ஒபிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒபிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2022

பொதுப் பிரிவிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை தரவேண்டும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


 புதுடில்லி,மே 3- கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரிவிலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப் பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது.

ஆனால், தேர்வில், பொதுப் பிரிவினரில் ஒருவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறவில்லை.  அதேசமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 4 பேர் தங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி யடைந்தனர்.

மதிப்பெண்கள் தளர்வு: இதில் அலோக் குமார் யாதவ் என்பவர் 39.87 சதவீதமும் (ஓபிசி), தினேஷ் குமார் என்பவர் 38.5 சதவீதமும் (ஓபிசி) பெற்றனர். இந்நிலையில், எழுத்துத் தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தகுதிபெறவில்லை என்பதால் பிஎஸ்என்எல் நிர்வாகம் பொதுப் பிரிவினருக்கு 30% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 23% ஆகவும் மதிப்பெண்கள் வரம்பை தளர்த்தியது. இந்த புதிய வழிமுறைகளின் படி, பொதுப்பிரிவு வகுப்பினரில் 5 பேர் பணியில்சேர தகுதி பெற்றனர். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து சந்தீப் சவுத்ரி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தனதுமனுவில் கூறும்போது, "விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காகமட்டும் குறைந்தபட்ச மதிப்பெண்களை மாற்றியமைத்தது செல்லாதது ஆகும்.

ஏற்கெனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 2 தேர்வர்கள் (அலோக் குமார் யாதவ் மற்றும்தினேஷ் குமார்) பொது முறைகளின் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில், தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி யுடையவராவர். அவர்கள், பொதுப் பிரிவில்தான் தேர்வாகி இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடத்தின் எண்ணிக்கை எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்றார்.

தீர்ப்பாயத்தை எதிர்த்து மனு

 இந்த மனுவை விசாரித்த நடுவர் தீர்ப்பாயம், ஏதேனும் வாய்ப்பிருந் தால், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு உடனடியாக சம வாய்ப்பை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிர்வாகம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 2 தேர்வர்கள் பொதுப் பிரிவில் தேர்வாக தகுதியுடையவர்கள். அலோக்குமார் யாதவ் மற்றும் தினேஷ் குமார் இருவரையும், பொதுப்பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள், எம்.ஆர். ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 1992இல் நடந்த ஒன்றிய அரசு தொடர்ந்து நீதிபதி இந்திரா சாஹ்னி விசாரித்த வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், பொதுப்பிரிவில் கடைசி மதிப்பெண் பெற்று தேர் வான நபரை விட, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர், பொதுப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் என்றும் தெரிவித்தது.

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

 

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, தமிழ்நாட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடு, பழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், குறிப்பாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும், EWS  எனப்படும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்” குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்து, ஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்- மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்) தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்க. ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திட, பழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்' கிளர்ந்து எழுக, எழுக, எழுகவே!

தேசிய அளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கம்

 

புதுடில்லி, மார்ச் 24- அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகளை அழைத்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல ‘சமூகநீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்திடும் முயற்சியில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்க கூட்டமைப் பின் முயற் சிக்கு பெரும் வெற்றி. 13 அமைப்பு களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு உருவானது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்ட மைப்பு எடுத்த முயற்சியின் பேரில், தேசிய / மாநில அளவில் செயல் படும் ஓபிசி சங்கங்களின் கூட்டம்,  புதுடில்லியில் (துணை சபா நாய கர் இணைப்பு அரங்கம், கான்ஸ்டி டியூசன் கிளப், புதுடில்லி) நடை பெற்றது   22 மார்ச் 2022. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு முடிவடைந்த கூட்டம் கிட்டத்தட்ட அய்ந்து மணி நேரம் நீடித்தது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கோரிக்கைகள் குறித்து தேசிய அளவிலான  சிக்கல் களை விவாதிக்கும் ஒரு மாரத்தான் அமர்வாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் செயல் தலைவர் யு.சின்னைய்யா தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அனைவரையும் வர வேற்று, கூட்டத்தின் இன்றைய அவசர, அவசிய தேவையை விரி வாக எடுத்துரைத்தார்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, ஒன்றிய அரசில் ஓபிசி பிரிவின ருக்கு தனி அமைச்சகம், கிரிமி லேயர் முறை நீக்கம், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு, நீதித்துறை, தனியார்துறை மற்றும் பதவி உயர் வில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை கள் முதன்மையாக முன்னெ டுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் வி.அனுமந்தராவ், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் ராஜேஷ் வர்மா, எம்.பி., உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோ வன், எம்.பி. மற்றும் சமூக வலைத் தளத்தில் பிரபலமாக உள்ள பேராசி ரியர் திலிப் மண்டல், வழக்குரைஞர் சாசங் ரத்னூ ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, ஆதரவு நல்கினர்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, பீகார், உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மா நிலங்களில் இருந்து கூட்டமைப் பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டில்லி, அய்தராபாத் பல்கலைக் கழகம், அசாம் பல்கலைக்கழகம் சார்ந்த மாணவர் அமைப்புகளின் தலைவர்கள்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் இதர பிற் படுத் தப்பட்டோர் பிரச்சினைகள் குறித்து கருத்தரங்கம், ஆர்ப்பாட் டம் நடத்துவது என்றும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் டில் லியில் மிகப் பிரமாண்டமான கூட் டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்றும் சமூக நீதிக் கான கூட்டு நடவடிக்கைக் குழு முடிவெடுத்துள்ளது.

அகில இந்திய அளவில் முதன் முறையாக இதர பிற்படுத்தப்பட் டோர் பணியாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் அனைத்து இதர பிற் படுத்தப்பட்டோர் நல சங்கங்களும் இணைந்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துள்ளதை அனை வரும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.