• Viduthalai
சென்னை, செப்.28 குழந்தை தொழி லாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.
சென்னை டி.எம்.எஸ்.வளா கத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடந்த தொழிலாளர் நலத் துறை தொடர் பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச் சர் சி.வி.கணேசன் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழி லாளர் களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறை யானது சிறப்பான முறை யில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலு வலர் களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் அனைவரும் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும். தொழி லாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழு மையாக தீர்வு காணும் நோக்கத்தி லும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.தொழிற் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலா ளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலா ளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தி அதிகளவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன் மூலம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழி லாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக