சக்தி நாட்களை எட்டியுள்ளது. இதில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட் சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023-_2024 ஆம் ஆண்டில், 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய ஊதியமான ரூ.8,734.32 கோடி நிலுவையில், ரூ.7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் நவம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ.1,022.29 கோடியாக உள்ளது. இது தொடர்பாக தாம் 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு ஒன்றிய ஊரக வளர்ச் சித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதையடுத்து, ஒன்றிய அரசு 15.01.2024 மற்றும் 30.01.2024 ஆகிய நாட்களில் ரூ.1,388.91 கோடி ஊதி யத்தை விடுவித்தமைக்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.
மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்திலிருந்து திறன்சாரா தொழி லாளர்களுக்கான ஊதியம் தொழி லாளர்களுக்கு வழங்கப்படாததால், அதனுடன் பொறுப்புத் தொகையும் 1,678.83. கோடியாக சேர்ந்துள்ளது. இது டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, 05.01.2024 வரை திரட் டப்பட்ட மொத்த ஊதிய பொறுப் புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு விடு விக்க வேண்டும் இது தொடர்பாக ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை தாம் எதிர்பார்க்கிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.