நலவாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நலவாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மார்ச், 2023

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைப்பு தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சென்னை, டிச. 20- புலம்பெயர் தமி ழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியம னம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக் கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழி யாம் தமிழ்மொழியைத் தழைத் தோங்கச் செய்திட வெளிநாடு களில் தமிழ்க் கல்வி, கலை, பண் பாடு மற்றும் கருத்துப் பரிமாற் றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்க ளுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப் பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் அரசால் இயற்றப்பட்டது. அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப் பட்டு, அவர்களுக்கென நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற் பட்டபோது, முந்தைய ஆட்சியா ளர்கள் அதனை நடைமுறைப் படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல் படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர் கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்க ளாக கொண்டு புலம்பெயர் தமி ழர் நல வாரியத்தினை அமைத் திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி

அதன்படி, புலம்பெயர் தமி ழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனா பதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், அய்க்கிய அரபு அமீரகத் தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள் நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபால கிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆகி யோர் அரசு சாரா உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்ந்த உறுப்பினர் களாக - பொதுத் துறைச் செயலா ளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் அல்லது அவரால் நிய மனம் செய்யப்படுபவர், வெளி நாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர் / அரசு இணைச் செயலாளர் / அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயல ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரியத்தில் நியமிக்கப் படும் தலைவர் மற்றும் உறுப்பி னர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இவ் வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக் கான நலத் திட்டங்களை செம் மையாகச் செயல்படுத்திட ஏது வாக, 5 கோடி ரூபாய் “வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி” என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட் டுமல்லாமல், மூலதனச் செல வினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செல வினமாக, நலத்திட்டங்கள் மற் றும் நிர்வாக செலவினங்களுக் காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுவாழ் தமிழர்களின் விவரங் களைச் சேகரிப்பது அவசியமாத லால், அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற் படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத் துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப் படும். வெளிநாட்டிற்குச் செல் லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாது காக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந் தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் இத்தகைய முனைப்பான நடவடிக்கை, வெளி நாடுகளில் தேமதுரத் தமிழோசை பரவுவதற்கும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்னல்களைப் போக்குவதற் கும், அவர்களுக்கான நலத் திட் டங்களைச் செம்மையுறச் செயல் படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சனி, 21 மே, 2022

நல வாரியத்தில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை,ஆக.27, தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


நல வாரியங்களில் பதிவு செய்யப்ப டாத பிற தொழிலாளர்களுக்கும் நிவா ரண உதவி வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகளை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் நல வாரியங் கள் மூலம் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், ‘நல வாரியங் களில் உறுப்பினர்களாக உள்ள வர்களுக்கு மட்டுமே அரசு வழங்கிய நிதி கிடைத்துள்ளது. நல வாரியங்களில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்க ளுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தகுதியான தொழிலாளர் களை நல வாரியங்களில் உறுப்பினர்க ளாக சேர்க்கும் நடைமுறையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு சில நல வாரியங்களில்தான் உறுப்பினர்கள் மட்டுமே முறையாக தங்களது பங்களிப்பு தொகையை வழங் கியுள்ளனர். எனவே, நிவாரண உதவியை எதிர்பார்க்கும் உறுப்பினர்கள், நல வாரி யத்துக்கு வழங்க வேண்டிய பங்களிப்பை முறையாக செலுத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்

 

    October 30, 2020 • Viduthalai

திருவள்ளூர், அக். 30- தமிழக அரசின் தொழிலாளர் துறை யில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.


நலவாரியங்களில் உறுப் பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய் வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் மூல மாக ஏற்படும் உயிரிழப்புக்கு உதவித் தொகை போன்றவை தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. 


திருவள்ளுர் மாவட்டத் தில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட கட்டுமானம், உடலுழைப்பு, அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை, முடிதிருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி, விசைத்தறி, மண்பாண்டம், தெரு வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள் தொடர்பு டைய நலவாரியங்களில் புதி தாக பதிவு செய்து கொள் ளவும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க <https:labour.tn.gov.in>  என்ற இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர் கள்; இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வயது சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான் றிதழ், கிராம நிர்வாக அலு வலர் சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நலவாரியத்தில் உறுப் பினர்களாக தங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத் தல் வேண்டும். நலவாரிய பதி வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் சமர்ப்பித்த பிறகு தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் பதிவு எண் விவரம் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.  அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இந்த வாய்ப்பினை அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் பயன் படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ் வரி தெரிவித்துள்ளார்.