செவ்வாய், 10 ஜனவரி, 2017

சமையற் கலை தொழிலாளர் தனி நல வாரியம் செயல் வடிவம் பெற அரசுக்கு வேண்டுகோள்


தமிழர் தலைவரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை



சென்னை, ஜன. 10- 2011ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சமையல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட் டது. ஆனால் தற்போது தமிழக அரசு அதற்கு செயல் வடிவம் கொடுக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சமையற் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் எம்.ஜி-.ராஜாமணி, பொதுச் செயலாளர் மு.இனியவன், மற்றும் நிர்வாகிகள் இரா.ஆனந்தன், டி.அரவிந்தன், முரளி, ஜி.ரமேஷ் மற்றும் வட சென்னை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்

சு. குமாரதேவன் ஆகியோர் நேற்று (9.1.2017) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான சமையற் கலைத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வில் வளம் பெறவும் அவர்கள் குடும்பம் நிம்மதி பெறவும் சமையல் தொழிலாளர்களின் குழந்தைக ளுக்கு நல்ல கல்வி கிடைக் கவும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ்நாடு சமையற் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உங்கள் உதவியும் நல் ஆதரவும் வேண்டுகிறது.

கடந்த (தி.மு.க. ஆட்சியில்) 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி சமையல் தொழி லாளர்களுக்கு தனி நல வாரி யம் அமைக்கப்படும் என அப்போதைய தமிழக முதல் வர் மரியாதைக்குரிய கலைஞர் அறிவித்தார். அதன்படி சமை யல் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட் டது. அதற்கான அலுவலர் களை நியமிக்கும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சமையல் தொழிலாளர்கள் தனி நல வாரியமும் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பல முறை நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நலவாரியம் செயல்வடிவம் பெறாமலும் நலவாரியத்திற் கான அலுவலர்களை நியமிக் காமலும் தற்போதைய அரசு காலம் தாழ்த்துகிறது.

சமையல் தொழிலாளர் தனி நல வாரியம் செயல் வடிவம் பெற்றால், நலிந்த எங்கள் சமையல் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே பதவிகளை நோக்கிச் செல்லாமல் சமூக அக்கறை யுடன் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் உங்களை போன்றோர் களின் குரலுக்கு வலிமையை யும் வீரியமும் அதிகம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, எங்கள் சமையல் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என பணி வன்போடு வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

-விடுதலை,10.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக