கேங்டாக், மே 29 அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.
சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத பிஎஸ் கோகலேவை, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக தேர்வு செய்தனர்.
இதையடுத்து பல்ஜோர் விளையாட்டு மைதானத்தில் திங்களன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், கோகலே மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதி களில் 17 இடங்களைக் கைப் பற்றி எஸ்.கே.எம். கட்சி வெற்றி பெற்றது.
சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் வாரத்தில் 6 நாள்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5ஆக குறைத்து முதலமைச்சர் பிஎஸ் கோலே தற்போது உத்தரவிட்டுள்ளார்.
அவர் தேர்தல் வாக்குறுதி யில் முன்பு கூறியது போலவே தற்போது செயல்பட்டுள் ளார்.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் உடல் நலத்தோடு குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், குழந்தை களை நன்கு கவனிக்கவும் நேரம் கிடைக்கும் என்று கோலே தெரிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 29.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக