செவ்வாய், 5 மார்ச், 2019

பி.எப். பிடித்தம்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு

புதுடில்லி, மார்ச் 3 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு

(பி.எப்.,) இனி அடிப்படை சம்பளத்துடன் சிறப்பு படிகளும் சேர்த்து கணக்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பி.எப்., சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். இதே சதவீத தொகையை நிறுவனங்களும் அளிக்கும். சில நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, சிறப்பு படிகளை அதிகரித்து மோசடி செய்தன.

இதன் மூலம் குறைவான தொகையை பி.எப்., பங்கிற்கு செலுத்தி வந்தன.இவற்றை தடுக்கும் விதமாக அடிப்படை சம்பளத்துடன் அனைத்து சிறப்பு படிகளையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதாரணமாக ஒருவர் அடிப்படை சம்பளம் ரூ. 10,000, சிறப்பு படிகள் ரூ. 5,000 சேர்த்து ரூ. 15,000 சம்பளம் பெற்றால், 10,000 ரூபாய்க்கு மட்டும் முன்பு பி.எப் பிடித்தம் செய்யப்படும். இனி சிறப்பு படிகள் சேர்த்து 15,000 ரூபாய்க்கு பி.எப்., பிடிக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் கையில் வாங்கும் சம்பளம் குறையும்.
- விடுதலை நாளேடு, 3.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக