ஞாயிறு, 21 ஜூன், 2015

பொருளாதார நெருக்கடியைக் கூறி ஊதியம் அளிக்க மறுக்கக்கூடாது:


பொருளாதார நெருக்கடியைக் கூறி ஊதியம் அளிக்க மறுக்கக்கூடாது:
ஊதியம் வழங்காத அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 20_ மதுரை கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் 10 பேருக்கு 30 மாதங்கள் ஊதியம் வழங் காத அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ. 25ஆயிரம் அப ராதம் விதித்து அண்மை யில் தீர்ப்பளித்தது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த வி. புருஷோத்தமன் உள் ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்திய நாதன் இவ்வாறு உத்தர விட்டார். மனு விவரம் வருமாறு:
மதுரை கூடல்நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் சேவை சங்கத் தில் 29 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறோம். 2008 ஜூலை முதல் 30 மாதங் கள் ஊதியம் வழங்க வில்லை. இதுதொடர்பான வழக்கில், எங்களது கோரிக் கையை வேளாண் துறை ஆணையர் மற்றும் வேளாண் பொறியியல் துறை பதி வாளர் பரிசீலிக்க 2011 இல் உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
அதன்பிறகும் அவர் எங்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து கடிதம் அனுப்பியுளார். அதில், கூட்டுறவு சங்கம் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். அதில் இருந்து வரும் லாபத்தில் தான் ஊதியம் வழங்க முடியும். ஊதியம் அளிக்க முடியவில்லை என்றால் சங்கத்தை கலைப்பதைத் தவிர வேறுவழியில்லை. கூடல்நகர் சங்கத்தில் பணிகள் நடக்கவில்லை. இயந்திரங்களை வாட கைக்கு விடவில்லை.
வரு கைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுள்ளனர். எனவே ஊதியம் பெறும் உரிமை கிடையாது. மேலும் தொழிலாளர் நீதிமன்றத்தில்தான் இப் பிரச்சினையை ஊழியர்கள் தீர்த்துக் கொள்ள வேண் டும் எனக் கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை ரத்து செய்து ஊதியம் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மேற்படி சங்கத்தில் ஊழியர்களாக உள்ளனர். அதை தனி அலுவலர் நடத்தியுள்ளார். மனுதாரர்கள் தினமும் பணி வருகைப் பதிவேட் டில் கையெழுத்திட்டு உள் ளனர். அதனால் ஊதியம் வழங்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு, தனி அலுவலருக்கு ரூ.25 ஆயி ரம் அபராதம் விதித்தார்.
மேலும் மனுதாரர்களுக்கு 30 மாத ஊதிய பாக்கியை ஒரு மாதத்தில் வழங்க தனி அலுவலருக்கு உத்தரவிட் டார். கூட்டுறவுச் சங் கத்தில் மனுதாரர்கள் நிரந்தரப் பணியாளர் களாக உள்ளனர். அவர்களுக்கு பணி வழங்க வேண்டியது அதிகாரியின் கடமையாகும். சங்கத்தை லாபகரமாக நடத்த அவர் முயற்சித்து இருக்க வேண் டும்.
ஒருவேளை அதை லாபகரமாக நடத்த முடி யாத நிலை ஏற்பட்டால் கூட குறிப்பிட்ட காலத் திற்குள் அதுகுறித்து ஊழி யர்களுக்கு தெரிவித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருக்க லாம்.
அந்த கடமையில் இருந்து தனி அலுவலர் தவறியுள்ளார். எனவே பொருளாதார நெருக்கடி யைக்கூறி ஊதியம் அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் இருப்பது பட்டினி போட்டு இறக்கச் செய்வது போன்றதாகும் என உத்தர வில் நீதிபதி குறிப்பிட்டுள் ளார்.
-விடுதலை,20.6.15 பக்கம்-5
             
             
விடுதலை,20.6.15 பக்கம்-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக