புதன், 27 மே, 2015

இ.பி.எப்., பணம் இனி 20 நாளில் கிடைக்கும்


  1. No.37
    Royapetteh High Road, Azad Nagar, Royapettah, Chennai, Tamil Nadu
    044 2813 2700
    r 40a t n h b office, Dhanlaxmi Bank ATM - Mogappair Branch, Valaiyapathi Rd, Mugappair East, Jayalalitha Nagar, Mogappair
    Chennai, Tamil Nadu
    044 2635 7053
    Map results for epf chennai
புதுடில்லி, மே 17- வருங்கால வைப்பு நிதியான- இ.பி.எப்.,பில் இருந்து, பணம் எடுக்க விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு, 20 நாள்களில் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் ஜாலான் தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதியில், சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்கள், தங்களின் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விண்ணப்பித்தால், இதுவரை, 30 நாள்களில் பணம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல், 20 நாள்களில், அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் கே.கே.ஜாலான் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் நிலையான வருமானத்தை, பங்கு வர்த்தகத்தில், மாற்றத்தக்க வைப்பு நிதியாக முதலீடு செய்ய, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.

இந்த ஆண்டு, 6,000 முதல் 7,500 கோடி ரூபாய், மாற்றத்தக்க வைப்பு நிதியாக முதலீடு செய்யப்படும். அத்துடன், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு, இனி, 20 நாள்களில் பணம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக