வெள்ளி, 5 ஜூன், 2015

பி.எப் பண பட்டுவாடாவுக்கு புதிய சட்டப் பிரிவு தொடக்கம்: மண்டல ஆணையர் தகவல்



சென்னை, ஜூன் 4_ பி.எப் சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய சட்டப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளதாக  மண்டல ஆணையர் தெரிவித் துள்ளார். சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டிணீ.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய நிதி சட்டம் 2015இல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலுள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு  192எ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது 30 ஆயிரம் மற்றும்  அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டு வாடா செய்யப்படும் போது வருமான வரி கீழ்கண்ட விகிதத்தில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம்  செய்யப்படும். அதன்படி, தொழிலாளி தனது வரு மான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித் திருந்தால் மூலத்தொகையிலிருந்து வருமான வரி  பிடித்தமானது 10 சதவிகிதமாக இருக்கும். அவர், படிவம் எண் 15ஜி, 15எச்-அய் சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து  பிடித்தம் செய்யப்படமாட்டாது.
அதேபோல், தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15ஜி, 15எச்அய்ஐ சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவிகித  அளவிலான (34.608) வருமான வரியானது மூலத்தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும். சட்டமாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால  வைப்புநிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப் கணக்கு முடிப்பு படிவம் எண் 19அய் சமர்ப்பிக்கும் போது, பணி முடிப்பு பற்றியதான சரியான விவரம்  மற்றும் வருமானவரி நிரந்தரகணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
படிவம் எண் 15ஜி, 15எச்அய் பி.எப் கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எப்  அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விடுதலை,4.6.15
                            
                                    இத்திட்டத்தை முறியடிக்கவேண்டும்

      இது வரை தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படும் முறை இல்லாமல் இருந்தது. ''5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது 30 ஆயிரம் மற்றும்  அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டு வாடா செய்யப்படும் போது வருமான வரி கீழ்கண்ட விகிதத்தில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம்  செய்யப்படும்.''. என்கிற பிஜேபி அரசின் திட்டமானது தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திட்டமாகும். தொடர்ந்து பிஜேபி அரசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலையே செய்துகொண்டுவருகிறது. அனைவரும் ஒன்று கூடி இத்திட்டத்தை முறியடிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக