வியாழன், 12 ஜனவரி, 2017

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர்  அறிவிப்பு





சென்னை, ஜன.12 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூயிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை யொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்கப்படுகிறது. இதன்படி, 2015--2016ஆம் ஆண்டுக்கு சி மற்றும் டி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்குட்பட்டு 30 நாள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

ஏ மற்றும் பி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், நிதியாண் டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல் லது அதற்குமேல் பணி யாற்றியவர்கள், சில்லறை செலவினத்தில் மாத அடிப் படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு, பகுதி நேரப் பணியாளர் கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணி யாற்றும் அங்கன் வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணியாற் றும் பஞ்சாயத்து உதவியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங் கப்படும்.

மேலும், ஒப்பந்த பணியா ளர்கள், தற்காலிக உதவி யாளர்கள், தினக்கூலி அடிப் படையில் பணியாற்றுவோர், ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தர பணியாளர்களாக ஆனவர்கள் ஆகியோருக்கும் ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள்,

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகிய வற்றில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல் விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகிய வற்றின் கீழ் சம்பளம் பெறுபவர்கள், அகில இந்திய பணி விதிமுறைகள்கீழ் சம்பளம் பெறுப வர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு...

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூ தியம் பெறுபவர்கள், தலையாரி, கர்ண மாக இருந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இத னால் அரசுக்கு ரூ.325 கோடியே 20 லட்சம் செலவாகும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

-விடுதலை,12.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக