திங்கள், 9 ஜனவரி, 2017

ஏப்ரல் 1 முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் 

சென்னை, ஜன.9 தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) பணியாற்றுவதற்கு ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் மக்கள் தங்களிடம் ஏற்கெனவே உள்ள ஆதார் அடையாள அட்டைகளைப் பதிவு செய்ய வேண்டும் என் றும் ஆதார் அட்டை இல்லாத வர்கள் வரும் மார்ச் 31ஆ-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் ஆதார் அடை யாள அட்டைகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள், அதை பெறும்வரை குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாயிகள் வங்கி சேமிப்பு புத்தகம் ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை அடையாள சான் றாக காண்பிக்கலாம். மேலும் ஆதார் அடையாள அட்டைக் காக விண்ணப்பித்துள்ளவர்கள் அந்த விண்ணப்பத்தின் நகலை யும் அடையாள சான்றாக சமர்ப் பிக்க வேண்டும்.

-விடுதலை,9.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக