மதுரை, டிச.13 தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ராஜமுத்து கூறியதாவது:
சம்பள பட்டுவாடாச் சட்டம் 1936 பிரிவு (6)ன் கீழ், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் இதுவரை வங்கி கணக்குகளை துவக்காத நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வங்கியுடன் இணைந்து கணக்குகள் தொடங்க வேண்டும். சம்பளத்தை காசோலை அல்லது இ.சி.எஸ்.,(எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சர்வீஸ்) மூலம் வங்கிகள் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரொக்கமற்ற பரிவர்த்தனையில் இணைய வேண்டும், என்றார்.
-விடுதலை,13.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக