ஞாயிறு, 21 ஜூன், 2015

துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நிறைவேற்றவேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு


துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுப் பணிகளை விரைவாக 
நிறைவேற்றவேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 19_ துப்புரவுத் தொழிலாளர் களுக்கான சட்ட ரீதியான மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படுவது குறித்து உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனி தர்களை ஈடுபடுத்துவதை தடை செய்வது மற்றும் அவர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை நிறை வேற்று வது தொடர்பாக 2013 ஆ-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்பற்றி முழுமையான கணக் கெடுப்பு நடத்துவது,
அந்தத் தொழிலாளர் களுக்கு மாற்றுப் பணி உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத் துவது, கழிவுகளை அகற் றும் பணியின்போது உயி ரிழந்த தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்குவது, இந்தப் பணிகளை செயல் படுத்துவதற்கான மாவட்ட, மாநில அளவிலான குழுக் களை அமைப்பது உள் ளிட்ட பல அம்சங்கள் பற்றி இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக் குநரான சமூக ஆர்வலர் ஏ.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய் தார். 2013- ஆம் ஆண்டின் சட்டத்தில் கூறப்பட் டுள்ள அம்சங் களை உடனடியாக அமல் படுத்து மாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அவர் தனது மனு வில் கோரியிருந்தார்.
மேலும், 1993 ஆ-ம் ஆண்டிலிருந்து பாதாள சாக்கடை கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் அடைப்புகளை அகற்றுவ தற்காக இறங்கியபோது விஷ வாயு தாக்கி 150-_க் கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் உயிரிழந்துள்ள னர். ஆனால், தமிழக அரசு சுமார் 50 பேரை மட்டும் அடையாளம் கண்டுள்ளது.
அவர்களில் கூட 29 தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, உயிரிழந்த தொழி லாளர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் நிவா ரணம் வழங்கவும், துப் புரவுத் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர் களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செயல்படுத்த வும் உரிய நடவடிக்கை களை எடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் நாரா யணன் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அண்மையில் பிறப்பித்த உத்தர வில் கூறியுள்ள தாவது:
மனுதாரர் கூறியிருக் கும் குற்றச்சாட்டுகளை மனதில் கொண்டு 2013- ஆம் ஆண்டின் சட்டத் தில் கூறப்பட்டுள்ள அம் சங்களை செயல்படுத்தவும், இந்த விவகாரம் தொடர் பாக உச்சநீதிமன்றம் பிறப் பித்துள்ள உத்தரவுகளை அமல்படுத்தவும் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.
இந்த விவகாரத்தில் ஏற்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் மற்றும் சட்டத்தை செயல்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இந்த நீதிமன்றம் கண் காணிக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் தொடர்பாக மனுதாரரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி யுள்ளனர்.
-விடுதலை,19.6.15,பக்கம்-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக