சென்னை, செப். 15- இந்திய யமஹா மோட்டார்(IYM) நிறுவனம் தனது உள்ளக தொழிற்சங்கமான ‘இந்திய யமஹா மோட்டார் தொழி லாளர் சங்கத்துடன்’ நீண்ட கால ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது.
யமஹாவில் உள்ள ஒவ் வொரு தொழிலாளாரும் ஆரோக்கியமான பணிச் சூழலை ஏற்படுத்துவதற்காக IYM
நிர்வாகம் மற்றும் உள் ளக தொழிற்சங்கம் இரண் டினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை உரு வாக்குவதற்கும், ஒரு நல்லு றவைப் பேணுவதற்கும், ஒரு கூட்டு அணுகுமுறையைப் பின் பற்றுவதற்கும் தொடர்ச்சி யான முயற்சிகளின் விளை வாக இந்த ஒப்பந்தம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

“இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தங்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய தற்காக மாநில அரசு, தொழி லாளர் துறை மற்றும் எங்கள் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது நிறுவனத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும் மற்றும் எங்கள் தொழி லாளர்களின் நம்பிக்கைக் கான ஒரு பெரிய ஊக்குவிப் பாகும்.
யமஹா எப்போதுமே தனது பணியாளர்களுடனான உறவை மதிப்பிடுவதோடு, அவர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய் துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறுவனத்திற்குள் ஒரு ஆரோக்கியமான பணிபுரி யும் சூழலை உருவாக்குவதற் கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்க ளின் தலைவரான மோட்டோ ஃபூமிஷிதாரா தெரிவித்து உள்ளார்.
- விடுதலை நாளேடு, 15.9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக