1994 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் துவங்கப்பட்ட யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்கம் 24 ஆம் ஆண்டின் துவக்க நாள் விழா சென்னை பிராட்வே சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியின் முதல் தளத்தில் சிற்றுண்டி அரங்கில் 7.1.2017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து சென்னை மண்டல உதவி பொது மேலாளர் ஜி.கே.சுதாகர் ராவ் வாழ்த்துரை நிகழ்த்தினார். யூனியன் வங்கியின் சென்னை மண்டல துணைப்பொது மேலாளர் எஸ்.கே.சிறீவத்சவா, உதவிப் பொதுமேலாளர் மணிவண்ணன் ஆகியோரும் நல சங்கத்தின் சீரிய பணிகளைப்பற்றி உரையாற்றினர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞா.மலர்க்கொடி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப்பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
-விடுதலை,9.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக