இந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற
மாநிலங்கள் பட்டியல் வெளியீடு
புதுடில்லி செப்.22 அமெரிக்காவின் சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றும் நாதன் அசோசியேட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலம் எது? என ஆய்வொன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பெண்கள் வேலை செய்வதற்கு ஏற்ற மாநிலங்களில் சிக்கிம் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பட்டியலில் 2-ஆவது இடத்தை தெலுங்கானா மாநிலமும், 3-ஆவது இடத்தை புதுச்சேரி மாநிலமும் பிடித்துள்ளன. தமிழ்நாடு 9-ஆவது இடத்தையும், தலைநகர் டில்லி கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. பெண்கள் வேலை செய்வதற்கு நேரக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு போன்ற காரணங்களால் சிக்கிம் மாநிலம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
-விடுதலை,22.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக