• Viduthalai
புதுடில்லி, மார்ச் 24- அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகளை அழைத்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல ‘சமூகநீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்திடும் முயற்சியில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்க கூட்டமைப் பின் முயற் சிக்கு பெரும் வெற்றி. 13 அமைப்பு களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு உருவானது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்ட மைப்பு எடுத்த முயற்சியின் பேரில், தேசிய / மாநில அளவில் செயல் படும் ஓபிசி சங்கங்களின் கூட்டம், புதுடில்லியில் (துணை சபா நாய கர் இணைப்பு அரங்கம், கான்ஸ்டி டியூசன் கிளப், புதுடில்லி) நடை பெற்றது 22 மார்ச் 2022. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு முடிவடைந்த கூட்டம் கிட்டத்தட்ட அய்ந்து மணி நேரம் நீடித்தது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கோரிக்கைகள் குறித்து தேசிய அளவிலான சிக்கல் களை விவாதிக்கும் ஒரு மாரத்தான் அமர்வாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் செயல் தலைவர் யு.சின்னைய்யா தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அனைவரையும் வர வேற்று, கூட்டத்தின் இன்றைய அவசர, அவசிய தேவையை விரி வாக எடுத்துரைத்தார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, ஒன்றிய அரசில் ஓபிசி பிரிவின ருக்கு தனி அமைச்சகம், கிரிமி லேயர் முறை நீக்கம், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு, நீதித்துறை, தனியார்துறை மற்றும் பதவி உயர் வில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை கள் முதன்மையாக முன்னெ டுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.
கூட்டமைப்பின் தலைவர் வி.அனுமந்தராவ், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் ராஜேஷ் வர்மா, எம்.பி., உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோ வன், எம்.பி. மற்றும் சமூக வலைத் தளத்தில் பிரபலமாக உள்ள பேராசி ரியர் திலிப் மண்டல், வழக்குரைஞர் சாசங் ரத்னூ ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, ஆதரவு நல்கினர்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, பீகார், உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மா நிலங்களில் இருந்து கூட்டமைப் பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டில்லி, அய்தராபாத் பல்கலைக் கழகம், அசாம் பல்கலைக்கழகம் சார்ந்த மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் இதர பிற் படுத் தப்பட்டோர் பிரச்சினைகள் குறித்து கருத்தரங்கம், ஆர்ப்பாட் டம் நடத்துவது என்றும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் டில் லியில் மிகப் பிரமாண்டமான கூட் டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்றும் சமூக நீதிக் கான கூட்டு நடவடிக்கைக் குழு முடிவெடுத்துள்ளது.
அகில இந்திய அளவில் முதன் முறையாக இதர பிற்படுத்தப்பட் டோர் பணியாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் அனைத்து இதர பிற் படுத்தப்பட்டோர் நல சங்கங்களும் இணைந்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துள்ளதை அனை வரும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக