தொழிலாளர்களுக்கான பணிக்கொடை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மேலும், பணியின்போது இறக்கும் பிஎஃப் சந்தாதாரர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாத அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
மாதத்துக்கு ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் உள்ளோருக்கு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் மாதம் குறைந்தபட்சம் ரூ.55-லிருந்து ரூ.100 செலுத்தும் சந்தாதாரர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
Newstm Desk | Last Modified : 01 Feb, 2019 12:33 pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக