வியாழன், 26 ஜனவரி, 2017

விவசாயிகளின் நலனுக்கு ஒடிசாவில் புதிய சட்டம்



புவனேசுவரம், ஜூன் 19 ஒடிஸாவில் குத்தகை விவசாயிகளின் நலன் காக்க வரும் அக்டோபர் மாதம் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மாநில வருவாய்த் துறை விஜயசிறீ ராவுத்ராய் தெரிவித்தார்.
இதுதொடர்பான குத்தகை விவசாயிகள் மசோதா ஒடிசா சட்டப் பேரவை மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தச் சட்டத்துக்குப் பெயர் வைப்பது மற்றும் சரத்துகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இதுவரை 20 மாவட்டங்களில் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிலமற்ற சுமார் ஒரு லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு நிலம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது வரை இத்திட்டத்தின் கீழ் 52 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன என்று ராவுத்ராய் குறிப்பிட்டார்.
-விடுதலை, 19.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக