வெள்ளி, 31 மே, 2019

ரயில்வே தொழில்பழகுநர் பணிகளில்... இனி தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை

மன்னார்குடி, மே 26  தமிழ கத்தில் உள்ள ரயில்வே தொழிற் சாலைகள் தொழில் பழகுநர் பணிகள் நியமனங் களில் ரயில் வே விதிகளை இதுவரை பின் பற்றாமல் இருந்து வந்தன. இதனால் வட இந்தியர்கள் பணிகளில் சேர துவங்கினர். இதனால் தமிழக இளைஞர் களின் வேலை வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தது. அண் மையில் திருச்சி பொன் மலை, கோவை போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை தொழில் பழகுநர் தேர்வில் ஏற்கனவே 1984ஆம் ஆண்டு வாரிய உத்தரவின்படி வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்யப்படாத தால் தான் வட மாநிலத்தவர்கள் அதிக சேர்க்கைக்கு மூல காரண மாக அமைந்து விட்டது.

இந்த சூழலில் ரயில்வே விதிகள் அந்தந்த மாநிலங் களை சேர்ந்தவர்களையே தொழில் பழகுநர் பணி களுக்கு தேர்வு செய்ய வேண் டும் என விதி இருப்பதை தொழிற்சங்க தலை வர்கள் சுட்டிக்காட்டினர். இதனை யடுத்து சென்னை பெரம்பூர் அய்சிஎப் தொழிற் சாலை கடந்த 20ஆம் தேதி 990 தொழில்பழகுநர் பணியிடங் களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் 1984ஆம் ஆண்டு ரயில்வே  வாரிய உத்தரவின் படி அந்த விதியை பின்பற்றி தமிழக வேலைவாய்ப்பு மய்யத்தில் பதிவு செய்த வர்கள்  மட்டுமே தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணை பொதுச்செயலாளர் மனோ கரன் கூறியதாவது:  தொழில் பழகுநர் என அழைக்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க் கை போத்தனூர் மற்றும் திருச்சி பொன்மலை ரயில் வே தொழிற் சாலை களில் 2 மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது. பொன் மலை மய்யத்தில் 1600 வட மாநிலத் தவர்கள், 150 தமிழ கத்தினர் சேர்த்து 1750 பேர், போத் தனூர்  மய்யத்தில் 1187 வட மாநிலத்தவர்கள், 126 தமிழ கத்தினர், 622 மற்ற தென் மாநிலத்தவர்கள் சேர்த்து 1935 பேர் தேர்வு செய்யப் பட்டார்கள். இந்த தேர்வு முறையில் முறை கேடுகள் நடந்துள்ளது.

தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்துள்ளது. இந்த தொழில் பழகுநர்கள் தேர்வு முறையில் ரயில்வே வாரிய உத்தரவுகள் பின் பற்றப் படவில்லை. பொன் மலை மற்றும் போத்தனூர் ரயில்வே தொழிற்சாலைகள் வசிப்பிட தகுதியை வரை யறை செய்ய தவறி விட்டன. இந்த வாய்ப்பை பயன் படுத்தி மற்ற மாநிலத்தவர்கள் விண்ணப்பித்து தேர்வாகி உள்ளனர் என்பதே இதற் கான காரணம் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனி யன் சுட்டிக் காட்டியது.

இந்நிலையில் கடந்த மே 20ஆம் தேதி பெரம்பூர் அய்சிஎப் தொழிற்சாலை கார்பென்டர் 80, எலக்ட்ரீசியன் 200, பிட்டர் 260, மெசினிஸ்ட் 80, பெயின்டர் 80, வெல்டர் 290 என மொத்தம் 990 தொழில் பழகுநர் நிய மனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  அதில் தமிழக வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும் என்ற நிபந்த னையை இணைத்து விட் டது. இத னால் 990 தொழில் பழகு நர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கி றார்கள்.  இவ்வாறு அவர் கூறி னார்.

-  விடுதலை நாளேடு, 26.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக