டில்லி,ஏப்.3, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு உரிய ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000யை உச்சவரம்பாக கொண்டு அதன் அடிப்படையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது தொடர்பான வழக்கில் வெறும் ரூ. 15,000யை அடிப்படை ஊதியமாக கருதாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து EPFO தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, இனி வரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.
அதன்படி இந்த உத்தரவிற்கு முன்பு ஒரு தனியார் நிறுவன ஊழியர் 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி சம்பளமாக ரூ.50,000 பெற்று ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.5,180 பென்சன் கிடைக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்க வழி பிறந்துள்ளது. அதே போல ஒரு நபர் தன்னுடைய கடைசி சம்பளமாக ரூ.1,00,000 பெற்று இருந்து ரூ.33 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
- விடுதலை நாளேடு, 3.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக