வெள்ளி, 8 மார்ச், 2019

கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக - கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (7.3.2019) சென்னை பெரம்பூர் அய்.சி.எப். பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக, உயர் ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய், தமிழகத்தில், ரயில்வே உள்ளிட்ட அரசு - பொதுத்துறை பணி நியமனங்களில், தமிழ்நாட்டவர்க்கு முன்னுரிமை கொடு, பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் அமைத்திடு போன்ற கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, துணைத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந் திரளானோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 7.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக