வெள்ளி, 31 மே, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 22  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப் படையில், தமிழ்நாடு அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.-1-.2019 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். கூடுதல் ஊதிய மாக 3 சதவீதம் அளிக்கப்பட்டு, தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் களுக்கும், உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு /அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்/உடற்பயிற்சி இயக்குநர்கள்/ நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர், ஆசிரியர்க்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர் வினால் ரூ.450 முதல் ரூ.6,500 வரை ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு ரூ.225 முதல் ரூ.3,000 வரையும் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யர்கள் பயனடைவார்கள் என்றார்..

- விடுதலை நாளேடு 22. 5. 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக