வெள்ளி, 31 மே, 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருச்சி, மே 15- புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமத மின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வேண்டும் என வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஸ்டேட் வங்கியின் (SBSU) முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் (AFCCOM) கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் சாரதாவில் 12.5.2019 அன்று நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தீர்மானங் களை விளக்கிப் பொதுச் செய லாளர் வி.ஆர்.உதயசங்கர் உரை நிகழ்த்தினார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- இந்தியன் ஸ்டேட் வங்கியின் பென்ஷன் கார்ப்பசில் (Pension Corpus) 69364 கோடி யும், பொதுத்துறை வங்கிகளின் பென்ஷன் கார்ப்பசில் 1,78,000 கோடியும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வங்கி ஓய்வூதியர் களுக்கு பின் தேதியிட்டு ஓய்வூ தியத்தை உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியன் ஸ்டேட் வங்கி உள் ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியிடங்களில்  நிரந்தரப் பணியாளர் களைப் பணியில் அமர்த்தி, தொழிலாளர் நலச்சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்து வதை இந்திய வங்கிகள் நிர்வாக மும், மத்திய அரசும் உறுதிப் படுத்த வேண்டுமென வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமதமின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை நிர்வாக குழு உறுப்பினர் எம்.சந்திரா கில்பர்ட் வரவேற்றார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.கண்ணன், உதவிப்பொரு ளாளர் பி.துரைராஜ், உதவிச்செய லாளர் அடையாறு பாபு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருச்சி என்.சுப்பிரமணியன், மதுரை எம்.முருகையா, திருவண் ணாமலை கே.பி.சாரதி, திருவாரூர் என்.பாண்டுரங்கன் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

-  விடுதலை நாளேடு, 15.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக