வெள்ளி, 31 மே, 2019

வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி அரசாணை வெளியீடு

சென்னை, மே 5 வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31வரை 8 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கும் இந்த 8 சதவீத வட்டியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதிவரையிலான காலக்கட்டத்திற்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம்  வட்டி வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

-   விடுதலை நாளேடு, 5.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக