செவ்வாய், 5 மார்ச், 2019

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம்

வாழ்வுரிமையை பறித்த மோடி

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம்

சென்னை, பிப்.28- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் சிஅய்டியு-வின் மாநிலக்குழுக் கூட்டம் சம்மேளனத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்றது.

சிஅய்டியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஏ.எல் மனோகரன், வட சென்னை மாவட்ட ஆட்டோ சங்கச் செயலாளர் வி.ஜெயகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சம்மேளனக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் எம்.சிவாஜி கூறியதாவது:-

மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்கள் மீது பல்வேறு தாக்குதலை தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளது.

இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.3054 இருந்தது தற்போது ரூ. 10500 ஆக உயர்த்தி கொள் ளையடிக்கப் படுகிறது.

மறுபுறம், மோட்டார் தொழிலையே கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிறைவேற்ற துடித்தது.

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்வுரி மையை பறித்த மோடி அரசாங்கத்தை அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியின் கடமையாகும். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் பலத்தை அதி கரிக்கும் வகையில் கூட்டணியை வெற்றி பெறவைக்க கடுமையாக உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தருமபுரியில் ஆட்டோ சங்கத் தலைவர் ராஜகோபாலை தாக்கிய சமூக விரோதிகள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சிஅய்டியு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக